தமிழா ! தமிழா ! - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Monday, January 31, 2011

தமிழா ! தமிழா !

மீன் பிடிக்க
சென்ற எம்
தமிழனை மீனவனை மீன்
போல கொத்தி சுருக்கு கயிறு
மாட்டி கொன்ற அற்ப பதர்களே !
எம் தமிழனை கொன்றால்
யார் கேட்பார் என நினைத்தீர்களா ?
உங்களை சொல்லி குற்றமில்லை

கடிதம் எழுதுவதும்
கட்டி அணைத்து
கண்ணீர் துடைப்பது போல
நடிப்பதும் மட்டுமே எங்கள்
அரசியலார்களின்
வேலை என்பதை
தெரிந்து இருக்கிறீர்கள்

தமிழன் கேவலபடுவதும்
தமிழ் கேவலபடுவதும்
எங்களுக்கு புதிதல்ல
என்று நினைத்தீரோ !

ஈழ தமிழனை சாக
விட்டு வேடிக்கை பார்த்த
இந்தியா அரசு இதிலும்
வேடிக்கை பார்க்கிறதே !

ஆஸ்திரேலியாவில்
சில மாணவர்கள் தாக்க பட்டதற்கே
துடிதுடித்தீரே நாங்களும்
இந்தியர் தானே பிறகேன் இப்படி?


(இந்த கவிதையை எழுத தூண்டிய அன்பர் செந்தழல் ரவிக்கு நன்றி ! மேலும் மீனவர் பிரச்சனை பற்றி அறிந்து கொள்ள கிளிக்குங்கள் )3 comments:

 1. நல்லா இருக்குங்க நண்பரே ..
  நல்ல கேள்விகள் நிறைய கேட்டிருக்கிங்க ..
  ஆனா ஒன்றுக்கு கூட பதில் சொல்ல எந்த தரங்கெட்ட அரசியல்வாதிக்கும் தகுதி இல்லை நண்பரே ...

  ReplyDelete
 2. நண்பரே நாம் எழுதி எதையும் சாதிக்க இயலாது.. எதிர்க்க வேண்டும்..... தமிழனை கொன்றால் யாரும் கேட்பதில்லை ஏன் தமிழன் கூட கேட்பதில்லை...

  ReplyDelete
 3. கவிதையில் சாடல் அருமை......வாழ்த்துக்கள்

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here