கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் ! - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Tuesday, February 21, 2012

கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

கடவுள் ,வேண்டுதல்

 லட்ச கணக்காணோர் எழுதிய
வங்கி தேர்வில் என்னை
தேர்வு செய்ய வேண்டினேன்
அவ்வாறே செய்தார் கடவுள்
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான்!அலுவலகத்தில்
எனக்கெதிராய் செயல்படுபவர்களை
எனக்கு ஆதரவாய்
செயல்பட வேண்டுகிறேன்
அவ்வாறே செய்கிறார் கடவுள்
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !


அதிகாலையில் எழுந்திரிக்க
அலாரம் வைப்பதில்லை நான்
அவரிடம் சொல்கிறேன்
எழுப்புகிறார் குறிப்பிட்ட நேரம் முன்பே !
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

இழுபறியில் இருக்கும் என
நினைத்த தேர்வு முடிவுகளில்
என்னை தேர்வு பெற செய்யுங்கள்
என வேண்டுகிறேன் அதையும்
செய்கிறார் எனது உழைப்பு கண்டு !
கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

இன்னும் எத்தனயோ
செய்தார் செய்கிறார் செய்வார்
ஆனால் நான் என்ன செய்தேன்
அவருக்கு !ஒன்றுமில்லை
கடவுளுக்கு  வேலை வைக்கிறேன் நான் !


(இக்கவிதை கர்த்தருக்கு நான் செலுத்தும் சாட்சி கவிதை .எனது வாழ்க்கை சம்பவங்கள்.சிறப்பான கருத்துக்கள் அளிக்க வேண்டுகிறேன் )


உங்கள் பார்வைக்கு :

16 comments:

 1. என்ன தான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் உங்கள் உழைப்பின் பலனை அனுபவிக்கிறீர்கள்...

  கடவுள் நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தி...கட்டுக்குள் வைப்பதால் வெற்றி கூடுகிறது...

  வாழ்த்துக்கள் உங்கள் நம்பிக்கைக்கு...நல்லதே நடக்கும்...

  ReplyDelete
 2. பதிவுலகத்திலும் அடிக்கடி கடவுள் நினைவூட்ட பட வேண்டும்..
  கடவுளுக்கும் நன்றி,
  நன்றி சொன்ன நண்பருக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 3. நீங்கள் சரியாக இருந்தாலே போதும், அது போதும் அவருக்கு

  ReplyDelete
 4. அருமை அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 5. நன்றி நண்பரே
  வாழ்த்துக்கள்
  கவிதை அருமை

  ReplyDelete
 6. அன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
  வலைச்சரத்தில் கவிதை சரம்

  ReplyDelete
 7. கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !
  மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுகிறான்...

  ReplyDelete
 8. @ரெவெரி//நன்றி அன்பரே சிறப்பான கருத்துக்கு

  ReplyDelete
 9. @irfan zarook//கண்டிப்பாக! வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. @manazeer masoon//உண்மை தான் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 11. @DhanaSekaran .S & யாழ். நிதர்சனன்//வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. @Philosophy Prabhakaran //ஏன் பாஸ் கடவுள் நம்பிக்கை இல்லையா

  ReplyDelete
 13. @சம்பத்குமார் //மிக்க நன்றி அன்பரே எனது பதிவை பரிந்துரைதமைக்கு

  ReplyDelete
 14. @இராஜராஜேஸ்வரி//நீங்கள் சொல்வதும் உண்மை தான் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 15. கடவுள்...பேசவே வேணாம் !

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here