Saturday, March 30, 2013

பவர் ஸ்டார் கலக்கல் கவிதைகள் FACEBOOK இல் ..
என்ட்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என பவர் கேட்டதில் இருந்து நமக்கு பவர் மீது ஓர் பாசம் .அதன் விளைவாக பல பதிவுகள் போட்டு விட்டேன்.

பவரான பவர் ஸ்டார்  பதிவுகள் கீழே 

."பவர் " ஸ்டார் -FACEBOOK கலாட்டாக்கள் ஓர் பார்வை

facebook இல் பவர் ஸ்டார் பற்றிய கவிதைகளின் தொகுப்பு தான் இப்பதிவு
POWERSTAAR ,பவர் ஸ்டார்
இளம் பெண்கள்
இதயத்தில் கையொப்பம் 
இட்ட கவர்ச்சி புயலே !!
மயில் இறகு 
போன்ற உன் முகம் !!
உன் முகமே 
இளம் பெண்களுக்கு யுகம் !!

********************************************************************

POWERSTAAR ,பவர் ஸ்டார்

ரசிகர்களை 
சம்பாதிப்பதில் 
நீ ஒரு அம்பானி !

நடிப்பு என்று வந்துவிட்டால் 

நீ ஒரு சப்பாணி !
**********************************************************************

நேற்றைய ஜெனரேட்டரே !!
இன்றைய இன்வெர்டரே !!

நாளைய கூடங்குளமே !!

அகிலத்தை ஆட்டவந்த
RDX ஆட்டோபாமே !!Photo: இதமான இனிமையோடு ஒரு குரல் ! நீயிய இன்றைய தமிழ் சினிமாவின் திருக்குறள் !!இதமான இனிமையோடு
ஒரு குரல் !
நீ தான் 
இன்றைய தமிழ்
சினிமாவின் திருக்குறள் !!
***********************************************************************
Photo: வீழ்ந்து கொண்டுரிக்கும் தமிழ் சினிமாவை நிலைநாட்ட வந்த அண்ணா ஹசாரே !!

வீழ்ந்து கொண்டு இருக்கும் 
தமிழ் சினிமாவை 
நிலைநாட்ட வந்த 
அண்ணா ஹசாரே !!

**********************************************************************
தலைவா !! 
கலைத்தாய் 
ஈன்றடுத்த செல்ல பிள்ளை !!
யாரேனும் உன்னை ஏசினால்
உடைப்போம் அவன் பல்லை !!

POWERSTAAR ,பவர் ஸ்டார்

உன்னை காணாது நான் 
இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் 
வேரில்லையே !

இது போல மேலும் பல கவிதைகளை படிக்க facebook இன் இந்த பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள் ..

POWERSTAR IN FACEBOOK 

POWERSTAR IN FACEBOOK 


Friday, March 29, 2013

புனிதமாக்கும் புனிதரே !எமக்காய் 
எம் பாவங்களுக்காய் 
உயிர் நீத்தீர் இன்று ..

எமக்காய் 
எவ்வளவோ
செய்தீர் 
செய்கிறிரீர் செய்வீர்
உமக்காய் நான் என்ன
செய்தேன்? ஒன்றுமில்லை

உன் ஆலயம் வர
என்னால் முடியாமல்
போனது ஏன் ?
சோம்பலா? 
நேரம் இல்லாமையா?
அறியாமையா? எக்காரணம்
கொண்டும் என்னை நியாய படுத்த
முடியாது -நீர் என்னை
 தவிர்க்கவா
செய்தீர் நான் உம்மை தரிசிக்க
வராததற்கு..

இனியாவது 
உம்மை பின் தொடர
முயல்கிறேன்
முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் 
நான் உம் பிள்ளை!

புனித வெள்ளியில் 
என்னை 
புனிதமாக்கும் புனிதரே !

Monday, March 25, 2013

சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல்?பாகம் -2திரை மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பெற என்ன செய்யலாம் ? பாகம் -1 என்ற பதிவின் தொடர்ச்சி இது .முதல் பாகத்தை படித்து விட்டு இதை படியுங்கள் சிறப்பாக இருக்கும் 

சற்று மிகைப்படுத்தபட்ட 18+ தலைப்புகள் பக்க பார்வைகளை பெற்று தரும் .ஆனால் உங்கள் மதிப்பை குறைக்கும் பதிவுகள்  ஆனால் உங்கள் பெயர் கெட்டு  விட   வாய்ப்பு உண்டு.பெண்  வாசகர்கள் உங்கள்  தளத்திற்கு வர யோசிக்க  கூடும் . நானும் 18+தலைப்பிட்டு சில எழுதி இருக்கிறேன் ஆனால் ஆபாசமாக அல்ல தகாத வார்த்தைகள் இன்றி எழுதி உள்ளேன்

உதாரணத்திற்கு 

சரவணன் -மீனாட்சி - 18+ ?

தலையணை மந்திரம்" -18+
*********************************************************************************5.பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் தலைப்பு  வைத்து  திரை  மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பெறலாம் ஆனால்   அடுத்த தடவை உங்கள் PROFILE பார்த்தே ஒடி விடும் அபாயம் உண்டு ..

உதாரணத்திற்கு 

முகமூடி -படம் அல்ல ..

3 -இது தனுஷ் படம் அல்ல ..

*********************************************************************************
6.என்னை பொறுத்தவரை ஒரே நாளில்அனைத்து  திரட்டிகளிலும் இணைக்க மாட்டேன்.முதலில் தமிழ்மணம் ,அடுத்த நாள் இன்ட்லி ,அடுத்து தமிழ் 10 என மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு பதிவை வைத்து ஓட்டலாம் .சீரான பக்க பார்வைகளை பெறலாம்

எனக்கு தெரிந்து மேற்கண்ட முறைகளில் செய்தால் போதும்  சாமானிய பதிவர்களின் சினிமா பதிவுகள் திரைமணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடித்து அதிக பக்க பார்வைகளை பெரும் என்பதில் ஐயமில்லை


Saturday, March 23, 2013

சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல்

THIRAIMANAM ,KARTHI

பொதுவாகவே நம் அனைவருக்கும் நம் தளத்தை அதிக பேர் பார்க்க வேண்டும்  கருத்துரை இட வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் கிடைப்பது இல்லை.எனது தளத்தில் பக்க பார்வைகளை அதிகரிக்க செய்ததில் முக்கிய பங்கு தமிழ் மணம் திரட்டியின் திரைமணத்தையே சாரும்என் கவிதைகளை  விரும்புவர்கள் மட்டுமே என் கவிதை பதிவுக்கு வருவர் .ஆனால் சினிமா சம்பந்தமான இடுகைகளுக்கு நம் தளத்தை பற்றி தெரியாதாவர்களும்  வருவர்

அதிக பக்க பார்வைகளை பெரும் பதிவுகள்  தமிழ்மணம் திரட்டியின் திரைமணத்தின்  சூடான இடுகைகளில் இடம் பெறும் .அதில் இடம் பெறுவது அவ்வளவு எளிதல்ல .அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவு

திரைமணம் சூடான இடுகைகளில் இடம்பெற :


KARTHI

முதல் நாள் முதல் ஷோவே பார்த்து எழுதுவது

 • இது பலருக்கு தெரிந்த ஓன்று தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்த்து எழுதுவது தான் ஹிட் அடிக்கும் பல பிரபல பதிவர்கள் செய்வது .இதுஎன்னை போன்ற  சாமானிய பதிவர்களால் முடியாத ஓன்று .
 •  அதற்கு அப்படம் வந்து பலபேர் விமர்சனம் போட்டு ஓய்ந்த பின்னர் மெதுவாக அப்படத்தை பத்தி மற்றவர்கள் எழுதாத தலைப்புகளில் எழுதுவது நன்று .அப்படி அல்லாமல் அலெக்ஸ்பாண்டியன் -விமர்சனம் என்று நீங்கள் எழுதினால் சினிமாவின் தீவிர ரசிகர்கள் ஒரு சிலர் மட்டுமே பார்த்து செல்வர்
 • உதாரணத்திற்கு அலெக்ஸ்பாண்டியன் படம் வந்து மூன்று வாரங்களுக்கு பிறகு நான் எழுதிய திரை விமர்சனத்தின் தலைப்பை இப்படி வைத்தேன்
 • அனுஷ்கா -அனிச்சம் பூ ஓர்  ஆய்வு  என்று தலைப்பிட்டு  அனிச்சம் பூவை ஆய்வு செய்தேன் (எப்படிலாம் ஆய்வு பண்ண வைச்சுட்டாங்க )
 • விதிவிலக்கு : நீங்கள் பிரபல பதிவர் என்றால் பல வாரங்களுக்கு பின்னர் விமர்சனம் போட்டாலும் தலைப்பு படத்தின் பெயராய்  இருந்தாலும் உங்கள் profile  பார்த்து கூட்டமடிப்பர்
*******************************************************************************
பவர் ஸ்டாரை பற்றி எழுதுவது


POWER STAR

பவர் ஸ்டாரை பற்றி எழுதுவது இப்போது ஹிட் அடிக்க தொடங்கி உள்ளது ஆனால் முதலில் பவர்  ஸ்டார் பெயரை வைத்து விட வேண்டும்

உதாரணத்திற்கு
facebook இல் powerstar  என்று வைப்பதை விட powerstar  facebook இல் என்று வைப்பது ஹிட் அடிக்கும்

பவர் ஸ்டார் FACEBOOK கலாட்டக்கள்

பவர் ஸ்டாரின் லத்திகா பரபர விமர்சனம் 

பவர் ஸ்டார் ஒரு பாட்டுக்கு ஆடி தன் திறமையை காட்டி வருவதால் விரைவில் சாதாரண ஸ்டார் ஆகி விடும் வாய்ப்பு உண்டு .இப்போதைக்கு பதிவு தேத்தலாம்
********************************************************************************
தலைப்புகளில் கவர்ச்சி 


KALAINGAR

தலைப்புகள் தான் பக்க பார்வைகளை அதிகமாக்குகிறது .உதாரணத்திற்கு 

facebook  இல் கலைஞர் இன்னும் இருக்க வேண்டுமா ? என்று வைத்த பதிவுக்கு வந்த பக்க பார்வைகளை விட அதில் உள்ள ஒரு கருத்தை வைத்து மாற்றி அமைத்த  கலைஞர் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர் பதிவுக்கு அதிக பக்க பார்வைகளை பெற்று தந்தது

*******************************************************************************

இதன் தொடர்ச்சி விரைவில் ..அடுத்த பதிவாக ..

உங்கள் பார்வைக்கு :Wednesday, March 20, 2013

கலைஞரின் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர்

KALAINGAR

"பிரதமர் வாஜ்பய்க்கும், அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி 

அம்மையாருக்கும் செய்த துரோகத்தையும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 

விடுதுலைப் புலிகளுக்கும் செய்த துரோகத்தையும், சுயநல அரசியலின் 

காரணமாகத் தற்போது தமிழக மக்களுக்கே தொடர்ந்து செய்து வரும் 

துரோகத்தையும் மறைப்பதற்காக: மற்றவர்களைப் பார்த்து, "துரோகம், 

துரோகம்" என்று கூக்குரலிடும் உத்தியை, இங்குள்ள தமிழர்களும், ஈழத்

 தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்; உலகத் தமிழர்களும் ஒருபோதும் ஒப்புக் 

கொள்ளமாட்டார்கள் !"


மேற்கண்ட status யை கலைஞர் போட்டது தான் தாமதம்.துள்ளி எழுந்த facebook  பயனர்கள் அளித்த கருத்துக்கள் கலைஞர்  ஏன் இதனை போட்டோம் என நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.ஒரு சில கருத்துக்கள் படு கேவலமாக இருக்கிறது .கொச்சை வார்தைகளிளிலும் ஒருமையில் விழித்தும் பல ..இதையெல்லாம் படித்து கொண்டு கலைஞர் இருக்க வேண்டுமா facebook  இல் என்பது தான் என் எண்ணம் 

கலைஞர் இதை எல்லாம் டைப் செய்து எழுதுகிறாரா என தெரிய வில்லை ஆனால் அதிலும் நம் அரசியல் பதிவர் ஒருவர் குற்றம் கண்டு கலைஞரின் தமிழுக்கே ஆப்பு வைத்திருக்கிறார் .அது வேறு யாரும் அல்ல அன்பர் ரகீம் கஸாலி தான் 


அவரின் கருத்தும் நாகரிகமான சில கருத்துக்களும் கீழே 

ஹீம் கஸாலி விடுதலைப்புலியா? விடுதுலைப்புலியா?ச. சரவணன் கரட்டு கரட்டு நீ மிரட்டு மிரட்டு

Thiru Thambi ஐயா நல்லா பாருங்க,

அது உங்க உருவம்தான் கண்ணாடிய பாத்து பேசிட்டிருக்கீங்க ;


Muthu Gopalakrishnan வாக்குமூலம் போல இருக்கு Karthi Keyan இன்றைக்கும் துரோகம் என்றால் தமிழர்கள் மத்தியில் 

யாருடைய பெயர் ஞாபகம் வருகிறது என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தி 

பார்த்துவிடலாமே...

Blackstartamilan Eevera இதே அம்மையார் அவர்கள் போர் என்றால் உயிரிழப்பு

 சாதாரணம் என்றவர் தானே

Nambikai Raj நீர் எம்.ஜி.ஆருக்கும் வைகோவுக்கும் செய்தது என்ன 

பெரியவரே? தியாகமா? துரோகமா?

க. தமிழன் உங்களையே நீங்கள் திட்டிக்கிறிங்க நினைச்சி அப்படியே ஷாக் 

ஆயிட்டேன்.. ஜெயலலிதா என்ற இடத்தில் கருணாநிதி என்றும் சேர்த்து 

எழுதுங்க.

Jeyaraajz Defending Champion thalaivare enna vajbai patti solreenge.........?! adutha

 kuttanikku thundu podureengalooooooooooo?!!!!!!!1


Senthil Pandi vajbai inga enga vandharu? oh adutha kootaniku adi poda arambichacha?


மேலும் பல படிக்க இங்கு இணையுங்கள் 

உங்கள் பார்வைக்கு :

Tuesday, March 19, 2013

"கலைஞரின்" FACEBOOK STATUS யும் அதிரடி கருத்துக்களும் ....


KALAINGAR IN FACEBOOK

"தற்போது எனது இல்லத்தில் "என்று மேற்கண்ட படத்துடன் கலைஞர் 

போட்டிருந்த facebook  STATUS க்கு ரசிக கலாமணிகள் கழுவி ஊத்திய கருத்துக்களில் 

சிறந்தவை கீழே 


Kurinchi Venthan Thirumbavum Muthaleruntha.....

Jeyakanth Jekan அடுத்த நாடகத்துக்கான ஒத்திகையா ?

Gowri Shankarதயவுசெய்து....தயவுசெய்து.....தயவுசெய்து...
சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்துவிடாதீர்கள்.


கத்தார் வன்னியர்சங்கம் தனி ஈழம் கிடைத்துவிட்டது.ஏய் நாதஸ் இரண்டு வாழ பழம் வாங்கிட்டு வா .


Johnson Kennedy கூட்டனி தொடர்ந்தால் ஒரு இடம் வெல்ல முடியாது...தலைவா நல்ல முடிவெடுங்க .........


Anantha Saithanyan kollakaranga ellam onna irukanga......Subash Kumar Nee. Adikira mathiri nadikanum nan azhurathu mathiri nadipeen. Makkal nampiduvaanga


Jeevan Raveendra எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன்.

2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை ,

3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது .


4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் .

5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் .இன்னும் பல கருத்துக்கள் படிக்க இங்கு கிளிக்குங்கள்
UPDATE:கூட்டணியில் இருந்து கலைஞர் விலகினார் 

Thursday, March 14, 2013

சூர்யா -பிரகாஷ்ராஜ் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி யார் பெஸ்ட் ?

NVOK-2

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில நாட்கள் தான் ஆகிறது அதற்குள்  அந்த நிகழ்ச்சியின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை எனக்கு !ஏன் என்பதற்கு சில  காரணங்கள்

 • சூர்யாவுக்கு மாற்றாக பிரகாஷ்ராஜ் எதிர்பார்க்காத ஒன்று.
 • "மாற்றம் ஒன்றே மாறாதது .உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் கேள்விகளுடனும் கோடிகளுடனும்  உங்கள் சூர்யா "-இதை சூர்யா சொல்லும் போதே உற்சாகம் புன்னகை கலந்து சொல்வார் . இதே வரிகளை பிரகாஷ்ராஜ் சொல்லும் போது  முந்தைய ஈர்ப்பு இல்லை 
 • வில்லத் தனம் காட்டிய நடிகர் என்பதால் எப்பவும் இறுக்கமாக இருக்க வேண்டுமா என்ன ?
 • கதாநாயகன் என்பதால் சூர்யாவுக்கு ஜொள்ளு விட்ட பெண் பங்கேற்பாளர்களை பார்க்கும் போதும்   விஜய் டிவி தனது விளம்பரங்களில் போட்டு காட்டும் போதும்  நிகழ்ச்சியை பார்க்க ஓர்  ஆர்வம் ஏற்படும்.அவ்வப்போது சூர்யாவே ஜொள்ளு விட்ட நிகழ்ச்சிகளும் உண்டு ஆனால் தற்போது அது நடக்க சாத்தியம் இல்லை எனவே தோன்றுகிறது .
NVOK -2
 • மின்னல் வரிகளுக்கான  கேள்வி என சூர்யா சொல்லும் போதே ஒரு துடிப்பு  இருக்கும் .அது இப்போது இல்லை 
 • நான்  சூர்யா ரசிகர் இல்லை.ஆனாலும் இவை  எனக்கு தோன்றுகிறது என்னை  பொறுத்தவரை கார்த்தியை போட்டிருந்தால்  நிகழ்ச்சி களை கட்டிருக்கும்   என நினைக்கிறேன் 
 கேள்விகளை பொறுத்தவரை  கொஞ்சம் மெனக்கெட்டு இருப்பது  தெரிகிறது ஆனாலும் முந்தைய  சீசன் போல அவ்வப்போது கேள்விகள்  வருகின்றன 

உதாரணத்துக்கு :

இந்த   வசனத்தை பூர்த்தி செய்க 

எப்படி இருந்த நான் ------------------

எ) இப்படி ஆகிட்டேன் b )அப்படி  ஆகிட்டேன் 

முந்தைய சீசனில் எழுதிய பதிவுகள் :

Sunday, March 10, 2013

"அலெக்ஸாவை" மடக்குவது எப்படி? ஓர் அலசல்

ALEXAஇப்பதிவு புதிதாக பதிவுகள் எழுதும்  அன்பர்களுக்கு ஆனது .

பதிவுகள் பல எழுதி கூட்டம் கொஞ்சம் சேர்ந்த பின்னர் பதிவர்களுக்கு alexa எனப்படும் தரவரிசை தளத்தில் சிறப்பான இடத்துக்கு வர வேண்டும் என்பது விவரம் புரிந்த பதிவர்களின் எண்ணமாக இருக்கும்.

தமிழ் தளத்துக்களுக்கான தமிழ் மணம் திரட்டியை போல அலெக்ஸா ஒன்றும் திரட்டி அல்ல .ஆனால் அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவான ரேங்க் பெற்று இருந்தால் GOOGLE ADSENSE  அனுமதி கிடைக்கும் என்ற ஒரு மாயையும் உண்டு .உண்மையாக கூட இருக்கலாம்

அலெக்ஸாவில் முன்னேற : 
 • புதிதாக தளம் ஆரம்பித்து இருந்தால் உங்கள் தளம் தர வரிசையில் கோடிகளில் இருக்கும் .தளத்துக்கு வாசகர்கள் வருகை சிறப்பாக இருப்பின் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் 
 • அலெக்ஸா டூல்பார் உங்கள் தளத்தில் இணைத்தால் தர வரிசையில்  கொஞ்சம் மாற்றம் இருக்கும் 
 • அதுமட்டும் இல்லாமல் தரவரிசையில் முன்னேற நாமே டூல்பார் தயாரிக்கும் அமைப்பை அலெக்ஸா தளம் வழங்கி உள்ளது நான் உருவாக்கிய அலெக்ஸா டூல்பார் இங்கே .இதன் மூலமும் தர வரிசையில் மாற்றம் ஏற்படும் 
 • தொடர்ந்து பதிவுகள் எழுத வேண்டும் .இல்லையெனில் உங்கள் தர வரிசையில் மாற்றம் கோடிகளுக்கு போய்விடும் அபாயமும் உண்டு  
 • அலெக்ஸா தர காட்டிWIDGET  களை  உங்கள் தளத்தில்  இணைப்பதன் மூலமும் தர வரிசையில்   மாற்றம் ஏற்படும் 
எனது அலெக்ஸா விவரங்கள் ;
 • எனது தளத்தை  25-34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களது இல்லத்தில் கண்டு கழிக்கின்றனர் 
 • இன்றைய நிலவரப்படி  எனது தளத்தின் மூன்று மாத அலெக்ஸா ரேங்க் 3,98,890.இந்தியாவில் 1,18,876 இலங்கையில் 8506 
 • எனது தளத்தை மொத்தம் 6 நிமிடங்கள் செலவழிக்கின்றனர் .ஒவ்வொரு பக்க பார்வைக்கும் 57 வினாடிகள் எடுக்கின்றனர் 
 • கவிதை சம்பந்தமாகவே எனது தளத்தில் தேடுவதாக அலெக்ஸா கூறுகிறது 
SOURCE :அலெக்ஸாவில் நான்

பதிவுலக புதியவர்கள் இத்தளத்தில் இணைய  இங்கு சொடுக்குங்கள்


உங்கள் பார்வைக்கு :Friday, March 8, 2013

"பெண் "எனப்படுவள் யாரெனில் ....WOMEN'S DAY.மகளிர் தினம்


உலக மகளிர்  அனைவருக்கும் மகளிர் தின  வாழ்த்துக்கள் 

**பெண் ஓர் தென்றல்
அவளை மதிப்பவர்க்கு!
பெண் ஓர் புயல்
அவளை பழிப்பவர்க்கு!**பெண் ஓர் சூரியன்
பகைவரை சுட்டெரிப்பதில்!
பெண் ஓர் நிலா
கவிஞர்களை
சுண்டி இழுப்பதில்!

**பெண் ஓர் கவிதை
காதலனுக்கு
பெண் ஓர் விதை
குடும்பத்தை விஸ்தரிப்பதில்
பெண் ஓர் மலர்
மென்மையின் உருவாய் இருப்பதால்..

**மொத்தத்தில்
பெண் ஓர் இறை
படைக்கிறாள்
காக்கிறாள் அழிப்பதில்லை...