Sunday, November 18, 2012

WINDOWS 8 வாங்கிய பின் செய்ய வேண்டியது என்ன ?

இந்த பதிவை படிக்கும் முன் WINDOWS 8 வாங்குவது பற்றிய எனது முந்தைய பதிவை WINDOWS 8- வாங்கும் முன் செய்ய வேண்டியது என்ன ?ஓர் அலசல்  படித்து விட்டு வாருங்கள் இப்பதிவு WINDOWS 8 வாங்கிய பின் செய்ய வேண்டியவைகளை குறிப்பிடுகிறது



WINDOWS 8 வாங்கி இன்ஸ்டால் செய்த பிறகு நீங்கள் உங்கள் கணினிக்கு அமைத்த PASSWORD ஐ கொண்டு உள்நுழையுங்கள் .

PICTURE PASSWORD
WINDOWS 8 இல்  உள்ள புதிய அம்சம் இது இதன் மூலம் நீங்கள் ஒரு படத்தை தேர்ந்து எடுங்கள் அதில் வட்டம் நேர்கோடு வரையுங்கள் எந்த இடத்தில்  வரைகிறோம்  என்பதை அதன் அளவை நினைவில் கொள்ளுங்கள் .


கணினியில் வலது மூலையில் கர்சரை கொண்டு சென்றால் கீழ்க்கண்டதை   போன்று வரும் .அதில் தேவையானதை தேர்வு செய்யலாம்


.
இடது மூலையில் கர்சரை கொண்டு சென்றால் இயக்கத்தில் உள்ள APPLICATION களை காட்டும் அதில் RIGHT CLICK செய்து CLOSE செய்யலாம்


MICROSOFT MAIL இல் உறுப்பினராவது பல வசதிகளை தரும் .உறுப்பினர் ஆகி கொண்டு வலது மூலையில் கர்சரை கொண்டு கீழே SETTINGS செல்லுங்கள் அங்கு  CHANGE PC SETTINGS செல்லுங்கள்



அங்கு SWITCH TO MICROSOFT ACCOUNT என்பதை தேர்வு செய்யுங்கள் .உங்கள் MICROSOFT MAIL PASSWORD கொண்டு உள்நுழையுங்கள்  அவ்வளவு தான் இனி உங்கள் கணினி க்கு மைக்ரோசாப்ட் MAIL PASSWORD  கொண்டு நுழையலாம் .இதன் மூலம் பல GAMES ,APPLICATION பதிவிறக்க முடியும்
\

மொழி பிரச்சனை 

கணினியை அதன்  பிறகு மீண்டும் துவங்குகையில் இணைய இணைப்பு MBLAZE,AIRCEL TONGLE போன்றவை மூலம் பெற்று இருந்தால் YOUR PC IS OFFLINE PLEASE ENTER OLD PASWORD என்று காட்டும் அப்போது மொழியை ENGLISH(UK) இல் இருந்து ENGLISH(US) க்கு மாற்றுங்கள் இப்போது எந்த பிரச்சனையும் இருக்காது .

APPLICATION  TILE 

WINDOWS 8 SCREEN இல் APPLICATION கள் TILES போன்று பதியபட்டிருக்கும் அதில் RIGHT CLICK செய்து சிறிதாக்கி அல்லது பெரிதாக்கி கொள்ளலாம் .APPLICATION களை DRAG செய்து நமக்கு விருப்பபடி வைத்து கொள்ளலாம்


WINDOWS 8 இல் LOCKCREEN ,START SCREEN  என்ற இரண்டு உள்ளது அதில் நமது விருப்பட்ட படங்களை வைத்து கொள்ளலாம்

இதற்கு முந்தைய பகுதி :






விரைவில் 

  • WINDOWS 8 வசதிகள் ஒரு விரிவான அலசல்