Sunday, December 30, 2012

தமிழ் சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்கள் 2012


2012 இல் பல தமிழ் படங்கள் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்து உள்ளது .அவற்றில் நான் ரசித்த பார்த்த படங்கள் பற்றிய எனது எண்ணங்கள் கீழே

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காதலில் சொதப்புவது எப்படி :

 •  நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு   வாழ்த்துக்கள் பாலாஜி. 
 • ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள்  என்பதே கதை.
 • நெகடிவ் க்ளைமாக்ஸ் இல்லை.சுவிட்சர்லாந்து டூயட் இல்லை.தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை உடைத்து எரிந்திருக்கிறது  இப்படம்.
 • "இத சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா!"என அமலாபால் சித்தார்த்திடம் சொல்லும் அழகே தனி!
 • இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் ஈ 

 • நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து  வில்லனை பழிவாங்குவது தான்  கதை 
 • ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா  கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால்  மனித இனம் படும் சின்ன  சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
 • இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
 • இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

VIJAY SETHUPATHI
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

 • தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை கிழித்தெறிந்த படம் .முக்கால்வாசி படத்தில் காதாநாயகி இல்லை.
 • தலையில் அடிபட்டதால் கடந்த ஒரு வருடத்தில் நடந்தைவை அனைத்தும் மறந்த நாயகனுக்கு அவன் திருமணமும் மறந்து விடுகிறது .அவனது நண்பர்கள் அதை மறைத்து  திருமணத்தை எப்படி நடத்தினார்கள் என்பது தான் கதை .
 • நட்பின் பெருமையை சொல்லும் படம் 

  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
  உங்கள் பார்வைக்கு :  Saturday, December 29, 2012

  சதை தின்னும் மிருகமா நீ ?-18+


  சதை தின்னும் மிருகமா நீ
  பிணம் தின்னும் கழுகா நீ
  மனிதன் இல்லையா நீ !
  சதைக்கு  அலைவதேன் ?

  மரண தண்டனை உனக்கு
  தீர்வாகுமா ?-கற்பழிக்க துடிக்கும்
  உன் ஆண் உறுப்பை
  அறுத்து எரிய வேண்டாமா ?
  சதை தின்ன அலையும்
  மனிதனல்லவா நீ !

  செய்தி :டெல்லியில் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் மரணம்

  உங்கள் பார்வைக்கு :


  Tuesday, December 25, 2012

  WINDOWS 8 க்கு பிரத்யேக START MENU இப்போது ..

  WINDOWS-8 START MENU

  WINDOWS 8 க்கு உரிய சிறப்பே அதன் APPLICATION  TILES  போல  பதிக்க  பட்டு இருப்பது தான் .ஆனால் எப்போதும் போல START  MENU  இல்லையே WINDOWS 8 இல் என கவலைபடுபவர்களுக்கு இந்த பதிவு  POKKI 

  • POKKI  என பெயரிபட்டுள்ள இந்த APPLICATION  START  MENU  இல்லையே என கவலைப்படுவர்களுக்கு ஒரு தீர்வு .
  • விண்டோஸ் 7 START  MENU  வில் என்னவெல்லாம் உள்ளதோ அது எல்லாம் இதில் உள்ளது .இதை இன்ஸ்டால் செய்வதால் WINDOWS 8 இன் அம்சங்கள் ஏதும் பாதிக்கபடுவதில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு 


  POKKISTORE :


  • இந்த START  MENU  வில் இணைந்துள்ள கூடுதல் அம்சம் இது .இது WINDOWS  STORE  போன்ற ஒரு  APPLICATION கடை .பல விலை கொடுத்து வாங்க கூடிய மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன .ANGRYBIRDS  GAME  முழுத்திரையில் விளையாட இங்கு பதிவிறக்கி கொள்ளலாம் 


  • இதை DOWNLOAD  செய்ய இங்கு செல்லுங்கள் 


  • FREEMAKE  VIDEO  CONVERTOR  வைத்திருப்பவர்கள் அந்த மென்பொருளை UPADATE  செய்தால் போதுமானது .இந்த மென்பொருள் இணைந்தே  தரப்படுகிறது .
  உங்கள் பார்வைக்கு :


  Sunday, December 23, 2012

  நமது தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க ..


  கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கிவிட்டது.நமது தளத்தில் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு . 

  புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக .. 


    இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்


  முதலில் பிளாக்கர் சென்று

  ப்ளாக்கரின் புதிய தோற்றத்தில் BLOGGER>>>LAYOUT>>>ADD A GADGET>>HTML JAVASCRIPT தேர்வு செய்யவும்
  (பழைய தோற்றத்தில் DESIGN>>PAGE ELEMENTS>>ADD A GADGET 
  செல்லவும் .அங்கு HTML JAVASCRIPT  தேர்வு செய்யவும்) .

  பின்பு கீழே   உள்ள படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களின் IMAGE  URL  யை COPY செய்யவும்  (படங்களின் மீது RIGHT CLICK செய்து  COPY IMAGE LOCATION தேர்வு  செய்யவும் )


  பின்பு பின்வரும் கோடிங்கில் IMAGE LINK 1 மற்றும்  IMAGE LINK 2 என்ற  இடங்களில்  அதனை   PASTE செய்யவும்  SAVE செய்யவும்  .

  <div style='position: fixed; top: 0%; left: 0%;'/>
  <a href="http://kavithaiprem.in/" target="_blank"><img alt="கிறிஸ்துமஸ்" title="கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் " src="IMAGE LINK 1></a>
  </div>
  <div style='position: fixed; top: 0%;right: 0%;'/>
  <a href="http://kavithaiprem.in/" target="_blank"><img alt="கிறிஸ்துமஸ்"title="கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் "
   src="IMAGE LINK 2></a>
  </div>  Blog Tips
  இனி  உங்கள்  தளத்தின்  இருபுறமும்   உங்களுக்கு  பிடித்த  கிறிஸ்துமஸ்  படங்கள் ,வாழ்த்துக்கள்  ஜொலிக்கும் .  

  குறிப்பு :மேலே உள்ள படங்கள் 150 *100  அளவில் சுருக்கப்பட்டவை .உங்களுக்கு வேறு ஏதேனும் படங்களை இணைக்க விரும்பினால் 150 *100  அளவில் சுருக்கி இணைக்கவும்.உங்கள் தளத்திற்கு ஏற்றபடி இதன் அளவை மாற்றி கொள்ளவும்   Friday, December 21, 2012

  "SUNRISERS"-SUN குழுமத்தின் புதிய IPL அணியா?


  சன் குழுமம் கால் பதிக்காத துறைகளுள் கிரிக்கெட்டும் ஒன்று.தற்போது அதிலும் தனது முத்திரையை குறிக்க களம் இறங்கி விட்டது
  • பணம் கொழிக்கும் IPL இல் நீக்கப்பட்ட DECAN CHARGERS க்கு பதிலாக களம் இறங்கியிருப்பது தான் SUNRISERS IPL TEAM .இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் விளம்பரம் இப்போது சன் நெட்வொர்க்கில் வெளியாகி இருப்பதை காணலாம் 
  • சூரியனை வெறித்து பார்க்கும் கழுகு போன்று அதன் லோகோ உள்ளது 


  • வருடத்துக்கு 85.05 கோடி கொடுத்து 5 வருடங்களுக்கு வாங்கி இருக்கிரது 
  • பயிற்சியாளராக ஆஸ்திரேலியா வை சேர்ந்த TOM MOODY நியமிக்கபட்டு இருக்கிறார் 
  • ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்மன் MENTOR ஆக செயல்படுவர் 
  SUNRISERS பற்றிய வீடியோ 


  Wednesday, December 19, 2012

  ஆங்கில பத்திரிகைகளில் உங்கள் தளம்....


  ஆங்கில பத்திரிகையில் எனது தளத்தை பற்றி செய்தியுடன் எனது படமும் ..

  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


  கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கியதற்காக ரூபாய் நோட்டில் எனது படம் 

  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  FBI AGENT ஆக இருந்த போது..

  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

  இறுதியாக ஒபாமா பாராட்டி விருது அளிக்கிறார்   உங்கள் தளமும்  ஆங்கில பத்திரிகைகளில் வர வேண்டுமா ? ஒன்றும் செய்ய தேவை இல்லை..இந்த தளத்திற்கு  செல்லுங்கள்.உங்களுக்கு பிடித்த டிசைன் இல் உங்கள் போட்டோவை ஏற்றி நமது கனவுகளை எல்லாம் நனவாக்குங்கள் .
  நமது முயற்சி இருந்தால் இவை எல்லாம் நிஜமாக கூட வாய்ப்பு உண்டு .முயற்சிப்போம் அன்பர்களே !

  WINDOWS 8 பற்றி அறிய ஆவலா! கீழே கிளிக்குங்கள் 


  Sunday, December 16, 2012

  பதிவுலக சங்கங்கள்-ஒரு ஜாலி கற்பனை


  பதிவுலகத்தில் பதிவர்களுக்கு தெரியாமலேயே பல சங்கங்கள் இயங்கி வருகிறது .அவை பற்றி ஒரு கற்பனை பதிவு .முழுக்க முழுக்க கற்பனையே 


  வருத்தப்படாத வாலிபர் சங்கம்

  இந்த சங்கம் நடிகர்  வடிவேல் வசம் இருந்தாலும் பதிவர்கள் வசமும் இருக்கிறது.உங்கள் கருத்தை ,ஓட்டை எதிர்பார்க்க மாட்டார்கள்.(உள்ளூர எதிர்பார்க்கலாம் )ஆனால் அவர்கள் கடமையை செவ்வனே செய்வார்கள்.கருத்து ,ஓட்டை உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தருவார்கள் .நமக்கே அலுப்பாகி என்ன எல்லா பதிவுக்கும் வாரானே நாமளும் போவோம் என தோன்ற வைத்து விடுவார்கள்


  மொய்க்கு மொய் வைப்போர் சங்கம்

  இந்த சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான பதிவர்களின் தளத்தில் நீங்கள் கருத்திட்டால் உடனடியாக உங்கள் பதிவுக்கு கருத்து இடப்படும் .நீங்கள் பதிவே எழுதாமல் பல மாதங்கள் ஆகி இருந்தால் கூட உங்கள் பழைய பதிவுக்கு கருத்து போடுவார்கள் .அவ்வளவு நல்ல பதிவர்கள்

  மொய்க்கு மொய் வைக்காதோர் சங்கம்

  இந்த சங்கத்தில் உள்ளவர்கள்  பணி பதிவு போடுவதே .கருத்து இடுவது அல்ல.மொய்க்கு மொய் கிடைக்காது .இருப்பினும் அந்த தளங்களில் நீங்கள் கருத்திட்டால் நீங்களும் பிரபல பதிவராகும் வாய்ப்பு உண்டு .
  ஓட்டுக்கு ஓட்டு சங்கம்

  மொய்க்கு மொய் சங்கத்தின் கிளை இது .ஒரு பதிவுக்கு நீங்கள் ஒட்டு போட்டால் அவர்களும் ஓட்டு போடுவார்கள் போடவில்லையெனில் நமக்கும் கிடைக்காது

  ஓட்டுக்கு ஓட்டு போடாதோர் சங்கம்

  நீங்க என்ன தான் மாங்கு மாங்குன்னு ஓட்டு போட்டாலும் உங்களுக்கு இந்த சங்கத்தில் உள்ளவர்கள் ஓட்டு போடமாட்டார்கள்.கருத்தும் கிடைக்காது .இருப்பினும் நீங்களும் பிரபலமாக வாய்ப்பு உண்டு

  இது தவிர மேலும் பல சங்கங்கள் உண்டு ஆனால் அது தேவை இல்லை என நினைக்கிறேன் .இப்பதிவு உண்மையாக தெரிந்தாலும் முழுக்க முழுக்க கற்பனையே .

  நீங்கள் எந்த சங்கத்தில் இருக்கீறீர்கள்  என கருத்துரையில் தெரிவியுங்கள் அன்பர்களே !

  உங்கள் பார்வைக்கு :  Saturday, December 15, 2012

  4tamilmedia.com இல் எனது WINDOWS 8 பதிவுகள்


  WINDOWS 8 பற்றி மூன்று தொடர்பதிவுகள் எழுதி இருந்தேன் .அதில் இரண்டை தங்களது தளத்தில் பிரசுரிக்க அனுமதி கேட்டு அனைத்து விதமான செய்திகளையும் பகிர்ந்து வரும் தளமான WWW.4TAMILMEDIA.COM சார்பாக மின்னஞ்சல் வந்தது.  நான் அனுமதி அளித்ததை தொடர்ந்து அந்த பதிவுகள் டிசம்பர் 12 அன்று மீள்பிரசுரிக்கபட்டது.அந்த பதிவின் இணைப்பு கீழே  WINDOWS 8 தொடர்பான எனது பதிவுகள் 

  முதல் பதிவு :

     இரண்டாம் பதிவு :


  மூன்றாம் பதிவு :

   
  எனது பதிவுகள் மற்றொரு  தளத்தில் பதிவாவது  இதுவே முதல்முறை .அதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் 

  பிரேம்குமார்.சி 


  Tuesday, December 11, 2012

  ஸ்பைடர்மேனை காப்பாற்றிய ரஜினி


  ரஜினி   தமிழ்கதாநாயக தோற்றத்தையே மாற்றி அமைத்தவர் .63 வது பிறந்த நாள் கொண்டாடும் ரஜினி பற்றி நெட்டில் உலவும் வீடியோ க்கள் பற்றி இந்த பதிவு .இது பற்றி  அவரிடம் கேட்டபோது  இன்றைய இளைய தலைமுறையினர் அபார படைபாற்றல்  மிக்கவர்கள் என கூறியதாக விகடன் தெரிவிக்கிறது


  SPIDERMAN  ஐ காப்பாற்றும் ரஜினி 

  • விண்வெளியில் இருந்து வந்துள்ள புதிய உயிரியை அளிக்க SPIDERMAN  எவ்வளவோ முயன்றும் முடியாமல் ரஜினிக்கு போன் செய்கிறார் SPIDERMAN .
  • ரஜினி எரிமலையின்  மேல் நின்று கொண்டு புகை பிடித்து கொண்டிருக்கிறார் .SPIDERMAN  போன்  கண்டதும் அங்கு செல்லும் ரஜினி ராக்கெட்  கொண்டு அந்த உயிரியை ராக்கெட்டில் அடைத்து விண்வெளிக்கே திருப்பி அனுப்பி உலகை காக்கிறார் .இதான் இந்த வீடியோவின் கதை  பாருங்கள்  ரசியுங்கள்   BADLUCK  ரஜினிக்கு இல்லை 

  • இது IDBI  வங்கிக்காக தயாரிக்கப்பட்ட விளம்பரம்..ரஜினி தங்கச்சி கல்யாணம் ,அம்மா கண் ஆபரேசனுக்காக  உண்டியலில் பணம் போடுகிறார் 
  • அப்போது வந்த வில்லன் பணத்தை பறித்து கொண்டு ஓடுகிறான் காரில் துரத்தி செல்லும் ரஜினி NOPARKING  முன்பு வந்து PARK  செய்கிறார் NOPARKING  இல் உள்ள NO  வை கண்களால் அளித்து விட்டு ..
  • வில்லன் கோலி  குண்டு விளையாட  அழைக்கிறான் .ரஜினி வீசிய கோலி  குண்டு வானில் உள்ள கிரகங்களில்  எல்லாம் மோதி இறுதியில்  வில்லனின்  கோலி  குண்டை பதம் பார்க்கிறது .
  • வில்லன்  துப்பாகியால் சுடுகிறான் .குண்டு  ரஜினியின் ஒரு  காது வழியாக நுழைந்து  இன்னொரு காது வழியாக வெளி வந்து வில்லனை கொல்கிறது  .இது தான் இந்த வீடியோவின் கதை கண்டிப்பாக பாருங்கள் மனம் வீட்டு சிரிக்கலாம்   புலியை காப்பாற்றும் ரஜினி :
  காட்டில் வீரப்பன் புலியை துப்பாக்கி கொண்டு சுடுகிறார்  அப்போது அங்கு வரும் ரஜினி தோட்டாவை PARLE -G BISCUT  கொண்டு பிளந்து புலியை காப்பாற்றுகிறார் .
  இன்னும் பல வீடியோக்கள் YOUTUBE  இல் கொட்டி கிடைக்கிறது பார்த்து ரசியுங்கள்

  உங்கள் பார்வைக்கு :

  Friday, December 7, 2012

  விஸ்வரூபம் பாடல்கள் -ஓர் அலசல்


  விஸ்வரூபம் பட பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.விஸ்வரூபம் என தொடங்கும் பாடல்  தவிர மற்ற  அணைத்து பாடல்களிலும்  கமல் இணைந்து பாடியிருக்கிறார்

  மொத்தம் 5 பாடல்கள்( REMIX பாடலையும் சேர்த்து )பாடல்கள் பற்றி எனது எண்ணமும் பாடல் இணைப்பும் கீழே .Shankar-Ehsaan-Loy இசை அமைத்துள்ளார் 

  உன்னை காணாது :
  • கமல் ,ஷங்கர் மகாதேவன் இணைந்து பாடி உள்ளனர் , கமல்  எழுதி உள்ளார் 
  • மெல்லிசை பாடல்.கமலின் இசை வரிகளோடு ஆரம்பிக்கிறது .
  • தசாவதார முகுந்தா முகுந்தா பாடல் போல உள்ளது  கிருஷ்ணர் பெருமை பாடுகிறது கமல் நாத்திகரா ஆத்திகரா கடவுளுக்கே வெளிச்சம்
  ரசித்த வரிகள்

  உடல் அணிந்த ஆடை போல
  எனை அணிந்து கொள்வாயா
  இனி நீ இனி நீ கண்ணா
  தூங்காத என் கண்ணின்
  துகில் உரித்த கண்ணன் தான்
   இனி நீ இனி நீ  விஸ்வரூபம் 
  • சுராஜ் ஜகன் பாடியுள்ளார்  வைரமுத்து எழுதி உள்ளார் 
  • அடி தொண்டை வலிக்க பாடுகிறார் பாடகர்

  ரசித்த வரிகள் 

  சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே  கிடப்பான்
  வெட்டு படும் வேலையில்  வெளிப்படும் விஸ்வரூபம்

  எந்த ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்
  சொந்த ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்  விஸ்வரூபம் -REMIX

  மேலே கண்ட பாடலின் REMIX இது .பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் தெரிய வில்லை  துப்பாக்கி எங்கள் தோளிலே

  • பென்னி தையல் ,கமல் பாடியுள்ளனர்  வைரமுத்து எழுதி உள்ளார் 
  • ஆங்கில பாடல் போல ஆரம்பிக்கிறது 

  ரசித்த வரிகள் 
  எங்களில் கையில் ஆயுதங்கள்  இல்லை
  ஆயுதங்கள்  கையில் எங்கள் உடல் உள்ளது  அணு விதைத்த பூமியிலே :

  • கமல் ஹாசன் நிகில் பாடியுள்ளனர் கமல்  எழுதி உள்ளார் 
  • மெல்லிய சோக பாடல் இது 

  WINDOWS-8 பற்றி அறிய ஆவலா ?கீழே கிளிக்குங்கள் 

  Thursday, December 6, 2012

  SUPER SINGER T-20 எப்படி ?-ஓர் அலசல் ..


  விஜய் டிவியில் SUPER SINGER JUNIOR-3 முடிந்து சில மாதங்களுக்குள்  SUPER SINGER சீனியர் ஆரம்பிப்பதற்கு மாற்றாக   SUPERSINGER T-20 என்ற ஒரு நிகழ்ச்சியை தற்காலிகமாக நடத்தி கொண்டிருக்கிறது .அந்த நிகழ்ச்சி எப்படி என்பதே இந்த பதிவு  நிகழ்ச்சி எப்படி ?


  • மா.கா.பா வுடன் இந்த முறை திவ்ய தர்ஷினி நிகழ்ச்சியை இணைந்து தொகுத்து வழங்குகிறார் .முதலில் திவ்ய தர்ஷினி மட்டுமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சில வாரங்களுக்கு பின்பு மா கா பா இணைந்தார் 
  • ஒவ்வொரு அணிக்கும் தனி தனி நிறங்களாய் கொண்ட அணியாய் பிரித்துள்ளனர் 

  • சூப்பர் சிங்கர் சீனியர் ,ஜூனியரில் பாடிய பெரும்பான்மையானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர் 
  • T-20 கிரிக்கெட் இல் வழங்க படும் விருதுகளை போல இதிலும் தரப்படுகிறது .அதிக மதிப்பெண்கள் பெற்ற தனி நபருக்கு ORANGE CAP வழங்கப்படுகிறது 
  • இரு இரு அணிகளாக மோதுகின்றன .போட்டி தொடங்க TOSS போட்டு பார்க்கப்படுகிறது 
  • பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதணும் ஜட்ஜ் ஆக  மாறிவிட்டார் இந்த நிகழ்ச்சியில்  ...
  மொத்தத்தில் சீனியர், ஜூனியர் இருவரும் இணைந்து பாடுவதால் நிகழ்ச்சி கலகலப்பாக தான் இருக்கிறது .திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் இதை காணலாம் ..

  Monday, December 3, 2012

  WINDOWS 8 -APPLICATIONS,மற்றும் வசதிகள் ஓர் அலசல்


  WINDOWS 8 ஓர் APPLICATION கடை என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு APPLICATION கள் நிறைந்து   காணப்படுகிறது .NOKIA வின் OVI STORE போன்று ..
  WINDOWS 8 APPLICATION மற்றும் GAME களை தரவிறக்க மைக்ரோசாப்ட் மெயிலில் உறுப்பினராகி முந்தைய பதிவில் சொன்னது போல  செய்து கொள்ளுங்கள் .இந்த பதிவு சில அவசிய மற்றும் சிறப்பான APPLICATION களை குறிப்பிடுகிறது .  WINDOWS STORE

  • இது தான் அனைத்துக்கும் முன்னோடி .உங்களுக்கு தேவையானஅனைத்தையும் இதில் பெறலாம் .
  • ஏகப்பட்ட FREE APPLICTION ,GAME கள் நிரம்பி  கிடைக்கின்றன.பதிவிறக்க MICROSOFT MAIL இல் உறுப்பினராதல் அவசியம்


  READER
  • ADOBE READER க்கு மாற்றாக WINDOWS 8 இல் இணைந்துள்ள புதிய வசதி இது .
  • PDF FILE களைமுழு அளவில் திரை முழுவதும் நிரப்பி காண்பிக்கிறது .ADOBE READER யை விட சிறப்பான ஓன்று 
  •  பெரிதாக்கி காட்டும் வசதியும் இருக்கிறது .PRE-LOADED ஆக இணைக்கபட்டிருக்கிறது .இல்லையெனில் WINDOWS STORE மூலமாகவும் பதிவிறக்கலாம் 

  INTERNET EXPLORER 10
  • BROWSER உலகில் புதியது என நினைக்கிறேன் .WINDOWS 8 க்கு என்றே பிரத்யேகமாய் அமைக்கபட்டு இருக்கிறது .இதை பெற INTERNET EXPLORER BROWSER ஐ நீங்கள் DEFAULT BROWSER ஆக தேர்ந்து எடுத்திருக்க வேண்டும் இல்லையெனில் IE9 ஆகவே காட்சி அளிக்கும் .
  • முழு திரையில் இணையத்தில் உலவ சிறப்பானதாக இருக்கிறது .இணைய வேகம் சிறப்பாக இருந்தால் இதனை சிறப்பாக பயன்படுத்தலாம்.தொடு திரை கணினியில் மிக சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
  •  இணைய தள முகவரியை ப்ரௌசெர்  கீழ் டைப் செய்யும் படி அமைக்க பட்டு இருக்கிறது
  IE 10 இல் எனது தளம் ..

  GOOGLE
  • உங்கள் கணினி WINDOWS 8 இருக்கிறது  என தெரிந்ததும்  GOOGLE தளத்தை திறந்தால் அதில் WINDOWS 8 காண பிரத்யேக  GOOGLE APPLICATION யை பதிவிறக்க வழி சொல்லும் .அதை பதிவிறக்கி முழுமையான சிறப்பான பலனை  பெறலாம் முழு திரையில் ..

  VIDEO,MUSIC
  • நாம் தேர்ந்தெடுக்கும் வீடியோ ஆடியோ FILE களை இயக்க இனி VLC MEDIA PLAYER யும் WINAMP யையும் நாட வேண்டிய அவசியம் இல்லை அதற்கு என்றே தனியாக APPLICATION விண்டோஸ் 8 இல் உருவாக்கபட்டுள்ளது .
  •  விண்டோஸ் 8 பதிவிறக்கியவுடன் ஒரு VIDEO FILE யை திறக்கும் போது எதை கொண்டு இயக்க விரும்புகிறீர்கள் என கேட்கும் அதில் VIDEO வை தேர்ந்து எடுத்தால்  இந்த APPLICATION யை பெறலாம்
  OFFICE 365
  WINDOWS 8 க்கு என்றே அமைக்கபட்டுள்ள OFFICE இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம் .இதில் உள்ள அம்சங்கள்
  WORD 2013,EXCEL 2013,POWERPOINT 2013,ONE NOTE 2013மற்றும் பல ..

   முந்தைய பகுதிகள்