3 -பாடல்கள் ஓர் அலசல் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, January 19, 2012

3 -பாடல்கள் ஓர் அலசல்

சூப்பர் ஸ்டார் ஒரு பாட்டில் பெரிய ஆளாக மாறுவார் படங்களில்...அவரது மருமகன் நிஜத்திலேயே ஒரு பாடல் மூலம் பெரிய ஆளாகி விட்டார் என்று ஒரு TWEET படித்தேன்.உண்மை தான் கொலைவெறி பாடல் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் தனுஷ்.


கொலைவெறி  பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது .இருப்பினும் சிறந்த மெலோடிகள் தான்

6 பாடல்கள் ,ஒரு REMIX, மற்றும் மூன்று  தீம் சாங் என்ற கலவையாக  3 பட பாடல்கள் உள்ளது .பாடல்களில் நான் ரசித்த வரிகள் மற்றும் பாடலின் இணைப்பு கீழே !
இதழின்  ஒரு ஓரம்

அருமையான மெலடி .உதித் நாராயண் போல நிலுவையும் (நிலவையும் )ரசிக்க வைத்தாய் என்று தமிழில் புகுந்து விளையாடுகிறார் பாடகர்

பாடலில் நான் ரசித்த வரிகள் 

"என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என்  இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என்  ஆண்கர்வம் மறந்து உண்முன்னே பணிய வைத்தாய் " என்று பளிச்சிடும் வரிகள் இருக்கிறது

பாடல் கேட்க


கண் அழகா கால் அழகா

இதுவும் மெலடி பாடல் தான்.சுருதி ஹாசன் குரலில் ஈர்க்கிறது

பாடலில் நான் ரசித்த வரிகள் 

"எங்கயோ தேடி செல்லும் விரல் அழகா?
என்  கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா ?
உயிரே உயிரே உனைவிட
எதுவும் உயிரில்  பெரிதாய் இல்லையடி!" என்று அசத்தும் வரிகள் சிறப்பு

பாடல் கேட்க


நீ  பார்த்த விழிகள்

காதலின் ஏக்கம் சொல்லும் மெலடி

பாடலில் நான் ரசித்த வரிகள் 

"நீ  பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா


வலிகளில் பெண்ணே  வரைமுறை இல்லை
வதைக்கிறாய் என்னை மெதுவாக " என்றுகாதலின் ஏக்கம் சொல்கிறது.


பாடல் கேட்க


போ நீ போ 

காதலியை போக சொல்கிறாரா வர சொல்கிறாரா பாடலை கேளுங்கள் புரியும் .சோகம் வழியும் மெலடி

பாடலில் நான் ரசித்த வரிகள்

"இதுவரை உன்னுடன்  வாழ்ந்த நாட்கள் 
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா " என ஏங்குகிறார்

"தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ "என தவிக்கிறார்

பாடல் கேட்க

பாடலின் REMIX கேட்க 


LIFE ல WIFE  வந்துட்டா

 முந்தைய பாடல்களில் இருந்து தனித்து தெரியும் பாடல்.

"வீட்டுக்கு பிரெண்ட்ஸ் எல்லாம் வந்தா GUEST ஆக தான் நடத்தனும்
உன்  மேல தப்பில்லாட்டாலும் SILENT ஆக தான் இருக்கணும்" 

என மனைவி வந்தா இப்படி  தான் என சொல்கிறார்
 
பாடல் கேட்க


WHY THIS கொலைவெறி 

இந்த  பாடலை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை .உலக பிரசித்திபெற்ற பாடல் .பாடல் VISUAL ஆக எப்படி என தான் இப்போது ஆவல்.

தமிழை கொலை செய்து வந்த கவிஞர்களுக்கு மத்தியில் ஆங்கிலத்தை  முதன் முதலில் தமிழ் பாடலில் கொலை செய்ததற்காய் தனுஷுக்கு பாராட்டுக்கள் 

பாடல் கேட்க

தீம் சாங்ஸ் கேட்க 


*தீம்1

*தீம் 2

*தீம் 3


உங்கள் பார்வைக்கு :


*பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOL BAR இலவசமாக

*தமிழின் சிறந்த பொழுது போக்கு தளங்கள்

*தமிழின் சிறந்த தொழில் நுட்ப தளங்கள்

4 comments:

 1. வன்மையாக கண்டிக்கிறேன்... 3 பாடல்கள்ன்னு சொல்லிட்டு ஏழெட்டு பாடல்களை அலசியிருக்கீங்க...

  ReplyDelete
 2. பிரேம்...கொலை வெறிப்பாடல் உங்களை ஒரு பதிவு போட வச்சிருக்குன்னா அதனோட வெற்றி இதுதான்.ஆனா அதில என்ன இருக்குன்னு எனக்கும்தான் விளங்கல.விளங்கினா சொல்லுங்கோ !

  ReplyDelete
 3. @Philosophy Prabhakaran//ஐயோ ஐயோ

  ReplyDelete
 4. @ஹேமா//கண்டிப்பாக பாடலில் ஒன்றும் இல்லை என்றாலும் இன்றைய காதலிக்கும் இளைஞர்களை குறிவைக்கிறார்.அதனால் தான் இந்த வெற்றி

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here