Friday, April 20, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி-OK OK

நீண்ட நாட்களுக்கு பிறகு நக்கலும் நையாண்டியும் நகைச்சுவை ததும்ப ஓர் படம்.கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன் .

கதை

காவல் துறை அதிகாரி மகளை கைபிடிக்க நாயகன் நடத்தும் போராட்டம் தான் கதை .பல தமிழ் படங்களின் கதை தான் ஆனாலும் சந்தானத்தின் நகைச்சுவை சரவெடிகளால் ரசிக்க முடிகிறது .சந்தானம் இல்லையென்றால் ?

ORU KAL ORU KANNADI.OK OK




எனக்கு பிடித்த காட்சிகள்

  • உதய நிதி ஸ்டாலின் அறிமுக நாயகனாக அவருடைய முதல் காட்சியில் கொரியரில் வரும் திருமண அழைப்பிதழை கண்டு அதிர்ச்சி ஆவதை பார்க்கும் போது நமக்கும்  அதிர்ச்சியாகிறது !எப்படி மீதி படத்தை பார்ப்பது என்று ?அப்படி ஒரு முக பாவனை! ஆனாலும் பிந்தைய காட்சிகளில் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
  • விமானத்தில் ஒரு காட்சி வருகிறது .உதயநிதியும் சந்தானமும் ஹன்சிகாவை போட்டு கலாய்த்து  எடுக்கும் காட்சி அருமை
  • இயக்குனரின் பார்முலா படி கௌரவ வேடத்தில் ஆர்யா ,சிநேகா ,ஆண்ட்ரியா 
ORU KAL ORU KANNADI .OK OK

  • உதய நிதி அம்மாவாக சரண்யா .ஹீரோ படித்த காலம் போய் அவரது அம்மா படிக்கும் காலம் போல ,சரண்யா டிகிரி தேர்ச்சி பெறாததால் பேசமால் இருக்கும் உதயநிதி அப்பா என பல புதுமைகள் 
  • எங்கேயும் எப்போதும் படத்தில் சிரிக்கிறாரா அழுகிறாரா என தேடிய ஹன்சிகா இந்த படத்தில் சிறப்பாகவே செய்திருக்கிறார் .சரண்யா ஹன்சிகாவிடம் எனக்கு கோபம்  வராது  வந்துச்சுனா என்று கூறும் போது  ஹன்சிகா வந்துச்சுனா என இழுக்கும் போது முக பாவனை அழகு 
  • ஹன்சிகாவிற்கு அவரது அப்பா பார்த்த மாப்பிள்ளை ஹண்சிகாவை கலாய்த்து எடுக்கும் போது சந்தோசப்படும் உதயநிதி வெளியில் வந்து தனுஷ் போல குத்தாட்டம் போடுவது சற்று மிகை தான் 
ORU KAL ORU KANNADI,OK OK

  • வேணாம் மச்சான் வேணாம் பாடலில் சிறிய நடன  அசைவுகள் என்றாலும் சிறப்பு 
  •  மொத்தத்தில் நம் கவலை மறந்து களிப்பாய்  3 மணி நேரம் இருக்க இப்படம் பார்க்கலாம் 

 கேளிக்கை விடுதியில் வைத்து திருமணம் நடப்பதாக காட்டும்  3 படத்திற்கு வரி விலக்கு அளிக்க படுகிறது எங்களுக்கு இல்லையா என சமீபத்தில் புலம்பி தள்ளியிருக்கிறார் உதய நிதி .அவரது புலம்பல் நியாயம் தான் அரசியல் வாரிசு ஆச்சே !








உங்கள் பார்வைக்கு :