ஜெ.. க்கு நன்றிகள் பல .. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Wednesday, March 21, 2012

ஜெ.. க்கு நன்றிகள் பல ..

ஜெயலலிதா ,JEYALALITHA
நல்லா இருங்க மக்களே !

குறட்டை வீட்டு
காலையில் அதிக நேரம்
தூங்கும் இளசுகளை
அதிகாலையில் மின்தடை
செய்து எழுப்பும் உங்கள்
அக்கறைக்கு நன்றிகள் பல !

தொலைக்காட்சி
நெடுந்தொடரால் சீரழியும்
பெண்களை காப்பாற்ற
பகலில் அதிக நேரம்
மின்தடை செய்யும் உங்களுக்கு
 எங்கள் நன்றிகள் பல !

எங்கள் கிராமத்தில்
குடும்பங்களில் அளவளாவி
பேசி எவ்வளவு நாளாகி விட்டது
தொலைக்காட்சி அரக்கன்
வந்ததில் இருந்து ..
 எளிதில் போக்கினார் ஜெ
 மின்சார தடை இரவிலும்..
ஜெ.. க்கு நன்றிகள் பல ..

நள்ளிரவிலும்
மின்தடை செய்து எங்கள்
தூக்கத்தை கெடுப்பதில்
என்ன நன்மை? தேடி பார்த்தும்
ஒன்றும் அடங்க வில்லை
சொல்வீரா முதல்வரே !

--இது வஞ்ச புகழ்ச்சியா உண்மை புகழ்ச்சியா உங்கள் முடிவே !((இது எங்கள் கிராமத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது .நகரம் அல்ல )

 உங்கள்  பார்வைக்கு :

  17 comments:

  1. நம்ம கடையிலும் இதுபோல ஒரு பதிவுதாங்க...   கேள்வி அழகு...

   ஆனால் பதில்..?

   ReplyDelete
  2. தற்சமயம்
   எல்லா கிராமங்களின்
   இதே நிலை

   நன்றி
   உறைப்பு
   வினா எழுப்பல்

   ReplyDelete
  3. லாஸ்ட் 5 வருஷம் அவங்கள ஓய்வுல வெச்சிருந்ததுக்கு பழி வாங்குறாங்களோ என்னவோ?

   நட்புடன்
   கவிதை காதலன்

   ReplyDelete
  4. நல்ல கேள்விகள். ஆனால் அவர்களுக்கு எட்டுமா?

   ReplyDelete
  5. மின்வெட்டு பற்றிய உங்களின் சிந்தனையும் எனது சிந்தனையும் ஒன்றாக உள்ளது அன்பரே ...
   என்ன செய்ய ஒன்றும் சொல்வதற்கில்லை .. ஆனால் கட்டிலை தூக்கி வெளியே போட்டுக்கொண்டு இரவின் அழகை ரசித்த வண்ணம் உறங்கும் பாக்கியம் நகரத்து வாசிகளுக்கு கிட்டாது ...

   கவிதைக்கு என் வாழ்த்துக்கள்

   ReplyDelete
  6. @கவிதை வீதி... // சௌந்தர் //வாசித்தேன் அன்பரே நன்று

   ReplyDelete
  7. @Esther sabi //வருகைக்கு நன்றி

   ReplyDelete
  8. @செய்தாலி//உண்மை தான் வருகைக்கு நன்றி

   ReplyDelete
  9. @கவிதை காதலன்//இருக்கலாம் வருகைக்கு நன்றி .

   ReplyDelete
  10. @Abdul Basith//எனது எண்ணங்கள் மட்டுமே அன்பரே வருகைக்கு நன்றி

   ReplyDelete
  11. @அரசன் சே//உண்மை தான் அன்பரே வருகைக்கு நன்றி

   ReplyDelete
  12. @இராஜராஜேஸ்வரி//வருகைக்கு நன்றி

   ReplyDelete
  13. எல்லா கிராமங்களின் நிலை
   இது தான்...வாழ்த்துக்கள்...

   ReplyDelete
  14. தாலாட்டுப் பாடும் தாய் திருப்பள்ளி எழுச்சி பாடினால் கஷ்டம் தான்.

   Earth Hour என்று ஒன்று கொண்டாடுவார்கள் - ஒரு மணி நேரம் மிசாரப் பயன்பாட்டை நிறுத்தி. நம் மக்கள் அதை அனுதினமும் அனுஷ்டிக்கின்றனர்..

   ReplyDelete

  இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

  Post Top Ad

  Responsive Ads Here