காதலில் சொதப்புவது எப்படி?-விமர்சனம் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Monday, February 27, 2012

காதலில் சொதப்புவது எப்படி?-விமர்சனம்

"காதலில் சொதப்புவது எப்படி"-படத்தை பற்றிய எனது எண்ணங்கள் இங்கே ! " நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை 
திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு   வாழ்த்துக்கள் பாலாஜி. அந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு !கதையின் கரு 

 • ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள்  என்பதே கதை.
 • சித்தார்த்தும் அமலாபாலும் போட்டி போட்டு கொண்டு நடித்திருக்கின்றனர்

நெகடிவ் க்ளைமாக்ஸ் இல்லை.சுவிட்சர்லாந்து டூயட் இல்லை.தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை உடைத்து எரிந்திருக்கிறது  இப்படம்.


"இத சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா!"என அமலாபால் சித்தார்த்திடம் சொல்லும் அழகே தனி!

" ஏங்க லவ் பண்றது இவ்வளவு கஷ்டமா இருக்கு"என நம்மை பார்த்து சித்தார்த் கேட்பதும் நியாயம் தான்

"பாசத்தையும்  சரி வெறுப்பையும் சரி பொண்ணுங்க காட்டுற அளவுக்கு  பசங்களால என்னைக்குமே காட்ட முடியாது "போன்ற ஜீவனுள்ள  வரிகள் படத்தோடு இணைய வைக்கின்றது நம்மை !


கிளைக்  கதைகள்

 • அமலா பாலின் தாய் தந்தை காதல் ஓர் அழகு கவிதை.விவாகரத்து பெற விருக்கும் அமலா பாலின் தந்தை தனது மனைவிக்கு  மகளிடமே லவ் லெட்டர் கொடுத்து அனுப்புவதும்  அந்த வளையோசை பாடலும் அழகு
 • அண்ணா என அழைத்தவளையே விடாமல் காதலிக்கும் நண்பன்,சித்தார்த்துக்கும் அமலா பாலுக்கும் சமரசம் செய்ய முயன்று அடிவாங்கும் அந்த குண்டு நண்பன் என வரும் கிளை கதைகள் அனைத்தும் அருமை 
 இயக்குனருக்கும் நடிக்க ஆசை போல படத்தில் சில காட்சிகளில் தலை காட்டுகிறார் பாலாஜி

அழைப்பாயா அழைப்பாயா பாடலும் சித்தார்த் பாடிய பார்வதி பார்வதி பாடலும் ஈர்க்கிறது

ஆண்கள் தான் ஈகோவை விட்டு கொடுக்கணும் என்ற உண்மை தான் படத்தின் முடிவு

உங்கள் பார்வைக்கு :

8 comments:

 1. பட விமர்சனம் சிறப்பாய் தந்ததற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. உணமைதான் அன்பரே ,..
  படம் பார்த்தேன் .. ரொம்ப இயல்பா செல்கிறது ..
  நல்ல விமர்சனம் வழங்கிய உங்களுக்கு என் நன்றிகள

  ReplyDelete
 3. வேற எதாவது விட்டு கொடுக்கனுமானு கேட்டு சொல்லுங்க பாஸ்.

  அருமைப்பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 4. படமும் அருமை விமர்சனமும் அருமை..

  ReplyDelete
 5. விமர்சனம் படம் பார்க்கவேணும்போல இருக்கு.நன்றி பிரேம் !

  ReplyDelete
 6. படத்தை போலவே ரொம்ப ஸ்வீட்டா இருக்கு :)

  ReplyDelete
 7. விமர்சனம் சிறப்பு

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here