சரவணன் -மீனாட்சி வரவேற்பு -என்ன கொடுமைடா சாமி - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, June 22, 2012

சரவணன் -மீனாட்சி வரவேற்பு -என்ன கொடுமைடா சாமி

சரவணன் -மீனாட்சி
நெடுந்தொடர்கள் பக்கம் எட்டி பார்க்காத இளைய தலைமுறையை (ஆண்கள்) நெ(கொ)டுந்தொடர்களை பார்க்க செய்தது விஜய் டிவி தான் என நினைக்கிறேன்

  • பெரும்பாலும் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டதொடர்களே விஜய் டிவியில் வெற்றி பெறும்.அழுது  வடியும் தொடர்கள் விஜய் டிவியில் வெற்றி பெற்றது  அரிது 
  •  கனா காணும் காலங்கள் ,காதலிக்க நேரமில்லை மற்றும் சரவணன் மீனாட்சி தொடர்களின் ரிங்டோன்களை கூட உபயோக படுத்தும் அளவுக்கு புகழ் பெற்றுள்ளது .
  • எதையும் காசாக்க நினைக்கும் விஜய் டிவி கடந்த ஞாயிறு சரவணன் -மீனாட்சி வரவேற்பு என்று விளம்பரபடுத்தியது .உண்மையான திருமண வரவேற்பு போல நடந்த இந்நிகழ்ச்சி ஒரு நாடகம் என்றாலும் இப்படியும் காசு பாக்கலாமா என யோசிக்க வைக்கிறது

சன் டிவி நெடுந்தொடர்களை போட்டு கொல்லுமே தவிர விஜய் டிவியை போல அந்த நிகழ்ச்சியை வெளியில் போட்டு கொல்லாது .அந்த வகையில் சன் சன் தான் .

சரவணன் மீனாட்சி


நிகழ்ச்சி  எப்படி :

  • திரண்டிருந்த  திருநெல்வேலி கூட்டத்திற்காக  ஆட்டம் பாட்டம் என களை கட்டியது 
  • நாடகத்தில் நடிக்கும் சரவணனின் அம்மா (குயிலி )இங்கேயும் அதே போல் நடித்து கொண்டிருந்தார்
  • நிகழ்ச்சி தொகுப்பாளர் மா.கா.பா கேட்ட  கேள்விகளுக்கு தர்ம சங்கடத்தில் சிரித்து நெளிந்து சமாளித்து கொண்டிருந்தார்  மீனாட்சி 
  • கனா  காணும் காலங்கள் நட்சத்திரங்கள் அவ்வப்போது வந்து ஆட்டம் போட்டனர்  
  • இந்த  வரவேற்பு போதாது என்று அடுத்த வாரம் கோவையில் வேறு வரவேற்பாம்
  • உண்மையான மணப்பெண்  போல எப்படி தான் நடிக்க முடிகிறதோ இவ்வளவு கூட்டத்தில்! என எனக்கு தோன்றியது
  • சரவணன் மீனாட்சி வரவேற்பு -என்ன கொடுமைடா சாமி


உங்கள் பார்வைக்கு :


5 comments:

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here