Friday, May 26, 2017

காலா - கரிகாலன் -முதல் பார்வை

காலா ,ரஜினி 164,ரஜினி,காலா  கரிகாலன் ,KAALA,RAJINI

இயக்குனர் சங்கரின் 2.0 எந்திரன் பட எதிர்பார்ப்பை  மிஞ்சி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்

காலா -கரிகாலன் இது தான் தலைவரின் அடுத்தபட தலைப்பு .தலைப்பு வெளியானதில் இருந்தே TRENDING இல் இருந்தது சமூக தளங்களில் ..

தனுஷின் தயாரிப்பு ரஞ்சித் இயக்கம் போன்றவற்றால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது

முதல் பார்வை 

காலன் என்றால் எமன் கரிகாலனின் சுருக்கம் எனவும் எடுத்து கொள்ளலாம் அந்த கண்களில் இருக்கும் நெருப்பு ஏதோ சொல்கிறது


காலா ,ரஜினி 164,ரஜினி,காலா  கரிகாலன் ,KAALA,RAJINI 164


லோக்கல் தாதா கெட்டப்பில் ஜீப்பில் அமர்ந்திருக்கும் இடம் மும்பையை கதைக்களமாக கொண்டதை தெரிய படுத்துகிறது .சேரி பகுதியில் வசிக்கும் தாதா கதை என்பது குறிக்கிறது இப்படம்காலா ,ரஜினி 164,ரஜினி,காலா  கரிகாலன் ,KAALA,RAJINI 164

பட டிசைன் ஒற்றுமை 

பட டிசைன் தளபதியை ஒத்திருப்பதை காண முடிகிறது
காலா ,ரஜினி 164,ரஜினி,காலா  கரிகாலன் ,KAALA,RAJIN
மேல்பட பகிர்வு  நன்றி RAJINIFANS.com


இந்த படத்திலும் வயதான கெட்டப்பில் தான் ரஜினி வருவது உறுதி படுத்தபட்டு விட்டது .இருப்பினும் கெத்தான ரஜினியை ரஞ்சித் தருவார் என எதிர்பார்ப்போம் !Tuesday, December 6, 2016

அம்மா -ஓர் கவிதாஞ்சலி !..
என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

தைரியத்தின் மறுபெயர்
தமிழகத்தின் திருஉயிர்
சமரசம் செய்து கொள்ளா
தலைவி நீ !


அரசியல் வெற்றிடம் இங்கே
அதை நிரப்புவார் எங்கே ?
எதிர்த்தோர் மனதிலும் 
ஓர் இடம் அனைவர் 
நெஞ்சிலும் நீங்கா இடம்!

என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

-முதல்வரின் மறைவிற்கு எனது கவிதாஞ்சலி


Wednesday, April 9, 2014

கோச்சடையான் -எங்கே ரஜினி ? ஓர் அலசல்


கோச்சடையான் தலைவரின் நடிப்பில் (?)அடுத்து  வர இருக்கும் படம் .ஆனால் அதில் ரஜினி நடித்திருக்கிறாரா என்பது அதன் trailor மற்றும் teaser பார்த்தாலே புரிந்திருக்கும் .மே 1 ரீலீஸ் என்பது புதிய தகவல்

என்ன தான் தொழில்நுட்ப புதுமை என்றாலும் எந்திரனை ஏற்று  கொள்ள முடிந்தது .அதில் ரஜினி தெரிந்தார் .ஆனால் இந்த படம் முழுவதும் ரஜினி நடிக்காதது போலவே இருக்கிறதே!முழுவதும் அணைத்து பாத்திரங்களும் animation வடிவிலயே அமைக்கப்பட்டு இருக்கிறது .

உதாரணத்திற்கு கீழே உள்ள படங்களை பாருங்கள் .அதில் எங்கே ரஜினி தெரிகிறார் .அனிமேஷன் ரஜினியின் அப்பட்டமாக தெரிகிறது

கோச்சடையான்,kochadaiyan,rajini,ரஜினி

கீழே உள்ள வீடியோவை பாருங்கள் .அதில் ரஜினியை அடையாளம் கண்டுபிடியுங்கள்மேலே கண்ட TRAILOR இல் ரஜினி ரசிகர்கள் ஆறுதல் பட்டு கொள்ள கூடிய ஒரே அம்சம் தலைவரின்  குரல் தான் அந்த கம்பீர குரலுக்காக வேணும் இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வருவார்கள் என நினைத்தாரோ ரஜினி மகள்

கே.எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் இருந்து விலகிய போதே பலருக்கு புரிந்திருக்கும் இப்படம் ரஜினி படம் அல்ல அனிமேசன் படம் என்று ..

ரஜினி ஒரு பாடல் பாடியதாக அதிகம் விளம்பரப்படுத்தபட்டது.ஆனால் அவர் பாட வில்லை .வசனம்  பேசி இருக்கிறார் .

மொத்தத்தில் இது ரஜினி படம் இல்லை என்பதே உண்மை ஆனாலும்அனிமேசன் படம் பார்க்கவும் ரஜினி ரசிகன் முயல்வான் .ஆனால் மற்ற ரசிகர்கள் பார்ப்பார்களா? என்பது கேள்விகுறி தான் .

Saturday, December 21, 2013

பிரியாணி -" லெக் "பீஸ் கொஞ்சம் அதிகம் தான்

கார்த்தியின் முந்தைய படங்களின் மீதான நம்பிக்கையால் இந்த படத்தை பார்க்க போவதில் அவ்வளவு நாட்டம் முதலில் வர வில்லை .இருப்பினும் வெங்கட் பிரபு ஏதாவது பண்ணுவார் என்ற நம்பிக்கையில் போய் மாட்டி கொண்ட படம் இது


Sunday, December 8, 2013

"புது யுகம்" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..

நீண்ட நாட்களாக draft இல் தூங்கி கொண்டு இருந்த ஒரு பதிவு இது .புது யுகம் ஆரம்பித்த புதிதில் எழுதிய பதிவு .தற்போது தான் முழுமைபடுத்த முடிந்தது .புதிய தலைமுறை தொலைக்காட்சியிலிருந்து புறப்பட்டு இருக்கும் இந்த தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளில் இருந்து எவ்விதம் வித்தியாசம் பெறுகிறது என் பார்வையில் இங்கே .ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன்னோட்டமாக சிலர் பேச்சு வழக்கில் பேசுவது புதிது

Sunday, October 20, 2013

சரவணன் மீனாட்சி முடிந்ததா ?.....ஓர் அலசல்

சரவணன் மீனாட்சி

விஜய் டிவி சீரியல்கள் இளைஞர்களையும் பார்க்க வைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை அதிலும் இளைஞர்களை திக்கு முக்காட வாய்த்த சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி என்பதை மறுப்பதற்கில்லை.அந்த சீரியல் சமீப காலமாய்  எப்பொழுது முடியும் என ஏங்க வைத்தது.

Wednesday, October 9, 2013

ICE COFFEE செய்வது எப்படி பட விளக்கத்துடன் ஓர் அலசல் ..

ICE COFFEE,COFFE ICE CREAM

FACEBOOK இல் உலவி கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது தான்  இந்த ICE COFFEE.செய்முறை விளக்கங்கள் இல்லாவிடினும் படத்தை வைத்தே முயற்சித்து பாப்போம் என தோன்றியது .இனி விளக்கம் கீழேதேவையானவை :

COFEE அதிகம் போட்டு விட்டால் கவலை வேண்டாம் அப்படியே அதை  ICE COFFEE ஆக மாற்றி விடலாம் .ICE BAR,FRIDGE,மற்றும் COFFEE இருந்தால் போதும்

எவ்வாறு செய்வது ?

COFFEE ICECREAM செய்வது எப்படி ?

COFFEE யை நன்றாக ஆற விடவும் .ஆறிய  பின்பு ICEBAR இல் ஊற்றவும் .சில மணி நேரங்களில் COFFEE  ஐஸ்  ரெடி .அதை அப்படியே சாப்பிட்டால் COFFEE ICECREAM  சாப்பிட்ட உணர்வு ஏற்படும் .காபி குடிக்கும் உணர்வு ஏற்படும் போது இதில் ஒரு கட்டியை  சாப்பிட்டாலே போதும்

 ICE COFFEE செய்வது எப்படி ?

பாலை கொதிக்க வைத்த  பின்னர் மிதமான சூட்டில் FRIDGE  இல் வைத்துள்ள ICEBAR இல் உள்ள COFFEE ஐஸ் கட்டிகளை உங்கள் தேவைகேற்ப இடுங்கள் .ஜில் ICECOFFE  READY.குளிர்ச்சியாகவும் அருமையாகவும் இருக்கும் .

கொசுறு :

இதே போல் MANGO ICECREAM செய்வதற்கு SLICE யை  ICEBAR இல் ஊற்றி வைத்தால் போதும் .இவை இரண்டும் நான் செய்து பார்த்து சாப்பிட்டு மகிழ்ந்த பிறகே இங்கே பதிகிறேன் .

உங்கள் பார்வைக்கு :