தமிழா! தமிழா! - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Monday, April 4, 2011

தமிழா! தமிழா!


தமிழா
உன்னை
ஆடு மாடு கொடுத்து
மேய்க்க சொல்கிறது
ஒரு கூட்டம்

மிக்சி ,கிரைண்டர்
கொடுத்து உன்னை
ஆட்டுவிக்க நினைக்கிறது
ஒரு கூட்டம்

இலவசங்கள்
வாங்கி கொண்டு
உன்னை விற்க போகிறாயா
ஐந்து ஆண்டுகள்
உன்னை ஆள்வதற்கு
உன்னை விற்க போகிறாயா
வாக்கிற்கு பணம் வாங்கி ...

கள்ளபணம் தானே
வாங்கி கொள் என
ஒரு கூட்டம் உன்னை சொல்லும்
உண்மை தான்
ஆனால் அதை வாங்க
நமக்கு என்ன உரிமை ?

உன் குடியுரிமையை
காப்பாற்ற வாக்களி
நீ இந்தியன் என்றால் வாக்களி
பணம் வாங்காமல் ..

3 comments:

 1. எங்கள் தொகுதியில் நிற்கும் சுயேட்சைகள் முதல் கொண்டு அனைவரும் இலவசம் தருவேன் எனவே சொல்கிறார்கள்.. என்ன செய்யலாம்.?? ஹி ஹி.. ரொம்ப லேட்டா கூவுறீங்க பாஸ்..

  ReplyDelete
 2. @தம்பி கூர்மதியன்//
  இன்னும் தேர்தல் முடியவில்லையே அன்பரே அதான் அன்பரே வந்தமைக்கும் கருத்து இட்டமைக்கும் நன்றி

  ReplyDelete
 3. உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
  பார்க்கவும்: வியாழன் கவிதைகள் சரமாக

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here