"தற்கொலை" தீர்வாகுமா ? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, March 1, 2013

"தற்கொலை" தீர்வாகுமா ?

suicide
யார் உனக்கு உரிமை
தந்தது தற்கொலை செய்ய?

தன் குருதி சிந்தி
இன்னுயிர் நடுங்கி
உன்னை  பெற்றடுத்த தாய்க்கு
மீண்டும் அவள் உயிர் நடுங்க
உன் உயிர் நீக்கினாயே ஏன் ?கோழைகள்  தான்
தற்கொலை செய்வர்
நீ வீரன் அல்லவா நினைத்தேன்
நான்

உனக்குள்ள துக்கங்கள்
உன் சாவினாலே போகும்
என நினைத்தாய் நீ !
உன் குடும்பம் படபோகும்
அல்லல் நினைத்து
பார்த்தாயா அந்த முடிவை
எடுக்கும் போது ..

அரசு உத்தியோகதிற்காய்
அல்லும் பகலும்
உழைத்தாய்-வெற்றி கொண்டாய்
இப்போது உன் உழைப்பெல்லாம்
வீண் ஆக்கி விட்டாயே

எனக்கு தற்கொலை
செய்பவர்களை பிடிப்பதில்லை
இப்போது நீயும் ....


-எனது பள்ளி பருவ நண்பன் ஒருவன் இன்று தன் உயிரை தானே போக்கினான்.அவனுக்கு எனது அஞ்சலிகள்.இறந்தவர்களை விமர்சிக்க கூடாது எனினும் என்னால் முடிய வில்லை.


                                                                                -கனத்த இதயத்துடன் -
                                                                                        பிரேம்குமார் .சி 

உங்கள் பார்வைக்கு :


5 comments:

 1. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...

  ReplyDelete
 2. அவரின் ஆத்மா ஈசன் அடி சேரட்டும்!ம்ம்ம்

  ReplyDelete
 3. என் மலர் அஞ்சலிகள் நண்பருக்கு...
  விமர்சிக்க கூடாதென்றாலும்..
  நீங்கள் வடித்த கவியின் வரிகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதே நண்பரே...
  இதைப் படித்து இனியும் யாரேனும் இதுபோன்ற '
  முடிவை எடுக்காது இருந்தால் நலமே...

  ReplyDelete
 4. கனத்த இதயத்துடன் அஞ்சலிகள் நண்பருக்கு ...

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here