அனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Monday, October 8, 2012

அனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு

ANUSHKA,ANICHAM
அனிச்சம் பூவழகி என அனுஷ்காவை பார்த்து தாண்டவம் படத்தில் விக்ரம் பாடுவார் .


இந்த பாடலை கேட்டவுடன் அனிச்சம் பூ எப்படி பட்டது என இணையத்தில் தேடிய போது அனிச்சம் பூ மிகவும் மென்மையானது,நறுமண மிக்கது  எனவும் அதை முகர்ந்தாலே வாடி விடும் என்பதையும் அறிந்தேன் .

அனிச்சம் பூ

மேலும் திருக்குறளில் அதை பற்றி பல குறள்கள் உள்ளன .அதில் சில கீழே
90 வது குறள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. 
பொருள்
அனிச்சம் எனப்படும் பூ முகர்ந்தவுடன் வாடி விட கூடியது .அதுபோல சற்று முகம் கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடி விடுவர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1111 வது குறள்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

பொருள் :
அனிச்சம் மலரின் மென்மையை புகழ்ந்து பாராட்டுகிறேன்.ஆனால் அந்த மலரை விட மென்மையானவள் என் காதலி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனிச்சம் பூ
1115 வது குறள்

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள்  நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை

பொருள் 

அவளுக்காக நல்ல பறை ஒலிக்க வில்லை .ஏனெனில் அவள் இடை  ஒடிந்து வீழ்ந்து விட்டாள் .காரணம் அவள் அனிச்ச மலர்களை காம்பு நீக்காமல் தலையில் வைத்து  கொண்டது தான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1120 வது குறள் 

அனிச்சமும்  அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

பொருள்

அனிச்ச மலராயினும் அன்னப்பறவை இறகாயியினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக அனுஷ்கா அனிச்சம் பூவை போல அவ்வளவு மென்மையானவர் என பாடல் ஆசிரியர் கூறுகிறார்

உங்கள்  பார்வைக்கு :
 

10 comments:

 1. ஓ ! இது தான் அனிச்சமா ? பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ. அனுஷ்கா எனக்குப் பிடித்தமான நடிகை. அழகோ அழகு ! அனிச்சம் பூவைப் போல

  ReplyDelete
 2. Aniyaayam ! Akramam ! Thalaivi patriya pathivu ena ododi vanthaen. :((

  ReplyDelete
 3. @மோகன் குமார் //நல்லா பாருங்க பாஸ் உங்க தலைவியும் பதிவில் இருக்காங்க

  ReplyDelete
 4. ஓஹோ... அறிந்து கொண்டேன் நண்பரே...

  ReplyDelete
 5. "அனுஷ்கா ஓர் ஆய்வு " ன்னு தலைப்பு வச்சிட்டு போட்டோவோட முடிச்சிட்டீங்க போங்க பிரேம் :((

  ReplyDelete
 6. @மோகன் குமார்//மீள் வருகைக்கு நன்றி தலைப்பை உற்று கவனிக்கவும் "அனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு"

  அனுஷ்கா ஓர் ஆய்வு மட்டும் அல்ல ஹா ஹா

  ReplyDelete
 7. @இக்பால் செல்வன்//ம்ம் உண்மை தான் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. @ திண்டுக்கல் தனபாலன்//வருகைக்கு நன்றி அன்பரே

  ReplyDelete
 9. வணக்கம் பாஸ்.

  போன மாதம் கூட “பிரான்சு குறளரங்கத்தில்“ நடந்த கருத்து விவாதத்தில் அனுச்சம் பு என்பது அழிந்துவிட்ட ஒன்று என்றார்கள்.

  ஆனால் நீங்கள் இந்த மலரைப் படத்துடன் போட்டு... இருக்கிறது என்று நிறுபித்து இருக்கிறீர்கள்.
  நன்றி பாஸ்.

  ReplyDelete
 10. செம கலக்கல் பாஸ் ..
  எனக்கும் பெருத்த சந்தேகம் இருந்தது .. சோம்பேறி தனத்தால் தேடாமல் விட்டுவிட்டேன் ..
  நீங்கள் மிக விளக்கமாய் பதிவிட்டு சந்தேகத்தை தீர்த்திர்கள்...

  ஆனால் அனிச்சம் அளவுக்கு அனுஷ்கா வொர்த் இல்ல ..(மோகன் அண்ணே மன்னிக்கவும் )
  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பீலிங் என்ன பாஸ் நான் சொல்றது சரிதானே ..

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here