தமிழ் சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்கள் 2012 - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, December 30, 2012

தமிழ் சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்கள் 2012


2012 இல் பல தமிழ் படங்கள் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்து உள்ளது .அவற்றில் நான் ரசித்த பார்த்த படங்கள் பற்றிய எனது எண்ணங்கள் கீழே

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

காதலில் சொதப்புவது எப்படி :

 •  நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு   வாழ்த்துக்கள் பாலாஜி. 
 • ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள்  என்பதே கதை.
 • நெகடிவ் க்ளைமாக்ஸ் இல்லை.சுவிட்சர்லாந்து டூயட் இல்லை.தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை உடைத்து எரிந்திருக்கிறது  இப்படம்.
 • "இத சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா!"என அமலாபால் சித்தார்த்திடம் சொல்லும் அழகே தனி!
 • இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் ஈ 

 • நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து  வில்லனை பழிவாங்குவது தான்  கதை 
 • ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா  கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால்  மனித இனம் படும் சின்ன  சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
 • இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
 • இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம் 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

VIJAY SETHUPATHI
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

 • தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை கிழித்தெறிந்த படம் .முக்கால்வாசி படத்தில் காதாநாயகி இல்லை.
 • தலையில் அடிபட்டதால் கடந்த ஒரு வருடத்தில் நடந்தைவை அனைத்தும் மறந்த நாயகனுக்கு அவன் திருமணமும் மறந்து விடுகிறது .அவனது நண்பர்கள் அதை மறைத்து  திருமணத்தை எப்படி நடத்தினார்கள் என்பது தான் கதை .
 • நட்பின் பெருமையை சொல்லும் படம் 

  @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
  உங்கள் பார்வைக்கு :  10 comments:

  1. //நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் //

   இந்த படத்தை தவிர மற்ற படங்கள் சொல்ல பட்ட களங்கள்/விதங்கள் வித்தியாசமே ஒழிய கிளிசே உடைத்தெறிந்தது என்றெல்லாம் சொல்ல முடியாதே..

   இதிலும் காதலில் சொதப்புவது எப்படி.. நல்ல மேக்கிங் மற்ற படி அன்று வந்த குஷியிலிருந்து நேற்று வந்த நீ.பொ.வ. வகையறா தானே..

   ReplyDelete
  2. உண்மைதான்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

   ReplyDelete
  3. @ Harry Rushanth//4 பாட்டு 4 சண்டை படங்களில் இருந்து "காதலில் சொதப்புவது எப்படி" படம் வித்தியாச கலன் தானே

   ReplyDelete
  4. "மதுபானக் கடை"யையும்,
   "அட்ட கத்தி"யையும்
   விட்டுட்டீங்களே!!

   ReplyDelete
  5. இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

   ReplyDelete

  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

   2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


   அன்புடன்
   மதுரைத்தமிழன்

   ReplyDelete
  7. சார் உங்க பக்கம் ஃபாலோவரா எப்படி இணைக்கணும்?

   ReplyDelete
  8. வலது புறம் followers gadget இல் join this site இல் கிளிக் செய்து சேருங்கள் அன்பரே

   ReplyDelete
  9. நன்றி ஃபாலோவரா இணைச்சுகிட்டேன்.

   ReplyDelete
  10. நீங்கள் குறிப்பிட்டப் படங்கள் உண்மையிலேயே நான் இரசித்தப் படங்கள் தான் பாஸ்.
   நன்றி.
   புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   ReplyDelete

  இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

  Post Top Ad

  Responsive Ads Here