கலைஞருக்கு ... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Tuesday, May 17, 2011

கலைஞருக்கு ...முதுமைக்கு ஓய்வு தந்த
இளைஞா !
கலைஞா! உமக்கு ஓய்வு
தர இம்மக்கள்
நினைத்தது
ஏன் ?

உடன்பிறப்புகள்
உயிர் எடுத்த கதை அறிந்தாயா
முதல்வா !
முதல்வா என முழங்க
முடியாதோ இனி ..

மின்சார வெட்டும்
அலைகற்றை ஊழலும்
தான் உன்னை வீழ்த்தியதை
அறிந்தாயா ? எத்தனை
சாணக்கியன் நீங்கள்
இதனை தீர்க்க இயலாமல்
போனது ஏன் ?


இலவசங்கள்
வாங்கி கொண்டு உம்மை
இல்லாமல் செய்து விட்டனரே
இம்மக்கள்108 திட்டம் மூலம் பல
உயிர் காத்து மகிழ
செய்தாயே !
மறந்தனரே மக்கள்


கலைஞர் காப்பீடு
திட்டம் மூலம் உயர் சிகிச்சையை
இலவசமாய் தந்து
இன்னுயிர் தந்தீரே பலருக்கு ..
மறந்தனரே! இம்மக்கள் ..


மாற்றம் வேண்டுமென்று
வாக்களித்த மக்கள்
மாற்றம் காண்பர் இன்னும் சில
வருடங்களில் .....
உம்மை ஏன் அகற்றினோம் என்று ...

No comments:

Post a Comment

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here