பிரியாணி -" லெக் "பீஸ் கொஞ்சம் அதிகம் தான் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, December 21, 2013

பிரியாணி -" லெக் "பீஸ் கொஞ்சம் அதிகம் தான்

கார்த்தியின் முந்தைய படங்களின் மீதான நம்பிக்கையால் இந்த படத்தை பார்க்க போவதில் அவ்வளவு நாட்டம் முதலில் வர வில்லை .இருப்பினும் வெங்கட் பிரபு ஏதாவது பண்ணுவார் என்ற நம்பிக்கையில் போய் மாட்டி கொண்ட படம் இது.MULTI STAR படம் எடுப்பதில் வெங்கட் பிரபுவை மிஞ்ச ஆள் இல்லை என நினைக்கிறேன் .எத்தனை ஆர்டிஸ்ட் .அதுவும் அவரது ஆஸ்தான நண்பர்களை எல்லாம் ஒரு சீனிலாவது தலை காட்ட வைத்து விடுகிறார் .சாம் ஆண்டர்சனையும் விட்டு வைக்க வில்லை 

கதை :

குடியும் பெண்களுமாக கலக்கல் வாழ்கை வாழும் கார்த்தி பிரியாணியில் உள்ள LEG பீஸ் போதாதென்று வேறு ஒரு  LEG பீஸ்க்கு(மாயா ) ஆசைப்பட்டு போய் கொலை பழி விழுகிறது  .அதிலிருந்து எவ்வாறு அவர் மீண்டார் என்பது தான் கதை 
கார்த்தி ,பிரேம்ஜி ,KARTHI,PREMJI

வசனங்களில் பிரியாணி 

இரட்டை அர்த்த வசனங்களில் சந்தானத்தை மிஞ்சி விட்டார் கார்த்தி .காருக்குள் மாயா கார்த்தி அடிக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் ஒற்றை அர்த்தம் தான் பலருக்கும் புரியும் .அதே வசனத்தை ப்ரேம்ஜி சொல்வது போல ஹன்சிகாவிடம் கார்த்தி சொல்லும் இடம் தியேட்டரில் கொல் சிரிப்பு .ஹன்சிகாவிடம் அவ்வளவு காதல் காட்சிகள் இல்லை 

படம் முழுக்க கார்த்தியிடம் ஒட்டி கொண்டே வருகிறார் ப்ரேம்ஜி .நாசரிடம் பேட்டி எடுக்கும் போது EARPHONE  இல் ப்ரேம்ஜி விக்கி பேடியாவில் நாசர் பற்றிய தகவல்களை அளிக்கும் இடம் செம .ப்ரேம்ஜி பற்றி கார்த்தி அடிக்கும் கூத்துகளுக்கு செம சிரிப்பு தியேட்டரில் .

வில்ல தோற்றத்தில் ராம்கி 

ராம்கி வில்ல தோற்றத்தில் வருகிறார் .ஆனால் அவர் வில்லனில்லை என்பது தெரிய வரும் போது உச் கொட்ட வைத்து விடுகிறார் .விஸ்வாநாதன் ராமமூர்த்தி படத்தில் வருவது போல இந்த பால் வடியுற முகத்தையா நாம சந்தேக பட்டோம் என உச் கொட்ட வைத்து விடுகிறார் 

முதல் பாதி முழுவதும் ஜொள்ளு சாமாச்சாரங்கள் அதிகம் இடைவேளைக்கு பிறகு யார் கொலையாளி என்பதற்கு நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்கள்.நாம் நினைத்ததற்கு எதிர்மாறாக முடிவு இருந்தாலும் அது பெரிதாய் ஈர்க்க வில்லை எனக்கு !ட்விஸ்ட் என்ற பெயரில் நிறைய வைத்து இருக்கிறார்கள் .

மொத்தத்தில் பிரியாணி - குஸ்கா அல்ல .கொஞ்சம் லெக் பீஸ் இருக்கிறது .ஒருதடவை பார்க்கலாம் . 

1 comment:

  1. நல்ல விமர்சனம்... ஒரு தடவை பார்த்து விடுவோம்...!

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here