Saturday, July 30, 2011

அழகு பெண்ணொருத்தியால் நான் அழிந்த கதை ... கொள்ளை அழகு
பெண்ணொருத்தி
புது மண பெண்ணாய்
இங்கு வருகிறாள்
என்று கேட்டதில் இருந்து
எங்களுக்கு நடுக்கம் தான் ..எத்தனை காலம்
இங்கிருக்கிறோம்
இந்த வீடு எங்களுக்கு
சொந்தம் அல்லவா !

புயலை போல
திடீரென வந்து
எங்களை அழிக்க தான்
திருமணம் செய்தாயா கள்ளி !

நீ பேரழகி தான் -ஆனால்
இவ்வீடு
அழுக்கு வீடு அல்லவா !

அதோ வருகின்றனர்
உன் உறவினர்கள்
பற்பல ஆயுதங்களை

கொண்டு எங்களை அழிக்க ..


நீங்கள் பயன்படுத்தும்
அந்த அதிக அழுத்த காற்று உள்ள

கருவி எங்களை
உரு தெரியாமல்
அல்லவா அழிக்கிறது


வீட்டுக்குள் வீடு கட்ட
எங்களை தவிர
யாரால் முடியும் ?

எங்கள் சாபத்தால்
உன் வாழ்க்கை
நாசமாகாதா மண
பெண்ணே !


அதோ அந்த மூலையில்
வேண்டா பொருட்கள் உள்ள
அறையில்
எங்களுக்கு இடம் கொடுப்பாயா
உன் மண வாழ்க்கை
இனிக்குமடி


அப்படி செய்தால் ..
வருத்ததுடன் சிலந்தி ...
(திருமணம் முடிந்து புது வீட்டிற்க்கு வரும் மணப் பெண்ணினால் தங்களுக்கு வரும் ஆபத்தை எண்ணி சிலந்தி மணமகளிடம் தங்களை காப்பாற்ற கேட்பதாய் இக்கவிதையை எழுதி இருக்கிறேன் )


இந்த கவிதையை எழுத தூண்டிய எனது அலுவலக தோழிக்கு நன்றி !
Wednesday, July 27, 2011

தெய்வ திருமகள் -எனது பார்வையில் ..
கதை
5 வயது மனநிலை உடைய மனநிலை பிறழ்ந்த விக்ரம் தான் 5 வயது மகளை தனது மாமனாரால் பிரிய நேரிடுகிறது ..பிரிந்த அப்பா மகள் ஓன்று சேர்ந்தார்களா என்பதை உணர்ச்சியாய் நெகிழ்ச்சியாய்சொல்லும் படம் தான் தெய்வ திருமகள் ..

சுவாரசியங்கள்
தெய்வ திருமகன் என்ற படத்தின் தலைப்பு தெய்வ திருமகள் என்று ஆனது கூட பொருத்தம் தான்.விக்ரமின் மகள் தான் தெய்வ திருமகள் படத்தில் ..


 • கிருஸ்ணா என்ற மனநிலை பாதிக்க பட்டவராக வாழ்ந்திருக்கிறார் விக்ரம் மகளின் பிரிவை தாங்க முடியாத நேரங்களிலும் மகளை கொஞ்சும் நேரங்களிலும் அருமை

 • விக்ரமின் மகள் நிலவாக சாரா .குட்டி நடிப்பில் சுட்டி .முக பாவனைகள் அருமை .ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜாவாம் பாடலில் நிலா கேட்கும் கேள்விகளுக்கு விக்ரம் சமாளிப்பது அருமை .குழந்தைகளுக்கு பிடிக்க கூடிய பாடல் ..

 • அனுஷ்கா வை வழக்கறிஞர் ஆக்கிய துணிச்சல் இயக்குனருக்கு வெல்லவும் செய்திருக்கிறார் ..
 • சந்தானம் அனுஷ்காவிர்க்கு வழக்கு தேடி கொடுக்கும் பணியை செய்கிறார் .கொஞ்சமாய் சிரிக்கவும் வைக்கிறார்

 • விக்ரம் மகளுக்கு சித்தியாக அமலா பால் ஸ்வேதா ஆக மிளிர்ந்தாலும் அனுஷ்கா விற்கு தான் நடிப்பு

 • அனுஷ்காவிடம் போட்டியிடும் வக்கீல் ஆக நாசர் .நாசரின் மகன் காய்ச்சலால் அவதியுற விக்ரம் நாசரிடமிருந்து தப்பி போய் மருந்து வாங்கி கொடுக்கும் காட்சியில் விக்ரம் மனநிலை பாதிக்க பட்டவரா என வியப்பு நடிப்பு அருமை


 • M.S.பாஸ்கர் விக்ரமை தனது மனைவியுடன் சந்தேக படும் காட்சிகள் எரிச்சல் ஊட்டுகிறது ..

 • நீதி மன்ற காட்சிகள் அருமை

 • விக்ரம் தனது இறந்த மனைவி உடன் ப்ளாஷ் பேக் வைக்காதது ஆறுதல்

 • இறுதி காட்சியில் நம் கண்கள் குளமாவது இயக்குனரின் வெற்றி .

 • இது எனது முதல் திரை விமர்சனம் .இது படத்தை பற்றிய எனது பார்வை மட்டுமே !


Monday, July 18, 2011

BOLT INDIC BROWSER


தமிழ் வலை தளங்களை /எழுத்துகளை நோக்கியா மொபைலில் காண OPERA MINI BROWSER பற்றி முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன் .

அதில் உள்ள குறை பதிவர்கள் பதிவை வலை திரட்டிகளில் சமர்பிக்கும் போது கட்டம் கட்டமாக தெரியும் .

இந்த குறையை போக்க BOLT INDIC BROWSER பயன்படுத்தலாம் .இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

பின்பு ப்ரௌசெரை ஓபன் செய்து MENU>>PREFERENCES>>INSTALL FONT செல்லுங்கள் .அவ்வளவு தான் .இனி பதிவர்கள் பதிவுகளை உளவு போன்ற வலை திரட்டிகளில் பதியும் போது பிரச்சனை இருக்காது .தமிழ் வலை தளங்களை எளிதில் வேகமாக படிக்கலாம்