உன்னை தொலைத்த நாள் முதல் ... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, February 3, 2011

உன்னை தொலைத்த நாள் முதல் ...


தனிமை எனக்கு
பிடித்த ஒன்று தான்
ஆனால் நீ இல்லாத தனிமை
கொடுமை அல்லவா!


நீ இருந்து விடுவாய்
நான் இல்லாமல் ...
என்னால் இருக்க
முடிய வில்லையே
ஒருகணம் கூட
நீ இல்லாமல் ...

என் உறுப்புகள்
செயல் இழந்ததாய்
உணர்கிறேன்
உன்னை தொலைத்த
நாள் முதல் ..

இப்போது வேறொரு
கள்வனின்
கரங்களில் நீ ..
உன்னை எப்படி வைத்து
கொள்வானோ என்ற
ஆதங்கத்தில் நான் ...

தினம் தினம்
உன்னை பார்க்காமல்
புழுங்கி கொண்டிருக்கிறது
என் மனம்...

உன்னை தொற்றுகிருமிகள்
தாக்கி விட்டால்
பதறி போவேன் நான்
உடனே விடுவிப்பது தான்
என் முதல் வேலை !

எங்கு தொலைந்து
போனாய் என்னை விட்டு ?
எப்படி இருக்கிறாய்
என் இனிய கைபேசியே ?
என் கரம் படாமல் ...


(எனது கைபேசி (CELL PHONE) கடந்த ஞாயிறு அன்று இரவு மதுரை வருகையில் சேலம் பேருந்தில் தொலைந்து விட்டது .அதை ஒட்டி நான் எழுதிய கவிதை இது )

5 comments:

 1. உங்கள் கைபேசி ஒரு கள்ளியின் கைகளில் அல்லவா இருந்கின்றது. நிஜமாவே தொலசீங்களா? இல்ல யார்டயாவது . . . . . . . . .

  ReplyDelete
 2. அதுக்கப்புறம் பொன் கிடச்சதா இல்லையா...?

  ReplyDelete
 3. கிடைச்சிதா நண்பா ...
  கவிதை அருமை ...

  ReplyDelete
 4. @FOOD, Philosophy Prabhakaran &அரசன்
  இல்லை அன்பரே! கள்வன் எடுத்துக்கொண்டு வைத்து கொண்டான் அவன் வசம்

  ReplyDelete
 5. நல்லாயிருக்கு...:)

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here