Friday, August 31, 2012

முகமூடி -படம் அல்ல ..


வணக்கம் அன்பர்களே படம் வந்த அன்றே விமர்சனமா இந்த தளத்திலா என நினைக்க வேண்டாம்இது முகமூடி பட விமர்சனம் அல்ல.இது ஒரு விளையாட்டு  தனது முகத்தை மறைத்து உள்ள இவரை  கண்டு பிடியுங்கள் பார்ப்போம்

செய்ய வேண்டியது :
 •  பிறகு வரும் வட்டத்தை MOUSE  கொண்டு இழுங்கள் ஒவ்வொரு வட்டமும் நான்கு வட்டங்களாய்  பிரியும் .தொடர்ந்து செய்யுங்கள் முடிவில் என்ன வருகிறது என்பதை  கருத்துரையில் சொல்லுங்கள் 

தொடர்ந்து MOUSE இழுத்தால் இறுதியில் முகத்தை மறைத்துள்ளவர் இவர் தான் பூனையார் .
நன்றி :STUMPLEUPON தளத்தில் உலவி கொண்டிருக்கையில் கண்டது உடனே பதிவிட்டேன்

Saturday, August 25, 2012

நாங்கள் பதிவர்கள் தமிழ்பதிவர்கள்...

தமிழ் பதிவர்கள்

குமதத்தில் எப்போது
குங்குமத்தில்  எப்போது
விகடனில் எப்போது?
என காத்திருந்து காத்திருந்து
சோடை போன நாட்கள் உண்டு
நம் படைப்புகளை அனுப்பி விட்டு ..இப்போது நம் தளமே
அப்பத்திரிகைகளில்..
GOOGLE புண்ணியத்தால்
இலவச  வலைத்தளம்
ஆரம்பித்தோம் ..
பதிவர்கள் ஆனோம்

தணிக்கை இல்லை
நமக்கு தோன்றியதை
கண்டதை கேட்டதை நம் உணர்வுகளை
வெளிக்காட்ட ஒரு தளம்
முகமறியா  நட்பு வட்டங்கள்
உயிர்ப்பான உறவுகளாய்
மாறும் அதிசயம் இங்கே !

எங்கள் தளங்களால் எங்களுக்கு
வருமானம் இல்லை
 ஆ ங்கில வலை பூக்களை போல்..

ஆனால் நட்பு உண்டு
நிம்மதி உண்டு ஏனென்றால்
 நாங்கள் பதிவர்கள்
தமிழ் பதிவர்கள் 

( 26/08/2012 நடைபெற்ற  தமிழ் பதிவர்கள் சந்திப்பை ஒட்டி எழுதிய கவிதை இது  )

Saturday, August 18, 2012

கலக்கலான புதிய POLL WIDGET நமது தளத்திற்கு ..

POLL WIDGET


நமது தளத்திற்கு வரும் வாசகர்களிடம்  கருத்துகணிப்பு நடத்த பிளாக்கர் இல் POLL WIDGET உள்ளது .அது மிக சாதாரணமாக  இருக்கும்.தற்போது அதற்கு மாற்றாக பல THEME களில் பின்புற தோற்றங்களில் ஒரு POLL WIDGET ஒரு தளம் தருகிறது .இதை பெற இங்கு சென்று முதலில் உறுப்பினர் ஆகுங்கள் .பின்னர் நமது MAIL க்கு வரும் ACTIVATION LINK கிளிக் செய்யுங்கள்

பின்பு LOG IN செய்து DASHBOARD கிளிக் செய்யுங்கள் பின்பு CREATE NEW சென்று POLL கிளிக் செய்யுங்கள்.


 தலைப்பு மற்றும் பதில்களை டைப் செய்த பிறகு POLL STYLE இல் உங்களுக்கு பிடித்த பின்புறத்தை THEME தேர்ந்தெடுங்கள்

WIDGET SIZE தேர்ந்து எடுங்கள்


பின்பு POLL OPTIONSஇல் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்து எடுங்கள்
வாக்களிப்பு முடியும் நாள் ,COMMENTS மற்றும் பலவற்றை மாற்றலாம் .பின்பு CREATE POLL கொடுங்கள் .அவ்வளவு தான் .பின்பு வரும் கோடிங்கை COPY செய்து BLOGGER>>>LAYOUT>>ADD A GADGET கிளிக் செய்து அதில் HTML JAVASCRIPT தேர்ந்தெடுங்கள் PASTE செய்யுங்கள் SAVE செய்யுங்கள்

சிறப்பம்சங்கள் :
 • ஒருவருக்கு ஒரு ஒட்டு மட்டுமே அனுமதிக்கும் (IP ADDRESS கொண்டு மட்டறுக்கும் )
 • பலவித பின்புற தோற்றங்களில் (THEME) கிடைக்கிறது 
 • இதில் நமது பதிவுக்கு STAR RATING WIDGET கூட கிடைக்கிறது .CREATE NEW>>>RATING சென்று அமைக்கலாம் 
நான் அமைத்துள்ள POLL WIDGET கீழே( SIDEBAR லும்  உள்ளது ).

 தில் உங்கள் ஓட்டை போடுங்கள் அன்பர்களே இத்தளத்தில் நீங்கள் என்ன விரும்புகீறீர்கள் என்பதை  நான் தெரிந்து கொள்ள !


Wednesday, August 15, 2012

மாற்றான் பாடல்கள் ஓர் அலசல்

சூர்யா  இரட்டை வேடத்தில் நடிக்கும் மாற்றான் திரைபடத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.மொத்தம் 5 பாடல்கள்.அப்பாடல்களில் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் கீழே.


MAATRAAN,மாற்றான்


தீயே தீயே :

ஆலாப் ராஜு,சுசித்ரா மற்றும் பலர் பாடியுள்ளனர்

ரசித்த வரிகள்
அழகான  வார்த்தை நீ என்றால்
முற்றுபுள்ளி வெட்கம் 

மெதுவாக உன்னை வர்ணித்தால் 
மொழியே  சொக்கி நிற்கும்

அசைகின்ற சொத்துகள் உன்னில் ஏராளம் 
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்.
பாடல் கேக்ககால் முளைத்த பூவே :

மகாலக்ஷ்மி ஐயர் ,ஜாவேத் அலி,நின்சி வின்சென்ட் ஆகியோர் பாடியுள்ளனர்

ரசித்த வரிகள்


நிலவு  எரிகையில்  விரல்கள் திரும்புதோ

நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ
ஏனேனோ எனை ஏனோ உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்

பாடல் கேக்க ரெட்டைக்கதிரே:

கிரிஷ் மிலி ,பாலாஜி பாடியுள்ளனர்.ஒட்டி பிறந்த இரு சூர்யாக்களை  பற்றிய பாடல் என நினைக்கிறேன்

ரசித்த வரிகள்
இவன் ஒரு பக்கம் அவன் மறு  பக்கம் இது  எதுவோ
பூவும் தலயும் சேர்ந்த பக்கம் பொதுவோ

பாடல் கேக்க


நாணி கோனி:

விஜய் பிரகாஷ் ,கார்த்திக் ,ஸ்ரேயா கோஷல் மற்றும் ஜசீல் பாடியுள்ளனர் .

ரசித்த வரிகள்

கொய்யும்  கண்கள் மெய்யும் பேசுமா
 நீராய் நீராய்
நீ மேகம் தாண்டி  வாராய் 
தாராய் தாராய்
என் தாகம் தாண்டி நூறாய் ..

பாடல் கேக்கயாரோ யாரோ 
கார்த்திக், பிரியா ஹிமேஷ் பாடியுள்ளனர்

இது மெல்லிய சோக பாடல்.ஏழாம் அறிவு பட பாடல் யம்மா யம்மா காதல் பொன்னமா  போல அவ்வபோது  தோன்றுகிறது


கனகாம்பர  இதழை விரித்து 
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து 
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும் ?

நிறமாலையை  போல்  நெஞ்சம் 
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்

பாடல் கேக்கSunday, August 12, 2012

3 -இது தனுஷ் படம் அல்ல ..

3,THREE

தனுஷின் 3 படம் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பிறகு விமர்சனமா என என்ன வேண்டாம் .இது வேறு!
 இத்தளம் ஆரம்பித்து நேற்றோடு இரண்டு  வருடங்கள் முடிந்தது இன்று மூன்றாவது வருட தொடக்கம்.இந்த நேரத்தில் என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த   நன்றிகள்
 • எனது  தளத்தின் மூல தனம் கவிதைகள் தான் என்றாலும் தற்போது நான் ரசித்த திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் எனக்கு தெரிந்த பிளாக்கர் டிப்ஸ் ஆகியவற்றை பதிந்து வருகிறேன் 
 • கடந்த 2 வருடங்களில் நான் எழுதிய கவிதை பதிவுகளை எல்லாம் சர்வ சாதாரணமாக திரைப்படம் தொலைக்காட்சி   சம்பந்தமான பதிவுகள் ஒரு மணி நேரத்தில்  முறியடித்து விடுகின்றன .அதற்கு காரணமான தமிழ்மணத்தின் திரைமணம் திரட்டிக்கு எனது நன்றிகள் .TAMIL10 மற்றும் ஏனைய அனைத்து திரட்டிகளுக்கும் நன்றிகள்
 • 100000+ பக்க பார்வைகளை கடக்க 2 வருடங்கள் பிடித்திருக்கிறது .முதல் வருடத்தை விட இரண்டாம் வருடம் அதிக பார்வைகள் பெற்று இருக்கிறது இத்தளம் 

   • திரைமணம் தளத்தின் SIDEBAR  இல் சின்னத்திரை பகுதியில்  எனது தொலைக்காட்சி சம்பந்தமான பதிவுகள் அதிகம் இருப்பதை காணலாம்.
    Tamil Blogs Traffic Ranking

   • 12/08/2012 நிலவரப்படி உலக அளவில் தளத்தின்  தரத்தை நிர்ணயிக்கும் ALEXA  வில் 3,27,115 வது  இடத் தில்  இருப்பதும் தமிழ் தளங்களுக்கான  தமிழ்மணத்தில்  81 வது இடத்தில்  இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி  அழிக்க கூடியவை
   • ஒரே ஒரு மனக்குறை என்னிடத்தில் உண்டு .எனது தளத்தில் அதிகம் பார்வையிட பட்ட பத்து பதிவுகளில் ஒரு கவிதை பதிவு கூட வர வில்லையே என்ற குறை இருக்கிறது .அதை போக்க முயற்சி செய்வேன் .நன்றி அன்பர்களே 

   அதிகம் பார்வையிட பட்ட முதல் 10 பதிவுகள்( தளம் ஆரம்பித்த நாள் முதல் ..)

   Thursday, August 9, 2012

   GOOGLE DOODLES நிரந்தரமாக விளையாட.. ..

   GOOGLE தனது முகப்பில் சிறப்பு விழா தினங்களுக்கு DOODLES எனப்படும் அந்த தினங்களுக்கு ஏற்ப தனது LOGO வை மாற்றி அமைக்கும் .


   • அந்த வகையில் லண்டன் ஒலிம்பிக் நடக்கும் இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டை குறிக்கும் வகையில் அதை விளையாடும் வண்ணம் அமைத்துள்ளது .
   • இன்று படகு போட்டியை அமைத்துள்ளது .வலது இடது அம்புகுறிகளை நமது கணினியில் அழுத்துவதன் மூலம் இதை விளையாடலாம் 
   விளையாட  GOOGLE   செல்லுங்கள்


   •  நேற்று BASKETBALL அமைத்தது.அதற்கு முன்பு தடகளம் .இந்த விளையாட்டுகளை எல்லாம் திரும்பி விளையாட ஆசைபடுபவர்கள் இந்த இணைப்புக்கு செல்லுங்கள் கீழே குறிப்பிட்டபடி  அழுத்தினால் பழைய DOODLES களை விளையாடலாம்

   Tuesday, August 7, 2012

   HIDDEN BLOGS வசதி -நமது DASHBOARD இல் .

   நமக்கு ஒரு தளத்தின் பதிவுகள் பிடித்திருந்தால் அத்தளத்தை FOLLOW செய்வோம் .FOLLOW செய்து FOLLOW செய்து நமது DASHBOARD நிரம்பி வழிவதை பார்த்திருப்பீர்கள் (அதிக தளத்தில் இணைந்திருந்தால் )

   • சில பதிவர்கள் பதிவுலகத்துக்கு ஒய்வு அளித்து விட்டு ஒதுங்கி இருப்பார்கள்.சில தளங்களில் ஏன் இணைந்தோம்( ?) என நினைத்திருப்பீர்கள்  அவர்கள் தளத்தை எல்லாம் UN FOLLOW செய்யாமல்   HIDDEN BLOGS ஆக மறைத்து வைக்கும் வசதியை இன்று தற்செயலாக கண்டேன்.
   •  இவ்வாறு செய்வதால் அத்தளத்தின் பதிவுகள் நமது DASHBOARD இல் மறைக்க பட்டிருக்கும் (கவனிக்க ).தேவையானால் மாற்றி கொள்ளலாம் .(தேவையில்லாத தளங்கள் என நினைப்பவற்றையும் HIDDEN BLOGS இல் போட்டு விடலாம் )

   எவ்வாறு செய்வது :(BLOGGER இன் புதிய தோற்றத்தில் ..)
   • நமது தளத்தின் DASHBOARD இல் READING LIST கீழே நாம் FOLLOW செய்யும் தளங்கள் இருக்கும் அத்தளங்களை தொடும் போது ஒரு கீழ்நோக்கு அம்பு குறி தோன்றும். 
   • அதை கிளிக் செய்தால் போதும் கீழே இருப்பது போன்று HIDDEN BLOGS இல் அத்தளம் சேர்ந்து விடும் 

   மீண்டும் கொண்டுவர:
    
   • மீண்டும் கொண்டுவர HIDDEN BLOGஇல் தளத்தில் மேல் தொடும் போது மேல்  நோக்கு அம்பு குறி தோன்றும்
   • அதை கிளிக் செய்தால் DASHBAOARD இல் அத்தளத்தின் பதிவுகள் வந்து விடும்

   குறிப்பு :எனது தளத்தை HIDDEN BLOGS இல் போட்டுடாதீங்க படிச்சுட்டு ..

   உங்கள் பார்வைக்கு :


   Sunday, August 5, 2012

   நட்பு ஒன்று போதுமே ....

   FREINDSHIP DAY
   காதல்
   கைவிடும்போதும்
   மன  உளைச்சலில்
   காலன் துரத்திடும் போதும்
   நட்பு ஓன்று போதுமே
   நம் உயிர் காத்திட ..   இயந்திர
   இதயங்கள்
   இளைப்பாறி
   கொள்வது
   இனிய நட்பு
   கிடைத்தால் தானே !

   நட்பு ஒன்று போதுமே!
   உறவுகள்
   கைவிடும் போது..
   துன்பத்தில்
   தோள் கொடுப்பதும்
   இன்பத்தில்
   இணைந்திருப்பதும் தானே
   நட்பு ,,


   Saturday, August 4, 2012

   விஜய் டிவி யின் "அது இது எது" இனி?

   ATHU ITHU YETHU
   கடந்த 3 வருடங்களாய் சனிக்கிழமை இரவு7 மணிக்கு விஜய் டிவியில்ஆக்கிரமித்திருந்த "அது இது எது " நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு பதில் இனி  சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மா கா பா  தொகுக்கிறார்


   இன்றைய நிகழ்ச்சி :
   • இவருக்கு பதில் இவர் என்று நெடுந்தொடர்களை போல் காட்டாமல் சிவா கார்த்திகேயனே  வந்து ஒரு சுற்றையும் நடத்தி விடை பெற்று சென்றார்
   • மா கா பா வின் முதல் நிகழ்ச்சி என்பதால் இறுதி சுற்றான  மாத்தி யோசி இந்த வாரம் இல்லை 
   • சிவகார்த்திகேயன் மாத்தியோசி சுற்றில் தனது இயல்பான நகைச்சுவை திறனால்  ஒரு கலக்கு கலக்குவார்
   • படங்களில் நடிப்பதால் தன்னால் நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலையை விளக்கினார் சிவா 
   SIVA KARTHIKEYAN,ATHU ITHU YETHU

   நிகழ்ச்சி எப்படி ?

   மொத்தம் மூன்று சுற்றுகள் .மூன்று பங்கேற்பாளர்கள்
   • GROUP ல டூப்
     ஏதாவது ஒரு தொழில்  புரிவோருடன் அந்த தொழிலில் இல்லாதஒரு நபரை கண்டுபிடிப்பது ODD MAN OUT போன்றது
   • சிரிச்சா போச்சு :
    நகைச்சுவை நடிகர்கள் அடிக்கும் லூட்டிக்கு சிரிக்காமால் இருப்பது தான் சுற்று .பெரும்பாலும் ரோபோ சங்கர் காமெடி பண்ணுவார்  இந்த சுற்றில்..
   • மாத்தி  யோசி :
   போட்டியை நடத்துபவர் கேக்கும் கேள்விகளுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் பேச வேண்டும் .2 நிமிடங்கள் தாக்கு பிடிக்க வேண்டும் .சிவா கார்த்திகேயனின் நகைச்சுவை பேச்சால் 1 நிமிடங்கள் கூட யாரும் தாக்கு பிடிக்க மாட்டார்கள் .இனி எப்படியோ ..

    உங்கள் பார்வைக்கு

   Wednesday, August 1, 2012

   எனது தளத்தில் உங்கள் தளம் ..

   கருத்தாளர் -ஜூலை

   நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு

   நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டி  அதிக பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தின் முகப்பில்   ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன் . 
    கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 12 பதிவுகள்  என்னால் வெளியிடப்பட்டது .அதில் என்னை நெகிழ வைத்த  கருத்துக்கள் கீழே


   உயிரை உருவி போட்டவளே  என்ற பதிவிற்கு அன்பர் அளித்த கருத்து கீழே
   Chella Thana said...
   இந்த காலத்துல ஆண்களை விட பெண்களுக்கு தான் துணிவு கூட !! நம்ம கண்ண மட்டும் இல்ல காது, மூக்கு, வாய் எல்லாத்தையும் பார்த்து சொல்லுவாங்க..... கவிதை மிகவும் அருமை நண்பா.. ஏமாற்றப்பட்ட ஆண்களோட மனக்குமுறல 4 வரியில நச்சுனு சொல்லிருக்கிங்க , நன்றி .....
   ********************************************************************************
    என்ற கவிதைக்கு அன்பர் அளித்த உண்மையான கருத்து கீழே

   இக்பால் செல்வன் said...
   //மரணம் பிடிக்கிறது எனக்கு நீ என்னிடம் பேசாத நாட்களில் .. // பெண்களும் இதைச் சொல்லுவார்கள்.. ஆனால் செய்ய மாட்டார்கள். ஆண்கள் சொல்வதில்லை பல தடவைகளில் செய்து விடுவதுண்டு .****************************************************************************
    என்ற பதிவு நான் ஒன்றே முக்கால் வருடம் எழுதிய பதிவுகள் பக்க பார்வைகளை எல்லாம் இரண்டே நாட்களில் உடைத்தெறிந்த பதிவு .எனது மொத்த பதிவுகளில் இது தான் இப்பொழுது முதல் இடம் பக்க பார்வைகளில் ..இந்த பதிவிற்கு அன்பர் அளித்த கருத்து கீழே 
   இக்பால் செல்வன் said...
   சூர்யா இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை . நன்றாக நடிப்பது தெரிகின்றது .. கேள்விகள் சுலபமாக இருந்தும் பலருக்கு பதில் தெரியாதது ஏன் எனவும் சிந்தித்ததுண்டு .. ஒரு வேளை பதற்றமோ என்னவோ. சன் டிவி எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சுங்க. மனுசன் பார்ப்பானா அதை ?
    *******************************************************************************
   என்ற கவிதைக்கு பலர் பலவித கருத்து அளித்து என்னை நெகிழ வைத்தனர் .சில தர்ம சங்கட கருத்துகளும் கீழே அரசனின் கருத்து
   அரசன் சே said...
   உங்களுக்கு திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து இந்த பதிவை நான் உங்க வீட்டம்மாவுக்கு பரிசளிக்க முடிவு செய்துள்ளேன் .. உங்க கருத்து என்ன பாஸ் ... மாறுபட்ட சிந்தனை .. கவிதை அருமை ... என் வாழ்த்துக்கள் அன்பரே
   ***********************************************************************
     நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS
    என்ற பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே
    
    திண்டுக்கல் தனபாலன் said...
   இப்படி தான் பேச வேண்டும் அல்லது இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் பணம் வாங்கிய பின்... அது போல் செய்யவில்லை என்றால் எப்படி...? SIIMA AWARDS: 2011 WINNERS - நல்ல தொகுப்பு... நன்றி நண்பா... .  ************************************************************************
   என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்தும் எனது பதிலும்
   மயிலன் said...
   என் உயிர் உன் அடிவயிற்றில் உள்ளிரிருந்து கொஞ்சம் உதைக்க வேண்டும்..எப்பொழுது நடக்குமடி அது..? சும்மா... தலைப்ப பாத்ததும் கொஞ்சம் ஃபீல் ஆயிட்டேன்... நல்லாருக்கு பிரேம்...:)  
   @ மயிலன்//போங்க பாஸ் கவிதைக்கு 18+ வைக்க வைச்சுடீவீங்க போல
   ***********************************************************************************
    மேற்கண்ட கருத்துகளை தவிர இன்னும் பல கருத்துக்கள் இருக்கின்றன  பதிவின் நீளம் கருதி  அவை குறிப்பிட பட வில்லை.பல பதிவுகளுக்கு வந்து சிறப்பான கருத்துகளை அளித்த அன்பர் கோடங்கி  தளத்தின் உரிமையாளர் " இக்பால் செல்வன் " அவர்களுக்கு ஜூலை மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுத்து இருக்கிறேன் நன்றி

   முந்தைய கருத்தாளர்கள்  
   மே  மாதம்        :சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  வரலாற்று சுவடுகள்  
   ஜூன் மாதம்    :சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  """  என் ராஜபாட்டை"  ராஜா 
   இந்த கருத்தாளர் சிறப்பு  வழங்கிய மே மாதம் முதல் எனது பதிவுகளுக்கு TEMPLATE கருத்துக்கள் அளிக்காமல் தரமான கருத்துக்கள் அன்பர்களால் வழங்குவது அதிகரித்திருப்பதை காண்கிறேன் .அந்த வகையில் அளப்பரிய மகிழ்ச்சி எனக்கு நன்றி

   உங்கள்  பார்வைக்கு :