Sunday, March 3, 2013

"பவர் ஸ்டாரின்" லத்திகா -பரபர விமர்சனம்


POWERSTAR,பவர் ஸ்டார்
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பார்த்த பின்னர் பவரின் முந்தைய படங்களை பார்த்தாக வேண்டும் என்ற ஒரு விபரீத  துடிப்பு ஏற்பட்டது .அதுவும் 225 நாட்களை கடந்து ஓ(ட்)டிய லத்திகாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசையில் DVD  கடையில் லத்திகா பட CD  கொடுங்க என்றேன் .மேலும் கீழும் ஒரு முறை பார்த்த கடைக்காரர்  "அந்த " மாதிரி CD  லாம் இப்ப விக்கிறது இல்லை என குண்டை  தூக்கி போட்டார்.



பவரின் பவர் அவருக்கு தெரிய வில்லை போலும் என நினைத்து இணையத்தில் தேடி தரவிறக்கி கண்டு இங்கே எனது அனுபவங்களை பகிர்கிறேன்

கதை :
  • கதை அது இருக்கா என்ன ? என்றெல்லாம் கேக்க படாது .கொஞ்சம் இருக்கு 
  • நல்லவர் வல்லவராக வாழும் பவரின் குழந்தை  லத்திகாவை வில்லன் ரகுமான் கடத்தி பணம் பொருள் அனைத்தையும் வாங்கி கொண்டு அலைய விடுகிறார் .அவர் ஏன் அப்படி செய்கிறார் ரகுமானிடம் இருந்து லத்திகாவை பவர் எப்படி மீட்கிறார் என்பதே கதை 
  • பவரிடம் வேலை பார்க்கும் BA  தான் ரகுமானின் மனைவி .ரகுமான் பவரை தனது மனைவியுடன்  தவறாக உள்ளார் என தவறாக எண்ணி பவரின் மகளை கடத்துகிறார் 
  • பவர் தான் அவ்வாறு இல்லை என்பதை நிரூபிக்க உண்மையாகவே (!) ரகுமானின் மனைவியுடன் தவறாக நடிப்பது போல் நடிக்க பவரை  கத்தியால் குத்தி விடுகிறார் ரகுமான் மனைவி  .உண்மை  உணர்ந்த ரகுமான் திருந்தி லத்திகாவை விடுவிப்பது  தான் கதை 

POWERSTAR,பவர் ஸ்டார்

சிறப்பம்சங்கள் 

  • குண்டு துளைத்து கொண்டு லத்திகா டைட்டில் வரும் போதே நம் இதயத்தை பவர் குண்டு வைத்து தகர்க்க போகிறார் என தெரிந்தது 
  • ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க முயன்றிருக்கிறார் பவர் 
  • படத்தில் பவருக்கு சொந்த குரல் இல்லை யாரோ குரல் கொடுத்து உள்ளனர் 
  • பவரின் காதல் கல்யாண ப்ளாஷ்பேக்லாம் ம்ம் எங்கையோ போய்ட்டீங்க பவர் 
  • "நீங்க நல்ல இருக்கோணும் நாடு முன்னேற" என எம்.ஜி .ஆர் பட பாடல் பின்னணியில் எம்.ஜி.ஆரே பவரை வரவேற்பது போன்ற காட்சிகள் எல்லாம் ரொம்ப ஓவர்  
  • "மலரே குறிஞ்சி மலரே" என பழைய பாடலுக்கு பவரின் ரொமான்சை  பார்க்க கண்கள் போதாது 
  • படத்தில்  ஒருத்தர் குரல் கூட சரியாக சிங் ஆக வில்லை DVD தரமா இல்லை படத்திலேயே   அப்படி தானா என தெரிய வில்லை 

மொத்தத்தில் விஜயகாந்த் போன்றவர்கள் நடித்து இருந்தால் ஓடிருக்க கூடிய படம் இந்த லத்திகா

உங்கள் பார்வைக்கு :