• உங்கள் பார்வைக்கு !..

  Recent Posts:

  Monday, June 24, 2013

  தலைவா பாடல்கள் எப்படி ஓர் அலசல்


  THALAIVAA,VIJAY,THALAIVA

  விஜய் யின் தலைவா பாடல்கள் சமீபத்தில் வெளியிடபட்டது .மொத்தம் 6 பாடல்கள் .ஒவ்வொன்றும் ஓர் ரகம் .துப்பாக்கியை தொடர்ந்து இதிலும் விஜய் ஓர் பாடல் பாடியுள்ளார் .பாடல்களின் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் கீழே


  வாங்கன்னா :

  துப்பாக்கி படத்தை தொடர்ந்து  விஜய் பாடியுள்ள பாடல் .வாங்கன்னா என போதை குரலில் விஜய் கலக்கலாக பாடியுள்ளார் .சந்தானத்தின் வசனங்களும்  இடையிடையே வருகிறது .காதலில் பட்ட அவஸ்தைகளை  விஜய் பாடும் வரிகள்  கலக்கல் .உதாரணத்திற்க்கு

  ஹிட்லர்  டார்ச்சர்லாம்  ஹிஸ்டரி பேசுதுனா 
  இவுலுக டார்ச்சர்லாம்  யாருமே பேசலைனா 

  விஸ்கி பீர் போதைலாம்  மூணே அவர்ல  போகுனா 
  ஹஸ்கி வாய்சுல   பேசுவா போகாது அந்த போதைனா

  பாடல் கேக்க 

  தலைவா தலைவா :

  தி.மு.க அரசியல் மேடைகளில் ஒலிக்க ஏற்ற பாடல்.இளைய தளபதி பாடல் தளபதி ஸ்டாலினுக்கு ஏற்ற படி ஓர் பாட்டு .விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு அச்சாணி போட கூடிய பாடல் .தளபதி தளபதி என பாடல் தொடங்குகிறது .அரசியல் ஒவ்வொரு வரிகளிலும் தெறிக்கிறது

  உதாரணத்திற்க்கு

  "தலைவா தலைவா  சரிதம் எழுது தலைவா
  உயிரே உயிரே உயிரை தரவா "

  "பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால்
  வரலாற்றில்  ஓர்  தலைவன்  உருவாகுவான் "

  உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை 
  உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை 

  அச்சங்கள் உன்னை கண்டு அச்சபட
  உச்சத்தை தொட வேண்டும்  முன்னேறு நீ "என்று சூப்பர் சிங்கர் பூஜா வின் குரல்களில்  லயிக்கிறது

  "பத்தோடு பதினொன்று நீ இல்லையே 
  பேர் சொல்லும்  ஒரு பிள்ளை நீ தானே "-என்று சொல்வது எதற்கு என்று சொல்ல வேண்டுமா என்ன ?

  பாடல் கேக்க 


  தமிழ் பசங்க :

  தமிழ் உணர்வை தூண்டும் பாடல் .உயிரெழுத்துக்கள் மெய் எழுத்துகளை சொல்லி ஆரம்பிக்கிறது பாடல் .கசட தபற தமிழன் எங்கிருந்தாலும் தமிழன் தான் என உரக்க சொல்லும் பாடல் தமிழ் கலாச்சாரங்கள் தமிழ் விளையாட்டுக்கள் என எல்லாம் கலந்து கட்டி அடிக்கும் பாடல் .பென்னி டயல்  பாடி உள்ளார்

  பாடல் கேக்க 


   சொல் சொல் :

  மெல்லிய காதல் பாடல் விஜய் பிரகாஷ் மேஹா பாடியுள்ளனர் .ரசித்த சில வரிகள் கீழே

   கனவுகள் கேக்குது நீ வர 
  கை விரல்  கேக்குது நீ தொட !

  சொல் சொல் சொல்வதெல்லாம் கண்ணாலே சொல்

  பாடல் கேக்க 

   யார் இந்த சாலை ஓரம் :

  மெல்லிய காதல் பாடல் .ரியல் ஜோடி ஜி .வி பிரகாஷ் சைந்தவி குரலில் லயிக்கிறது .ரொம்பவும் உருகி பாடி இருக்கிறார் ஜி.வி பிரகாஷ்

  பாடல் கேக்க 

   தீம் பாடல் :

  யார் இந்த சாலை ஓரம் பாடலின் மெட்டில் ஓர் தீம் பாடல்

  பாடல் கேக்க 


  உங்கள் பார்வைக்கு :

  Fashion

  Beauty

  Culture