இந்திய அணியின் சுவர் ஒய்வு- சச்சின் ? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, March 10, 2012

இந்திய அணியின் சுவர் ஒய்வு- சச்சின் ?


  • "இளம் வீரர்களுக்கு வழி விட்டு விலகுகிறேன் "-இது இந்திய அணியின் சுவர் ராகுல் டிராவிட் நேற்றைய ஓய்வு அறிவிப்பின் போது சொன்னது.இது மீடியாக்களுக்கு நல்ல செய்தி ஆகி விட்டது.
  • டிராவிட்டை போன்றே இளம் வீரர்களுக்கு வழிவிட்டு பிற மூத்த வீரர்கள் விலக வேண்டும் என்று மறைமுகமாகவும் மேலும் சில பத்திரிகைகள் பகிங்கரமாக சச்சின் ,லக்ஷ்மன் அணியை விட்டு  விலக வேண்டும் என கொக்கரிக்கின்றன.

  • ஏறக்குறைய சச்சின் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்.ஓய்வு பெறா விட்டாலும் இப்போது ஒன்றிரண்டு போட்டிகளில் தான் அவரை காண முடிகிறது .முக்கிய போட்டிகள் தவிர மற்ற போட்டிகளில் ஒய்வு  தான் ,.உலக கோப்பைக்கு பிறகு தற்போதைய ஆஸ்திரேலியா சுற்று பயணத்தில் தான் சச்சின் .ஆனால் இந்த ஓய்வு இவர் விரும்பி இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
  • கங்குலியை வலுக்கட்டயாமாக ஓய்வு பெற வைத்ததை போல் சச்சினையும் ஓய்வு பெற செய்ய ஒரு கூட்டம் காத்து கொண்டிருக்கிறது .என்னை பொறுத்த வரை ஒரு நாள் போட்டிகளில் உலக கோப்பையை தற்போது வென்ற போதே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அது சிறப்பாக இருந்திருக்கும் .இப்போது அவரை ஓய்வு பெற சொல்லும் நிலை ஏற்பட்டிருக்காது .சச்சின் 100 வது சதத்துகாக காத்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்காது 
  • வழக்கமாக ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடும் லக்ஷ்மன் இப்போது அங்கும் கோட்டை விட்டது அவரையும் ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சு எழும்ப காரணமாகிருக்கிறது 
  • சச்சின் 100 வது சதம் அடிக்கட்டுமே! அடித்த அந்த போட்டியிலேயே ஓய்வு பெற வேண்டும் அது தான் அவருக்கு சிறப்பு என்பது என் எண்ணம் .1 comment:

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here