Sunday, November 18, 2012

WINDOWS 8 வாங்கிய பின் செய்ய வேண்டியது என்ன ?

இந்த பதிவை படிக்கும் முன் WINDOWS 8 வாங்குவது பற்றிய எனது முந்தைய பதிவை WINDOWS 8- வாங்கும் முன் செய்ய வேண்டியது என்ன ?ஓர் அலசல்  படித்து விட்டு வாருங்கள் இப்பதிவு WINDOWS 8 வாங்கிய பின் செய்ய வேண்டியவைகளை குறிப்பிடுகிறது



WINDOWS 8 வாங்கி இன்ஸ்டால் செய்த பிறகு நீங்கள் உங்கள் கணினிக்கு அமைத்த PASSWORD ஐ கொண்டு உள்நுழையுங்கள் .

PICTURE PASSWORD
WINDOWS 8 இல்  உள்ள புதிய அம்சம் இது இதன் மூலம் நீங்கள் ஒரு படத்தை தேர்ந்து எடுங்கள் அதில் வட்டம் நேர்கோடு வரையுங்கள் எந்த இடத்தில்  வரைகிறோம்  என்பதை அதன் அளவை நினைவில் கொள்ளுங்கள் .


கணினியில் வலது மூலையில் கர்சரை கொண்டு சென்றால் கீழ்க்கண்டதை   போன்று வரும் .அதில் தேவையானதை தேர்வு செய்யலாம்


.
இடது மூலையில் கர்சரை கொண்டு சென்றால் இயக்கத்தில் உள்ள APPLICATION களை காட்டும் அதில் RIGHT CLICK செய்து CLOSE செய்யலாம்


MICROSOFT MAIL இல் உறுப்பினராவது பல வசதிகளை தரும் .உறுப்பினர் ஆகி கொண்டு வலது மூலையில் கர்சரை கொண்டு கீழே SETTINGS செல்லுங்கள் அங்கு  CHANGE PC SETTINGS செல்லுங்கள்



அங்கு SWITCH TO MICROSOFT ACCOUNT என்பதை தேர்வு செய்யுங்கள் .உங்கள் MICROSOFT MAIL PASSWORD கொண்டு உள்நுழையுங்கள்  அவ்வளவு தான் இனி உங்கள் கணினி க்கு மைக்ரோசாப்ட் MAIL PASSWORD  கொண்டு நுழையலாம் .இதன் மூலம் பல GAMES ,APPLICATION பதிவிறக்க முடியும்
\

மொழி பிரச்சனை 

கணினியை அதன்  பிறகு மீண்டும் துவங்குகையில் இணைய இணைப்பு MBLAZE,AIRCEL TONGLE போன்றவை மூலம் பெற்று இருந்தால் YOUR PC IS OFFLINE PLEASE ENTER OLD PASWORD என்று காட்டும் அப்போது மொழியை ENGLISH(UK) இல் இருந்து ENGLISH(US) க்கு மாற்றுங்கள் இப்போது எந்த பிரச்சனையும் இருக்காது .

APPLICATION  TILE 

WINDOWS 8 SCREEN இல் APPLICATION கள் TILES போன்று பதியபட்டிருக்கும் அதில் RIGHT CLICK செய்து சிறிதாக்கி அல்லது பெரிதாக்கி கொள்ளலாம் .APPLICATION களை DRAG செய்து நமக்கு விருப்பபடி வைத்து கொள்ளலாம்


WINDOWS 8 இல் LOCKCREEN ,START SCREEN  என்ற இரண்டு உள்ளது அதில் நமது விருப்பட்ட படங்களை வைத்து கொள்ளலாம்

இதற்கு முந்தைய பகுதி :






விரைவில் 

  • WINDOWS 8 வசதிகள் ஒரு விரிவான அலசல் 

Sunday, November 11, 2012

WINDOWS 8- வாங்கும் முன் செய்ய வேண்டியது என்ன ?ஓர் அலசல்

WINDOWS 8 பற்றி இணையத்தில் படித்ததில் இருந்து அதை பயன்படுத்த ஆசை உண்டானது .WINDOWS  8 பற்றியும் அதன் வசதிகள் பற்றியும் மேலும் எனது  சுக துக்க அனுபவங்கள் பற்றியும் எழுதலாம் என நினைக்கிறேன்  .

இப்பதிவின் நீளம் கருதி தொடராக அடுத்தடுத்து வெளியிட உள்ளேன் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது


WINDOWS 8 வாங்கும்முன்..


  • MICROSOFT  இன் மெயிலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.இது பல APPLICATION,GAMES யை தரவிறக்க உதவும் 
  • விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் எதுவும் அழியாது. 
  •  மற்ற விண்டோஸ் வெர்சன்களில் இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும்.
  • WINDOWS 8 வாங்கும் முன் உங்கள் கணினி அதற்க்கு ஏற்றதா என கண்டறிய இந்த WINDOWS 8 UPGRADE ASSISTANT தரவிறக்கி கொள்ளுங்கள் .இது உங்கள் கணினி ஏற்றதா எவை விண்டோஸ் 8ஏற்று  கொள்ளாது  என காட்டும் .
  • பின்னர் WINDOWS 8 வாங்க CREDIT CARD ,PAYPAL  மூலம் இணையத்தில் பெறலாம் 
  • விண்டோஸ் 7 PC யை ஜூன் 2 ,2012 க்கு பிறகு வாங்கி இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் WINDOWS 8க்கு மாற   699 ரூபாய் செலுத்தினால் போதும்    (You must purchase a qualifying Windows 7 PC between 2 June 2012 and 31 January 2013 to be eligible for this offer. The last day to register and order your Windows 8 upgrade is 28 February 2013.)
  • மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்
  • இந்த நாட்களில் கணினி வாங்காதவர்கள் ரூபாய் 1990 செலுத்தி வாங்கலாம் 

சுக துக்க அனுபவங்கள் 
  • WINDOWS 8 UPDATE செய்ய முடிவு செய்திருந்தால் அதை டவுன்லோட் செய்ய உங்கள் இணைய இணைப்பு சிறப்பாக இருந்தால் நல்லது .இல்லையேல் 2 நாட்களுக்கு மேல் கூட ஆகலாம் .மின் இணைப்பும் அவசியம் (எனக்கு அப்படி தான் ஆனது )
  • இல்லையேல் 2GB FREE DOWNLOAD க்கு RECHARGE செய்யவும் .குறைந்தது 6 மணி நேரத்தில் DOWNLOAD ஆகும் 
  • மிக மெதுவான இணைய இணைப்பால் எனக்கு 2 நாட்கள் பிடித்தது தரவிறக்க  !
மேலும் சுக துக்க அனுபவங்கள்  அடுத்தடுத்த பகுதிகளின் இறுதியில் ..


  • பகுதி -2 :

WINDOWS 8 வாங்கிய  பிறகு செய்ய வேண்டியது என்ன ?-மற்றும் அனுபவங்கள் 


  • பகுதி -3

WINDOWS 8 இன் சிறப்பம்சங்கள்  ஓர் பார்வை 


  • பகுதி -4





  • பகுதி -5