Tuesday, July 31, 2012

BLOGGER PROFILE TO GOOGLE PLUS PROFILE இப்போது நமது DASHBOARD இல் ..


BLOGGER PROFILE TO GOOGLE + PROFILE



BLOGGER PROFILEக்கு மாற்றாக கூகிள்+PROFILE அறிமுகபடுத்தபட்டது தற்போது  அது பிளாக்கரின்  புதிய தோற்றத்தில் சேர்க்கபட்டுள்ளது (இன்று காலை தான் நான் பார்த்தேன் ).தேவையான அன்பர்கள் GOOGLE+ PROFILEக்கு மாறி கொள்ளலாம்
எவ்வாறு மாறுவது :

கீழே உள்ள படத்தில் அம்பு குறியிட்டுள்ளது GOOGLE+ PROFILEக்குனாது .அதை கிளிக் செய்யுங்கள் 


 பின்பு வரும் UPGRADE TO GOOGLE+ என்பதை கிளிக் செய்யுங்கள்


BLOGGER PROFILE TO GOOGLE + PROFILE

தற்போது பின் வருமாறு காட்டும் அதில் டிக் மார்க் செய்து SWITCH NOW என்பதை சுட்டினால் உங்கள் PROFILE GOOGLE+ PROFILE க்கு மாறிவிடும் 

BLOGGER PROFILE TO GOOGLE + PROFILE
இது முன்பு SETTINGS என்ற பகுதியில் இருந்தது தற்போது DASHBOARD க்கும் வந்துள்ளது

UPDATE: 

மீண்டும் பிளாக்கர் PROFILE க்கு மாற DASHBOARD இல் வலது புறம் உள்ள ஐகானை கிளிக் செய்து REVERT TO BLOGGER PROFILE என்பதை கிளிக் செய்தால் மாறி விடும்


உங்கள் பார்வைக்கு :


Saturday, July 28, 2012

என்ன சீரியல் இது ?-சரவணன் -மீனாட்சி

SARAVANAN -MEENATCHI
பல இளம் யூத்துகள் விரும்பி பார்க்கும் விஜய் டிவியின்  நெடுந்தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு வழியாக நேற்று சரவணன் மீனாட்சிக்கு திருமணம் முடிந்தது .

கதை

  • தொடரின் நாயகன் சரவணன் தனது  முன்னாள் காதலி யாமினியை நட்ட நாடு ஜாமத்தில் கட்டிபிடிக்க அதை பார்த்த நாயகி மீனாட்சி ரொம்ப ரொம்ப நல்லவரான போலீஸ் அருணாசலத்தை அண்ணனின் வற்புறுத்தலின்  பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள் 
  • அதற்க்கு  முன் நாயகியின் அண்ணன் சரவணனை நாயடி பேயடி அடித்து விரட்டி அடிக்கிறான்.
  • தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் போலீஸ் அருணாசலம் நான் உனக்கு ஒத்து வர மாட்டேன் உன் கண்ணுல சந்தோசம் இல்ல சரவணன் தான் உனக்கு என அனுப்பி வைக்கிறான் .
  •  மீனாட்சி இதை சரவணிடம் சொல்லி ஒரு வழியாக திருமணம் முடிகிறது தொடரும் முடிய போகிறது என்று நினைத்தால் "தொடரும் " என போடுகிறார்கள் .இனி என்ன காட்ட போகிறார்களோ !
சிறப்புகள் :
  •  நேற்றைய தொடர் 2 மணி நேரம் ஒளிபரப்ப பட்டது .8.30pm to 10pm
  •   காதலித்த, காதலிக்கும் காதலை விரும்பும் காதலை வெறுக்கும் அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும் அத்தனை காதல் காட்சிகள் 
  • காதலிக்கும் அனைவருக்கும் தனது காதலி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது சரவணன் மீனாட்சியின் சண்டைகளை பார்க்கும் போது ..
மொத்தத்தில் விஜய் டிவியின் கல்லா நிரப்பும் மெகா ஹிட் சீரியல் இந்த சரவணன் மீனாட்சி

உங்கள் பார்வைக்கு :


நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS

Sunday, July 22, 2012

நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS

SIIMA AWARDS
 SIIMA விருது- (South Indian International Movie Awards ) தெலுங்கு ,தமிழ் ,கன்னடம் மற்றும் மலையாளம் படங்களுக்கு  வழங்க படுகிறது.துபாயில் நடைபெற்ற விழாவில் தனுஷ் -சிம்பு அடித்த கூத்து தான் விழாவின் ஹைலைட்.
சன் டிவியில் இன்று ஒளிபரப்ப பட்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து ..
  •  பொதுவாக ரஜினி- கமல், அஜித்- விஜய் போல தனுஷ் சிம்பு க்கு இடியே போட்டி காணப்படுகிறது .தங்களது படங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி  வசனங்கள்  வைப்பதை பார்த்திருக்கலாம்.ஆனால் இவ்விழாவில் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து நண்பர்கள் போல் காட்டி கொண்டனர்
  • சிம்புவுக்கு விருது இல்லை என்றாலும் அவர் நடித்த வானம் படத்தில் நடித்த  சந்தானம்  சிறந்த நகைச்சுவை நாயகன் விருது பெற்றார் 
  • சிம்பு தனுஷ் ஒன்றாக பாடி அசத்தினர்.நாங்கள் எதிரிகள் போல சூழல் இருக்கிறது .ஆனால் நாங்கள் எதிரிகள் தான் படத்தில்! நேரில் அல்ல என்றார் தனுஷ்
SIIMA AWARDS
  • சிறந்த படமாக கோ வும், சிறந்த நடிகராக தனுஷ், சிறந்த நடிகையாக அசின் தேர்ந்தெடுக்கபட்டனர் .
  •  சிறந்த பின்னணி பாடகராக தனுஷ்( ?) ஓட ஓட பாடலுக்காக பெற்றார் மேலும் சில குறிப்பிடத்தக்க விருதுகள் கீழே
 
SIIMA AWARDS: 2011 WINNERS
 
-                        G.V.Prakash / Aadukalam
-      Chinmayi / Song - Sara Sara, Movie - Vaagaisoodva
-          Dhanush / Song - Voda Voda, Movie - MayakkamEnna
-                                Santhanam / Vaanam
-                                    Asin / Kavalan
-       Richa Gangopadhyay / Mayakkam Enna
-                                      Dhanush / Aadukalam
-       Vikram / Deiva Thirumagal
-                                  Vetrimaran / Aadukalam
-                                         Ko -Elred Kumar, Jayaraman / RS Infotainment

உங்கள் பார்வைக்கு : 

 

Friday, July 20, 2012

பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ?

பில்லா -2,AJITH
 தமிழ்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்க வேண்டும் என்று கூக்குரல் கொடுப்பவர்கள் மற்றும்  அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்க கூடிய படம் தான் இந்த பில்லா -2 .

சாதாரண அகதி எப்படி பல பேரை கொல்லும் பில்லாவாக மாறுகிறான் என்பது தான் கதை

 பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ?
  • 3குத்து பாட்டு 2டூயட் என்ற தமிழ் படங்களின் பார்முலா நம்பி படம் பார்க்க வருவதாக இருந்தால் இது உங்களுக்கான படம் இல்லை
  • காதல் ரசம் கொட்டும் காட்சிகள் இல்லை.டூயட் கூட இல்லை.
  • ஒரே ஒரு வில்லனை தொடக்கத்தில் இருந்து அழிக்க முயன்று கடைசியில் அழிக்கும் தமிழ்படம் இல்லை இது.ஏகப்பட்ட வில்லன்கள் ஒவ்வொருவரையும் சில காட்சிகளுக்குள் போட்டு தள்ளி  போய்(நடந்து) கொண்டே இருக்கிறார்
பில்லா 2,அஜித்
  • நகைச்சுவை காட்சிகள் அங்கங்கே இணைக்க பட்டு இருக்கும் என நினைத்தால் அது இங்கு இல்லை.நகைச்சுவைக்கே இடம் இல்லை 
  • நாயகன் வில்லத்தனம் செய்தால்   இறுதியில் இறப்பான் என்பதை மங்காத்தா விற்கு பிறகு இதிலும் உடைத்து எரிந்து விட்டார்கள் .பலபேரை கொன்று விட்டு இனிமேல் தான் ஆரம்பம்  என அஜீத்  கடைசியில் சொல்வது போதாதா ?(இது பில்லா1ன் முன்பகுதி என்பதால் இறக்காமல் இருக்கலாம் )
  •  இறுதி காட்சியில் வந்து யு ஆர் அண்டர் அரெஸ்ட் என்று சொல்லும் போலீஸ் இங்கு இல்லை 
  • ஆடியோவில்  இருந்த "இதயம் இதயம்" மெலடி பாடல் படத்தில் இல்லை ஏனோ!      
  • பில்லா பாடல்கள் பற்றிய எனது பிரத்யேக பதிவு கீழே 

    • படம் தொடங்கியது முதல் இறுதிவரை யாரையாவது கொன்று கொண்டே இருக்கிறார் அஜீத்  அத்தனை ரத்தம் வன்முறை
    இன்னும்  பல இல்லக்கள் இப்படத்தில் .மொத்தத்தில் இது வழக்கமான தமிழ்படம் இல்லை .ஹாலிவுட் பாணியில் எடுக்கப்பட்ட தமிழ்படம் இது
    எனக்கு ரஜினியின் பில்லா மட்டுமே பிடித்தது  உங்களுக்கு!

    உங்கள் பார்வைக்கு :

     
    யார் போலடா நீ

      Wednesday, July 11, 2012

      நான் ஈ (NAAN EE) -எந்திரனை மிஞ்சியது எப்படி ?

      மெல்லிய உணர்வுபூர்வமான காதல் வழிந்தோடும் படங்கள் நிச்சய வெற்றி பெறுவது உண்டு .

      SHORT TERM MEMORY LOSS என்ற கருவை கொண்டிருந்தாலும் சூர்யா -அசின் இடையேயான காதல் காட்சிகளுக்காகவே கஜினியை பார்ப்பதுண்டு இன்னும் .

      NAAN EE,NAAN E,SAMANTHA
      அதே போல சில காட்சிகள் என்றாலும் நாணி (நாயகன் ) சமந்தா காதல் காட்சிகள் அவ்வளவு அழகு
      வில்லன் சுதீப்புடன் பேசிக்  கொண்டே நானிக்கு நோட்டமிடும் போது மிளிர்கிறார் சமந்தா
      "வீசும் வெளிச்சத்திலே
      துகளாய் நான் வருவேன்"

      "நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
      பென்சிலை  சீவிடும்  பெண் சிலையே !"
      என்ற கார்க்கியின் வரிகள் போதாதா அவர்கள் காதலை சொல்ல !

      நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து  வில்லனை பழிவாங்குவது தான்  கதை


      எந்திரனை மிஞ்சும் கிராபிக்ஸ்

      • ஈயாக பிறப்பெடுப்பது, மத்த ஈக்களை கண்டு பறக்க நினைப்பது என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது
      • ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா  கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால்  மனித இனம் படும் சின்ன  சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
      • சமந்தா விடும் கண்ணீரில் ஈ நான் தான் ஈயாக மறு பிறப்பு எடுத்து இருக்கிறேன் நாணி என எழுதுவது கலக்கல்
      • ரஜினியின் எந்திரனை  மிஞ்சும் அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன .சில காட்சிகள் கிராபிக்ஸ் தானா  என யோசிக்க வைக்கிறது
      ஈயின் நாயகன் சுதீப் 

      SUDEEP,SUDHEEP

      • இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
      • ஈக்கு பயந்து ஹெல்மெட் மாட்டி கொண்டு மீட்டிங்கிற்கு வருவது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக ஈயை விரட்டுவது (ஓட்டுவது )என மனிதர் கலக்குகிறார்
      சில காட்சிகளில் வந்தாலும் சந்தானம் கதையோடு ஒன்றுகிறார் .
      இறுதியில் ஈ இறந்து மீண்டும் ஈயாக I AM BACK  என வருவது கலக்கல் .

      குழந்தைகள் மட்டும் அல்லது அனைவரும் பார்க்க வேண்டிய  அருமையான படம் இந்த நான் ஈ 

       உங்கள் பார்வைக்கு :




      Monday, July 9, 2012

      நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி(NVOK) -முடிவை எட்டியது ஏன் ?

      NVOK,NEENGALUM VELLALAAM ORU KODI
      • ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி  27,2012 அன்று ஆரம்பித்த விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி"நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைகிறது . 
      • சுமார் 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்க பட்ட இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான கேள்விகளால் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது 
      • டி.ஆர் .பி ரேட்டிங் சரிய தொடங்கியதும் நடிகர்கள் ,விஜய் டிவி நட்சத்திரங்கள் என நிகழ்ச்சியை வேறு பாதைக்கு கொண்டு சென்றனர் 
      • அதிக  பட்சம் 12,50,000 பரிசுத்தொகை பெற பட்டு இருக்கிறது
      • குறைந்த பட்சம் 0 பெற்றார் +2 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவர் 
      NVOK
      • நட்சத்திரங்கள்  பங்கு பெற்ற தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றி பெற தொகையை வழங்கும் நிகழ்ச்சிகளில் அதிக பட்சம் 6,40,000 பெற்றவுடன் நிகழ்ச்சிக்கான நேரம் முடிந்தது என சூர்யா சொல்லியதை காண முடிந்தது (ஏனோ?)
      • இந்த வார இறுதியோடு முடியும் இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் ,ராதா,குஷ்பூ ,சுகாசினி ஆகியோர் பங்கேற்கின்றனர் 
      • இரட்டையர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் போடப் பட்டது .தற்போது விண்ணப்பித்தவர்கள் பங்கேற்காமல் நிகழ்ச்சியை முடிப்பது ஏன் என்று தெரிய வில்லை.
      • விஜய் டிவி பாணியில் சன் டிவியும் தனது சீரியல் நாயகிகளை வைத்து சன் குடும்பம் நட்சத்திரங்கள் என கையில் ஒரு கோடி நிகழ்ச்சியை ஓட்டி கொண்டிருப்பது தனிக்கதை .அந்த நிகழ்ச்சிக்கும் முடிவுரை விரைவில் வர வாய்ப்பு உண்டு 

      உங்கள் பார்வைக்கு :



      Monday, July 2, 2012

      வில்லனான அஜீத் -VIJAY AWARDS

      விஜய் அவார்ட்ஸ் ,விஜய் விருதுகள்

      ஒரு விருது கொடுப்பதற்க்கு இத்தனை ஆர்பாட்டம் விஜயில் மட்டும் தான்  சன்னை  மிஞ்சி விட்டது விஜய் டிவி .கடந்த வாரம் ஒளிபரப்பாகிய விஜய் டிவி  விருதுகளுக்கு விஜய் டிவி VIJAY AWARDS முன்னோட்டம் என பல நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
      • இந்த விருது வழங்கும் விழாவிற்கு போட்டியாக சன் டிவி  தனது  KTV மூலம் பழைய விழா ஒன்றை ஒளிபரப்பாக்கியது 
      • கலைஞர் டிவி யும் தனது பங்குக்கு எடிசன் அவார்ட்ஸ் என்ற ஒன்றை அந்த நேரத்தில் ஒளிபரப்பாக்கியது தனிக் கதை
      • வெள்ளி சனிகளில் ஒளிபரப்ப பட்ட இந்த நிகழ்ச்சிக்காக SUPER SINGER நிகழ்ச்சி ஞாயிறு அன்று மாற்ற பட்டது 
      • நிகழ்ச்சியை  தொகுத்து  வழங்கிய சிவகார்த்தியேன் -கோபிநாத்  அடித்த லூட்டி சற்று எரிச்சல் தான் 
      • இவன் என்னடா என் பொண்டாட்டிட கூட இவன்ட்ட  கேட்டு  தான் பேசனும்னு சொல்வான்   போல என சிவாகார்த்தியை பார்த்து கோபிநாத் காமெடி பண்ணினார் 
      • சந்தடி  சாக்கில் விஸ்வரூபம் படத்தை PROMOTION செய்தார் கமல் 
       VIJAY TV AWARDS,VISWAROOPAM,KAMAL,ANTRIYA
      • தனுஷ் கொலைவெறி பாடலின் ரீமிக்ஸ்யையும் 3 பட பாடல்களையும் அனிருத்துடன் இணைந்து ஆடி பாடினார் .சிறந்த பொழுது போக்கு நாயகன் (Entertainer of the year) விருதை பெற்றார் 
      • சந்தானம் விருது பெற்றவுடன் தன்னை பிரபலபடுத்திய விஜய் டிவி யின் லொள்ளு சபா மற்றும் திரையில் அறிமுகபடுத்திய சிம்புவை நினைவு கூர்ந்தார்
      • சிறந்த படமாக எங்கேயும் எப்போதும் படமும் விருப்ப படமாக கோ வும் தேர்ந்து எடுக்க பட்டன  
      AJITH,VIJAY TV AWARDS
      •  பொதுவாக சிறந்த நாயகன் விருது பெறும் அஜீத் இந்த முறை சிறந்த வில்லனுக்கான விருதையும் .FAVORITE HERO விருதையும் பெற்றார் ..அஜீத் சார்பில் வெங்கட் பிரபு  விருதை பெற்றார் 
      • ஏழாம் அறிவில் திறமை காட்டிய சூர்யா ,காவலன் ,வேலாயதம் நடித்த விஜய் ஆகியோருக்கு எந்த விருதும் கிடைக்காதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்
      குறிப்பிட தக்க விருதுகள் கீழே :

       Favorite Hero     :   Ajith

      Favorite Heroine :  Anushka
      Favorite Director: 
      Mankatha
      Favorite Film     
        :  Ko

      Best Actor                    : Vikram ( Deiva Thirumagal )
      Best Actor                    :
      Female – Anjali (Engeyum Eppothum)
      Best Villain                  :
      Ajith ( Mankatha )
      Entertainer of the year :
      Dhanush
      Best Director               :
      Vetrimaaran( Aadukalam )
      Best Film                     :
      Engeyum  Eppothum


      Best Music Director     :      GV Prakash (Aadukalam)
      Best Comedian             :
      Santhanam and Kovai Sarala( Siruthai + Deiva Thirumagal, Kanchana)
      Best Stunt Director       :
      Dilip (Aaranya Kandam)
      Best Lyricist                  :
      Vairamuthu ( Vaagai Sooda Vaa )
      Best Choreographer  
          : Suchitra ( Dia Dia Dole – Avan Ivan )

      Chevalier Sivaji Ganesan Award for excellence in Indian cinema: SP Balasubramaniam


      உங்கள் பார்வைக்கு :


      Sunday, July 1, 2012

      உங்கள் தளம் எனது தளத்தில் மாதம் முழுவதும் ..(BEST COMMENTS)

      நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு 
      • நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டி  அதிக பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தின் முகப்பில்   ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன் .கடந்த மே  மாதம் சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  வரலாற்று சுவடுகள் 

      ஜூன் மாத சிறந்த கருத்தாளர் யார் ?
      கடந்த ஜூன் மாதம் மொத்தம் 11 பதிவுகள் என்னால் வெளியிடப்பட்டது.அதில் சிறப்பான என்னை நெகிழ வைத்த  கருத்துக்கள் கீழே !

      சிறந்த கருத்தாளர் பற்றிய இந்த பதிவுக்கு சிறந்த கருத்தாளர் அளித்த கருத்து கீழே   

      வரலாற்று சுவடுகள் said...


      சமூக வலைத்தளங்களில் நம் பதிவிற்கு கிடைக்கும் ஓட்டுகள் நம் பதிவின் தரத்தை தீர்மானிக்கும் காரணியாக எப்போதும் இருப்பதில்லை, ஆனால் நம் பதிவிற்க்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் நம் பதிவின் தரத்தை தீர்மானிக்கும் விசயத்தில் மிகமுக்கியமான காரணியாக இருக்கிறது என்றால் மிகையில்லை.
      +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      ஆண்களே இப்படி தானா ?
      இந்த கவிதை பதிவுக்கு அன்பர் அளித்த வித்தியாசமான கருத்து கீழே



      இக்பால் செல்வன் said...

      ஆண்களே அப்படித் தான் .. அதற்கு அறிவியல் ரீதியாக காரணங்கள் உண்டு .... !!!அதற்கான அறிவியல் விளக்கம் வேண்டுமா ? பதிவாகத் தரவும் தயார் ...
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

      என்ற கவிதைக்கு இருவேறு அன்பர்கள் அளித்த கருத்துக்கள் கீழே





      ரேவா said...


      எப்படி எங்கு என்று நினைக்கும் முன்னே பலருக்குள் காதல் முளைவிட்டிருக்கும், இந்த காதல் விருட்சத்தின் வேர்தேடி பயணத்திருக்கும் கவிதை நன்று...வாழ்த்துக்கள் சகோ


      மயிலன் said...


      கவிதைக்கு கருத்து சொல்ல எந்த யோக்கியதையும் எனக்கு இல்லை என்றாலும் உங்களிடம் இத்தனை நாள் உங்கள் கவிதைகள் பலவை வாசித்த இரசிகன் என்ற முறையில், நண்பன் என்ற முறையில் ஒன்று சொல்லுகிறேன்.. உங்கள் கருப்பொருளை அப்படியே வைத்துவிட்டு வார்த்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெடுங்கள்... நிச்சயம் இன்னும் பல படி மேலே வரும்.. வாழ்த்துக்கள் பிரேம்.


      PREM.S said...



      @மயிலன் //அனைவருக்கும் புரியும் படி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் அன்பரே !மரபு கவிதைகள் என்னால் எழுத இயலாது வெகு ஜன ரசிப்பும் அதற்கு அதிகம் இல்லை அதனால் தான்
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

      என்ற தந்தையர் தின கவிதைக்கு அன்பரின் கருத்து நெகிழ  வைத்தது உண்மையும் கூட





      "என் ராஜபாட்டை"- ராஜா said... தந்தையின் அருமை அவர் இல்லாத பொழுது அல்லது நாம் தந்தையாக இருக்கும் போதுதான் பலருக்கு தெரிகின்றது ...


      இப்போது ஏது கேட்டாலும் வாங்க வசதி இருந்தும் கேட்க அவர் இல்லை .. அவர் கேட்கும் போது வாங்க வசதி இல்லை ...I miss my father
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++

      என்ற  பதிவிற்கு அன்பரின் உண்மையான கருத்து கீழே
      ரெவெரி said... Good to listen...but I don't like to watch old songs.. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      மேற்கண்ட கருத்துகளை தவிர அன்பர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர் .எனினும் என்னை நெகிழ வைத்த கருத்தை அளித்த "என் ராஜபாட்டை"- ராஜா  தளத்திற்கு அவருக்கு ஜூன் மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுத்து இருக்கிறேன் 
      அவரது தளம் இந்த மாதம் முழுவதும் எனது தளத்தின் முகப்பில் விளம்பரபடுத்தப்படும் .தொடர்ந்து வருகை தாருங்கள் அன்பர்களே  நன்றி 

      உங்கள் பார்வைக்கு : 
       
       சகுனி (saguni) -கலைஞருக்கு குத்தோ குத்து வசனங்கள்