Wednesday, October 19, 2011

வருவாய் தரும் GOOGLE ADSENSE மற்றும் பிற தளங்களும் ..


இப்பதிவு GOOGLE ADSENSE.  பற்றியும்  பிற வருவாய் தருவதாய் சொல்லிகொள்ளும் தளங்கள் பற்றியும்  எனது அனுபவங்கள் .புதிய பதிவர்களுக்கு ..

GOOGLE ADSENSE.  விண்ணப்பிக்கும் முன் ..
உங்கள் தளம் தமிழ் தளமாக இருந்தால் ALEXA RANK  ஒரு லட்சத்திற்கு கீழ் இருந்தால் மட்டுமே விண்ணப்பியுங்கள் (இது ஆங்கில தளங்களுக்கு இல்லை )

GOOGLE  ADSENSE  தமிழ் தளங்களுக்கு இல்லை .ஆங்கிலத்தை தான் அதில் தேர்வு செய்ய வேண்டியது வரும் .அதனால் உங்கள் SIDEBAR ,HEADER மற்றும் 
 பதிவின் தலைப்பிலும் ஆங்கிலத்தை இணையுங்கள் (பார்க்க :GOOGLE  ADSENSE  வைத்துள்ள பிரபல பதிவர்கள் ஆங்கிலத்திலும் எழுதியிருப்பதை ..)


குறைந்தது 200 பக்க பார்வைகள் ஒரு தினத்திற்கு உங்கள் தளத்தில் இருக்கிறதா என  பார்த்து கொள்ளுங்கள் 

உங்கள் தளம் விரைவில் LOAD  ஆக தேவையற்ற GADGETS மற்றும் அதிக திரட்டிகளின் ஓட்டுபட்டைகளை   இணைக்காதீர் 

விண்ணப்பித்த பின் .. 

விண்ணப்பித்த பின்னர் இரு தினங்களுக்கு ஒரு முறையாவது பதிவிடுங்கள் ..

உங்கள் விண்ணப்பத்தை   ஏற்று கொள்ளும் வரை தொடர்ந்து விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டாம்  

உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளபட்டால் அதிக விளம்பரங்களை உங்கள் தளத்தில் வைக்க வேண்டாம் இது உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களை 
எரிச்சல் அடைய செய்யும்.

 பிற தளங்கள்
     
 என்னை பொறுத்தவரை GOOGLE ADSENSE  தவிர பிற தளங்களில் விளம்பரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டாம் 

உங்களுக்கு வருவாய் தருவதாய் சொல்லி கொண்டு அவர்களுக்கு தான் வருவாய் கிடைக்கும்

ஒரு CLICK க்கு ௦.0001$  தருவதாக சொல்வார்கள் அதன் மதிப்பு 25 பைசாவுக்கும் குறைவு என்பதை கவனியுங்கள் .50 $ சேர்ந்தவுடன் உங்களுக்கு பணம் அனுப்பப்படும்  என்பார்கள் .

2 மாதம் கழித்து  யாரவது CLICK செய்து  இருந்தால் உங்களுக்கு 75  பைசா வந்திருக்கும் எப்போது 50 $ வருவது ? உங்கள் தளத்தில் அவர்கள் இலவச விளம்பரம் செய்கிறார்கள் என்பதே நான் கண்ட உண்மை .

நமது கருத்தை இலவசமாகவே பதிவோமே GOOGLE ADSENSE  விண்ணப்பம் 
ஏற்று கொள்ளும் வரை ..