சூர்யா -பிரகாஷ்ராஜ் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி யார் பெஸ்ட் ? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, March 14, 2013

சூர்யா -பிரகாஷ்ராஜ் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி யார் பெஸ்ட் ?

NVOK-2

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில நாட்கள் தான் ஆகிறது அதற்குள்  அந்த நிகழ்ச்சியின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை எனக்கு !ஏன் என்பதற்கு சில  காரணங்கள்

 • சூர்யாவுக்கு மாற்றாக பிரகாஷ்ராஜ் எதிர்பார்க்காத ஒன்று.
 • "மாற்றம் ஒன்றே மாறாதது .உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் கேள்விகளுடனும் கோடிகளுடனும்  உங்கள் சூர்யா "-இதை சூர்யா சொல்லும் போதே உற்சாகம் புன்னகை கலந்து சொல்வார் . இதே வரிகளை பிரகாஷ்ராஜ் சொல்லும் போது  முந்தைய ஈர்ப்பு இல்லை 
 • வில்லத் தனம் காட்டிய நடிகர் என்பதால் எப்பவும் இறுக்கமாக இருக்க வேண்டுமா என்ன ?
 • கதாநாயகன் என்பதால் சூர்யாவுக்கு ஜொள்ளு விட்ட பெண் பங்கேற்பாளர்களை பார்க்கும் போதும்   விஜய் டிவி தனது விளம்பரங்களில் போட்டு காட்டும் போதும்  நிகழ்ச்சியை பார்க்க ஓர்  ஆர்வம் ஏற்படும்.அவ்வப்போது சூர்யாவே ஜொள்ளு விட்ட நிகழ்ச்சிகளும் உண்டு ஆனால் தற்போது அது நடக்க சாத்தியம் இல்லை எனவே தோன்றுகிறது .
NVOK -2
 • மின்னல் வரிகளுக்கான  கேள்வி என சூர்யா சொல்லும் போதே ஒரு துடிப்பு  இருக்கும் .அது இப்போது இல்லை 
 • நான்  சூர்யா ரசிகர் இல்லை.ஆனாலும் இவை  எனக்கு தோன்றுகிறது என்னை  பொறுத்தவரை கார்த்தியை போட்டிருந்தால்  நிகழ்ச்சி களை கட்டிருக்கும்   என நினைக்கிறேன் 
 கேள்விகளை பொறுத்தவரை  கொஞ்சம் மெனக்கெட்டு இருப்பது  தெரிகிறது ஆனாலும் முந்தைய  சீசன் போல அவ்வப்போது கேள்விகள்  வருகின்றன 

உதாரணத்துக்கு :

இந்த   வசனத்தை பூர்த்தி செய்க 

எப்படி இருந்த நான் ------------------

எ) இப்படி ஆகிட்டேன் b )அப்படி  ஆகிட்டேன் 

முந்தைய சீசனில் எழுதிய பதிவுகள் :

13 comments:

 1. நான் நினைத்ததை அப்படியே எழுதியிருக்கிறீங்க. பிரகாஷ்ராஜ் ஒரு நல்ல நடிகர். எனக்கு வில்லன் நடிகர்களில் அவரை பிடிக்கும். பிரகாஷ்ராஜ் தன்னோட ஸ்டைலில் செய்கிறார். இதுவும் கடந்து போகும்.

  ReplyDelete
 2. நீங்க சொல்வது சரிதான்

  ReplyDelete
 3. நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் போக போக தான் தெரியுமோ என்னவோ

  ReplyDelete
 4. @திண்டுக்கல் தனபாலன் //இப்ப கொஞ்சம் பரவாயில்லை அன்பரே கேள்விகள்

  ReplyDelete
 5. @shaya //உண்மை தான் நன்றி அன்பரே

  ReplyDelete
 6. @சென்னை பித்தன்//உண்மை தான் பித்தரே

  ReplyDelete
 7. @malar balan //ஆம் அன்பரே

  ReplyDelete
 8. எனக்கு சூர்யாவே தவறான தேர்வாகத்தான் தோன்றியது . சூர்யாவோடது மென்மையான குரல் . ஆனா பாவம் அவர கத்தவிட்டுடாங்க.

  சூர்யாவிடமிருந்த அந்த ஈர்ப்பு பிரகாசிடம் இல்லை என்பது உண்மையே .

  இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒரு ஆளுமை வேண்டும் . அது அமிதாப்பிடம் மட்டுமே இருந்தது . அமிதாப்பை தவிர்த்து வேறு யாரும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாகச் செய்துவிடவில்லை என்றே நினைக்கின்றேன் .


  கார்த்தியை, கார்த்தியாகவே நடத்தவிட்டார்களேயானால் நிச்சயமாக கலகலப்பாக கொண்டு செல்வார் .நிகழ்ச்சிக்கு ஒரு புதிய வண்ணம் கிடைக்கும் .

  ReplyDelete
 9. உண்மைதான் நண்பரே சூர்யாவிடம் இருந்த அந்த கரிஷ்மா பிரகாஷ்யிடம் இல்லை. சூர்யா எப்பவும் உற்சாகமாக இருப்பார். பிரகாஷ்ராஜ் சிலசமயம் டல்லாக இருப்பது போல் தோன்றுகிறது. நீ.வெ.ஒ.கோ. பெரும்பாலும் கேட்கப்ப்டுகின்ற கேள்விகள் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட கேள்விகள் தான். தமிழ்நாட்டைப்பற்றி அதிகம் தெரிந்தவர் பிரகாஷ் ராஜைவிட சூர்யாவிற்கு தான் பரிட்சயம் அதனால் எளிதாக கேள்விக்கான பிண்ணனியை சொல்லி நிகழ்ச்சியை சுவாராஸ்யமாகவும் பார்ப்பவர்களுக்கு எளிதாக ரிலேட் செய்ய முடியும். ஆனால் பிரகாஷ்ராஜ் வேர் தமிழ் இல்லை என்பதால் கேள்வி பதில் மெக்கானிக்கலாக தான் இருக்கும் இருக்கிறது. இந்த சந்தேகம் எனக்கு ஆரம்பத்தில் இருந்து இருந்தது அது இப்போது தெளிவாக தெரிகிறது.

  ReplyDelete
 10. @ ஜீவன்சுப்பு// உண்மை தான் அன்பரே விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி

  ReplyDelete
 11. @Inian //உண்மை தான் அன்பரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 12. அன்பின் பிரேம் - பிரகாஷ் ராஜ் சூர்யா - ஒப்பு நோக்கி எழுதப்பட்ட பதிவு - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here