Monday, October 8, 2012

அனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு

ANUSHKA,ANICHAM
அனிச்சம் பூவழகி என அனுஷ்காவை பார்த்து தாண்டவம் படத்தில் விக்ரம் பாடுவார் .


இந்த பாடலை கேட்டவுடன் அனிச்சம் பூ எப்படி பட்டது என இணையத்தில் தேடிய போது அனிச்சம் பூ மிகவும் மென்மையானது,நறுமண மிக்கது  எனவும் அதை முகர்ந்தாலே வாடி விடும் என்பதையும் அறிந்தேன் .

அனிச்சம் பூ

மேலும் திருக்குறளில் அதை பற்றி பல குறள்கள் உள்ளன .அதில் சில கீழே
90 வது குறள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. 
பொருள்
அனிச்சம் எனப்படும் பூ முகர்ந்தவுடன் வாடி விட கூடியது .அதுபோல சற்று முகம் கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடி விடுவர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1111 வது குறள்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

பொருள் :
அனிச்சம் மலரின் மென்மையை புகழ்ந்து பாராட்டுகிறேன்.ஆனால் அந்த மலரை விட மென்மையானவள் என் காதலி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனிச்சம் பூ
1115 வது குறள்

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள்  நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை

பொருள் 

அவளுக்காக நல்ல பறை ஒலிக்க வில்லை .ஏனெனில் அவள் இடை  ஒடிந்து வீழ்ந்து விட்டாள் .காரணம் அவள் அனிச்ச மலர்களை காம்பு நீக்காமல் தலையில் வைத்து  கொண்டது தான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1120 வது குறள் 

அனிச்சமும்  அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

பொருள்

அனிச்ச மலராயினும் அன்னப்பறவை இறகாயியினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக அனுஷ்கா அனிச்சம் பூவை போல அவ்வளவு மென்மையானவர் என பாடல் ஆசிரியர் கூறுகிறார்

உங்கள்  பார்வைக்கு :