அழகு பெண்ணொருத்தியால் நான் அழிந்த கதை ... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, July 30, 2011

அழகு பெண்ணொருத்தியால் நான் அழிந்த கதை ... கொள்ளை அழகு
பெண்ணொருத்தி
புது மண பெண்ணாய்
இங்கு வருகிறாள்
என்று கேட்டதில் இருந்து
எங்களுக்கு நடுக்கம் தான் ..எத்தனை காலம்
இங்கிருக்கிறோம்
இந்த வீடு எங்களுக்கு
சொந்தம் அல்லவா !

புயலை போல
திடீரென வந்து
எங்களை அழிக்க தான்
திருமணம் செய்தாயா கள்ளி !

நீ பேரழகி தான் -ஆனால்
இவ்வீடு
அழுக்கு வீடு அல்லவா !

அதோ வருகின்றனர்
உன் உறவினர்கள்
பற்பல ஆயுதங்களை

கொண்டு எங்களை அழிக்க ..


நீங்கள் பயன்படுத்தும்
அந்த அதிக அழுத்த காற்று உள்ள

கருவி எங்களை
உரு தெரியாமல்
அல்லவா அழிக்கிறது


வீட்டுக்குள் வீடு கட்ட
எங்களை தவிர
யாரால் முடியும் ?

எங்கள் சாபத்தால்
உன் வாழ்க்கை
நாசமாகாதா மண
பெண்ணே !


அதோ அந்த மூலையில்
வேண்டா பொருட்கள் உள்ள
அறையில்
எங்களுக்கு இடம் கொடுப்பாயா
உன் மண வாழ்க்கை
இனிக்குமடி


அப்படி செய்தால் ..
வருத்ததுடன் சிலந்தி ...
(திருமணம் முடிந்து புது வீட்டிற்க்கு வரும் மணப் பெண்ணினால் தங்களுக்கு வரும் ஆபத்தை எண்ணி சிலந்தி மணமகளிடம் தங்களை காப்பாற்ற கேட்பதாய் இக்கவிதையை எழுதி இருக்கிறேன் )


இந்த கவிதையை எழுத தூண்டிய எனது அலுவலக தோழிக்கு நன்றி !
2 comments:

  1. கடைசி வரியில் கருவை வைப்பதில் தான் கவிதையின் மொத்த ஆற்றலும் அடங்கியிருக்கிறது.

    கவிஞரான உங்களுக்கு என் பாராட்டுக்கள் இல்லை. எழுதத் தூண்டிய சகோதரிக்கு உரித்தாகட்டும்.

    சொற்களைக் குறைவாகக் கையாள்வதால் கவிதை வனப்புறும் தோழா.( நீ மட்டும் என்னவாம்-னு எதிர்க்கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது.)

    ReplyDelete
  2. enathu kavithaikalil perumpalum sorkal kuraivaka kaikoo kavikalakavae irukum anparae en matra kavithaikalai padithirunthal ungaluku therinthurukum .thanks for your valuable comment

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here