"அலெக்ஸாவை" மடக்குவது எப்படி? ஓர் அலசல் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, March 10, 2013

"அலெக்ஸாவை" மடக்குவது எப்படி? ஓர் அலசல்

ALEXAஇப்பதிவு புதிதாக பதிவுகள் எழுதும்  அன்பர்களுக்கு ஆனது .

பதிவுகள் பல எழுதி கூட்டம் கொஞ்சம் சேர்ந்த பின்னர் பதிவர்களுக்கு alexa எனப்படும் தரவரிசை தளத்தில் சிறப்பான இடத்துக்கு வர வேண்டும் என்பது விவரம் புரிந்த பதிவர்களின் எண்ணமாக இருக்கும்.

தமிழ் தளத்துக்களுக்கான தமிழ் மணம் திரட்டியை போல அலெக்ஸா ஒன்றும் திரட்டி அல்ல .ஆனால் அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்கும் குறைவான ரேங்க் பெற்று இருந்தால் GOOGLE ADSENSE  அனுமதி கிடைக்கும் என்ற ஒரு மாயையும் உண்டு .உண்மையாக கூட இருக்கலாம்

அலெக்ஸாவில் முன்னேற : 
 • புதிதாக தளம் ஆரம்பித்து இருந்தால் உங்கள் தளம் தர வரிசையில் கோடிகளில் இருக்கும் .தளத்துக்கு வாசகர்கள் வருகை சிறப்பாக இருப்பின் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் 
 • அலெக்ஸா டூல்பார் உங்கள் தளத்தில் இணைத்தால் தர வரிசையில்  கொஞ்சம் மாற்றம் இருக்கும் 
 • அதுமட்டும் இல்லாமல் தரவரிசையில் முன்னேற நாமே டூல்பார் தயாரிக்கும் அமைப்பை அலெக்ஸா தளம் வழங்கி உள்ளது நான் உருவாக்கிய அலெக்ஸா டூல்பார் இங்கே .இதன் மூலமும் தர வரிசையில் மாற்றம் ஏற்படும் 
 • தொடர்ந்து பதிவுகள் எழுத வேண்டும் .இல்லையெனில் உங்கள் தர வரிசையில் மாற்றம் கோடிகளுக்கு போய்விடும் அபாயமும் உண்டு  
 • அலெக்ஸா தர காட்டிWIDGET  களை  உங்கள் தளத்தில்  இணைப்பதன் மூலமும் தர வரிசையில்   மாற்றம் ஏற்படும் 
எனது அலெக்ஸா விவரங்கள் ;
 • எனது தளத்தை  25-34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தங்களது இல்லத்தில் கண்டு கழிக்கின்றனர் 
 • இன்றைய நிலவரப்படி  எனது தளத்தின் மூன்று மாத அலெக்ஸா ரேங்க் 3,98,890.இந்தியாவில் 1,18,876 இலங்கையில் 8506 
 • எனது தளத்தை மொத்தம் 6 நிமிடங்கள் செலவழிக்கின்றனர் .ஒவ்வொரு பக்க பார்வைக்கும் 57 வினாடிகள் எடுக்கின்றனர் 
 • கவிதை சம்பந்தமாகவே எனது தளத்தில் தேடுவதாக அலெக்ஸா கூறுகிறது 
SOURCE :அலெக்ஸாவில் நான்

பதிவுலக புதியவர்கள் இத்தளத்தில் இணைய  இங்கு சொடுக்குங்கள்


உங்கள் பார்வைக்கு :1 comment:

 1. பகிர்வுக்கு நன்றி பலருக்கு வழிகாட்டியதுக்கு !

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here