Saturday, January 28, 2012

சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா

 • மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,ஒட்டு மொத்த இந்திய அணியின் ஆட்டம்  ஆகியவற்றால் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தொடரை பறிகொடுத்திருக்கிறது இந்தியா
எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக சிறப்பாக விளையாடும் லட்சுமனும் சோடை போனார்.திராவிடும் பெரிய அளவில் சோபிக்கவில்லை
 • விராட் கொக்லியின் சதம் இளம் வீரர்களை டெஸ்ட்  அணியில் சேர்க்க வேண்டும் என்பதை காட்டுகிறது 
 • சச்சினின் 100 வது சதம் எப்போது என காத்திருந்து மோசம்  போனது இந்த தொடரிலும்!.அவர் சதத்தை விட இந்தியாவின் வெற்றி தேவைப்படுகிறது இப்போது !

பல  மாதங்களாய் பார்மில் இல்லாத ஆஸ்திரேலியாவின்  பாண்டிங்கை சிறப்பான பார்முக்கு (ஆட்டத்திறன்)  கொண்டு வந்ததே நமது பந்து வீச்சாளர்களின் சாதனை இந்த தொடரில் !
 • ஒரு டெஸ்டையாவது சமன் (drawn) செய்ய கூட முடியாத வகையில் சுருட்டி வீசி விட்டது ஆஸ்திரேலியா இந்தியாவை !
 • உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா என்பது உண்மையாகி விட்டது 
 • 2-0 என்ற கணக்கில் வீழ்ந்த  சமயத்தில் நான் எழுதிய பதிவு உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா

உங்கள்  பார்வைக்கு :


*தமிழின் சிறந்த கவிதை தளங்கள் -2

*பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக !

Thursday, January 19, 2012

3 -பாடல்கள் ஓர் அலசல்

சூப்பர் ஸ்டார் ஒரு பாட்டில் பெரிய ஆளாக மாறுவார் படங்களில்...அவரது மருமகன் நிஜத்திலேயே ஒரு பாடல் மூலம் பெரிய ஆளாகி விட்டார் என்று ஒரு TWEET படித்தேன்.உண்மை தான் கொலைவெறி பாடல் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் தனுஷ்.


கொலைவெறி  பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது .இருப்பினும் சிறந்த மெலோடிகள் தான்

6 பாடல்கள் ,ஒரு REMIX, மற்றும் மூன்று  தீம் சாங் என்ற கலவையாக  3 பட பாடல்கள் உள்ளது .பாடல்களில் நான் ரசித்த வரிகள் மற்றும் பாடலின் இணைப்பு கீழே !
இதழின்  ஒரு ஓரம்

அருமையான மெலடி .உதித் நாராயண் போல நிலுவையும் (நிலவையும் )ரசிக்க வைத்தாய் என்று தமிழில் புகுந்து விளையாடுகிறார் பாடகர்

பாடலில் நான் ரசித்த வரிகள் 

"என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என்  இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என்  ஆண்கர்வம் மறந்து உண்முன்னே பணிய வைத்தாய் " என்று பளிச்சிடும் வரிகள் இருக்கிறது

பாடல் கேட்க


கண் அழகா கால் அழகா

இதுவும் மெலடி பாடல் தான்.சுருதி ஹாசன் குரலில் ஈர்க்கிறது

பாடலில் நான் ரசித்த வரிகள் 

"எங்கயோ தேடி செல்லும் விரல் அழகா?
என்  கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா ?
உயிரே உயிரே உனைவிட
எதுவும் உயிரில்  பெரிதாய் இல்லையடி!" என்று அசத்தும் வரிகள் சிறப்பு

பாடல் கேட்க


நீ  பார்த்த விழிகள்

காதலின் ஏக்கம் சொல்லும் மெலடி

பாடலில் நான் ரசித்த வரிகள் 

"நீ  பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா


வலிகளில் பெண்ணே  வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக " என்றுகாதலின் ஏக்கம் சொல்கிறது.


பாடல் கேட்க


போ நீ போ 

காதலியை போக சொல்கிறாரா வர சொல்கிறாரா பாடலை கேளுங்கள் புரியும் .சோகம் வழியும் மெலடி

பாடலில் நான் ரசித்த வரிகள்

"இதுவரை உன்னுடன்  வாழ்ந்த நாட்கள் 
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா " என ஏங்குகிறார்

"தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ "என தவிக்கிறார்

பாடல் கேட்க

பாடலின் REMIX கேட்க 


LIFE ல WIFE  வந்துட்டா

 முந்தைய பாடல்களில் இருந்து தனித்து தெரியும் பாடல்.

"வீட்டுக்கு பிரெண்ட்ஸ் எல்லாம் வந்தா GUEST ஆக தான் நடத்தனும்
உன்  மேல தப்பில்லாட்டாலும் SILENT ஆக தான் இருக்கணும்" 

என மனைவி வந்தா இப்படி  தான் என சொல்கிறார்
 
பாடல் கேட்க


WHY THIS கொலைவெறி 

இந்த  பாடலை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை .உலக பிரசித்திபெற்ற பாடல் .பாடல் VISUAL ஆக எப்படி என தான் இப்போது ஆவல்.

தமிழை கொலை செய்து வந்த கவிஞர்களுக்கு மத்தியில் ஆங்கிலத்தை  முதன் முதலில் தமிழ் பாடலில் கொலை செய்ததற்காய் தனுஷுக்கு பாராட்டுக்கள் 

பாடல் கேட்க

தீம் சாங்ஸ் கேட்க 


*தீம்1

*தீம் 2

*தீம் 3


உங்கள் பார்வைக்கு :


*பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOL BAR இலவசமாக

*தமிழின் சிறந்த பொழுது போக்கு தளங்கள்

*தமிழின் சிறந்த தொழில் நுட்ப தளங்கள்

Wednesday, January 18, 2012

சீறுகின்றாள் செந்தமிழ்த் தாய் !


 தமிழ் பேச
கூச்சப்படும் தமிழா !
நான் செந்தமிழ் தாய்
பேசுகிறேன்

ஆங்கிலம் இணைப்பு மொழி
தானே !ஏன் உயிர்ப்பாக
நினைக்கிறாய் ?


ஆங்கிலத்தை அரவணை
தவறில்லை! தமிழை  ஏன்
துறவறம் கொள்ள செய்கிறாய் ?

என்னை கொன்று போடும்
தமிங்கலத்தில் பேசும் நீ
செந்தமிழ் பேச
நா தழுதழுப்பது ஏன் ?

உன் தாயும் நானும்
ஒன்றல்லவா -உன் தாய் மொழி அல்லவா
நான் !

நாளைய உலகில்
தமிழ் இருக்கட்டும்
இறக்கச் செய்திடாதே !
(* ஈகரை வலைத்தளம் சமீபத்தில் நடத்திய கவிதைபோட்டிக்காக நான் எழுதிய கவிதை இது ..)


உங்கள் பார்வைக்கு :Monday, January 9, 2012

BLOGGER'S DIARY

 • இனிய வணக்கம் வாசகர்களுக்கு !நீண்ட நாட்களாக ஆங்கில தளம் ஆரம்பிக்க யோசித்தேன் .பெரும்பாலும் தமிழ் பதிவர்களின் ஆங்கில தளங்கள் தமிழ் தளத்தின் மொழிபெயர்ப்பாக இருப்பது போன்ற உணர்வு எனக்கு உண்டு !எனது ஆங்கில தளம் அவ்வாறில்லாமல் BLOGGER'S DIRECTORY ஆக அதை நடத்த யோசித்தேன்.

 • நான் ரசித்த பிடித்த தளங்கள் ஒவ்வொரு வகையாய் அதில் வரிசைபடுத்த இருக்கிறேன் .
 •  உங்களது தளமும் அதில் வர உங்கள் தளத்தின் முகவரியை (WEB ADDRESS) எனது புதிய தளத்தின் COMMENT பகுதியில் தெரிவியுங்கள் .விரைவில் உங்கள் தளமும் விரைவில் பதிவில் இடம்பெறும்
 • முதல்  பதிவாக நான் ரசித்த தமிழின் தொழில் நுட்ப வலைதளங்களை வரிசை படுத்தி இருக்கிறேன்

எனது தளம் உங்கள் பார்வைக்கு :BLOGGERS DAIRY


உங்கள்  ஆதரவை எதிர்பார்க்கும்

*பிரேம்குமார்  .சி*


Saturday, January 7, 2012

உள்ளூரில் புலி வெளியூரில் எலியா இந்திய அணி?

 • தொடர்ந்து அந்நிய மண்ணில்  ஆறாவது டெஸ்ட் தோல்வியை கண்டு இருக்கிறது இந்திய அணி.இம்முறை இன்னிங்க்ஸ் மற்றும் 68 வித்தியாசத்தில் தோல்வி .இங்கிலாந்து மண்ணில் தொடர் தோல்விகளை கண்டு பின்னர் இந்திய மண்ணில் இங்கிலாந்தை  வென்றது.


சச்சினின் 100  வது  சதம் எப்போது ?

 • சச்சின் 100   வது சதம் அடிக்க நீண்ண்ண்ண்ண்ண்ட காலமாய் முயன்று வருகிறார் .அவரது இயல்பான ஆட்டம் பாதிக்கப்படுவது இந்த 100 வது சதத்தினால் தான்..


 • சிட்னி டெஸ்டில் இந்திய சுவர் ராகுல் டிராவிட் பெரிதாக விளையாட வில்லை .நல்ல தொடக்கம் அமைய வில்லை .சேவாக் தொடர்ந்து ஏமாற்றுகிறார்.பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் நமது வீரர்கள் சொதப்பினர் முதல் இன்னிங்சில் ...ஆஸ்திரேலியா அசத்துகிறது பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ..

 • அஸ்வின்  விளையாடுவதை கூட கோக்லியும் டிராவிட்டும் தோனியும்  விளையாடுவது இல்லை .தமிழக வீரர் அஸ்வின் பேட்டிங்கில் அசத்தி வருகிறார் சமீப காலங்களில்.
அஸ்வினின் அரை சதம்

 • இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடும் இந்திய அணி அந்நியமண்ணில் தொடர்ந்து சொதப்பி வருகிறது .மீதமிருக்கும் 2 டெஸ்டிலும் வென்று தொடரை சமன் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல .உள்ளூரில் புலி வெளியூரில் எலி தானா  இந்தியா ?

Tuesday, January 3, 2012

பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக !

 • நமது பதிவுகள் பலரை சென்றடைய திரட்டிகள் உதவி புரிகின்றன.பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமானது.அனைத்தும் ஓரிடத்தில் இருந்தால் என்ன என்றும் எனக்கும் தோன்றியது .ALEXA தளத்தில்  சமீபத்தில் உலவி கொண்டிருக்கையில் இதற்கான விடை கிடைத்தது.

 • ALEXA TOOLBAR CREATOR மூலமாக திரட்டிகள் ,சமூக வலைத் தளங்கள்  அனைத்தும் உள்ள TOOLBAR உருவாக்கி உள்ளேன் .திரட்டிகளின் LOGO PHOTOSHOP மூலம் மெருகேற்ற அதிக நேரம் பிடித்தது .மற்ற படி TOOLBAR உருவாக்குவது எளிதானது.

 • எனது  படைப்பான இந்த TOOLBAR இல் தமிழின் முதன்மை திரட்டிகளான இன்ட்லி ,தமிழ் மணம் ,தமிழ் 10,யு டான்ஸ் ,உலவு மற்றும் இனிய தமிழ் திரட்டிகளுக்கான இணைப்பும் FACEBOOK ,TWITTER,GOOGLE + போன்ற சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் பிளாக்கர் மற்றும் GMAIL இணைப்பும் தரப்பட்டுள்ளது.

 • பதிவர்களுக்கு  மட்டும் அல்லாது அனைவருக்கும் பயன்படும் வகையில் சமூக வலைத் தளங்களுக்கான இணைப்பும் தரப்பட்டுள்ளது .இதை உங்கள் கணினியில் நிறுவி எளிதில் உங்கள் பதிவை இணையுங்கள் திரட்டிகளில் ..

 • கணினியில் நிறுவிய உடன் உங்கள் கணினியை RESTART செய்தால் TOOLBAR உங்கள் கணினியில்இணைந்திருக்கும்.INTENET EXPLORER மற்றும்  FIREBOX BROWSER களுக்கு ஏற்றது


                           கணினியில் நிறுவ கீழே கிளிக்குங்கள் 

 Get our toolbar!