சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, March 23, 2013

சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல்

THIRAIMANAM ,KARTHI

பொதுவாகவே நம் அனைவருக்கும் நம் தளத்தை அதிக பேர் பார்க்க வேண்டும்  கருத்துரை இட வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் கிடைப்பது இல்லை.எனது தளத்தில் பக்க பார்வைகளை அதிகரிக்க செய்ததில் முக்கிய பங்கு தமிழ் மணம் திரட்டியின் திரைமணத்தையே சாரும்என் கவிதைகளை  விரும்புவர்கள் மட்டுமே என் கவிதை பதிவுக்கு வருவர் .ஆனால் சினிமா சம்பந்தமான இடுகைகளுக்கு நம் தளத்தை பற்றி தெரியாதாவர்களும்  வருவர்

அதிக பக்க பார்வைகளை பெரும் பதிவுகள்  தமிழ்மணம் திரட்டியின் திரைமணத்தின்  சூடான இடுகைகளில் இடம் பெறும் .அதில் இடம் பெறுவது அவ்வளவு எளிதல்ல .அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவு

திரைமணம் சூடான இடுகைகளில் இடம்பெற :


KARTHI

முதல் நாள் முதல் ஷோவே பார்த்து எழுதுவது

 • இது பலருக்கு தெரிந்த ஓன்று தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்த்து எழுதுவது தான் ஹிட் அடிக்கும் பல பிரபல பதிவர்கள் செய்வது .இதுஎன்னை போன்ற  சாமானிய பதிவர்களால் முடியாத ஓன்று .
 •  அதற்கு அப்படம் வந்து பலபேர் விமர்சனம் போட்டு ஓய்ந்த பின்னர் மெதுவாக அப்படத்தை பத்தி மற்றவர்கள் எழுதாத தலைப்புகளில் எழுதுவது நன்று .அப்படி அல்லாமல் அலெக்ஸ்பாண்டியன் -விமர்சனம் என்று நீங்கள் எழுதினால் சினிமாவின் தீவிர ரசிகர்கள் ஒரு சிலர் மட்டுமே பார்த்து செல்வர்
 • உதாரணத்திற்கு அலெக்ஸ்பாண்டியன் படம் வந்து மூன்று வாரங்களுக்கு பிறகு நான் எழுதிய திரை விமர்சனத்தின் தலைப்பை இப்படி வைத்தேன்
 • அனுஷ்கா -அனிச்சம் பூ ஓர்  ஆய்வு  என்று தலைப்பிட்டு  அனிச்சம் பூவை ஆய்வு செய்தேன் (எப்படிலாம் ஆய்வு பண்ண வைச்சுட்டாங்க )
 • விதிவிலக்கு : நீங்கள் பிரபல பதிவர் என்றால் பல வாரங்களுக்கு பின்னர் விமர்சனம் போட்டாலும் தலைப்பு படத்தின் பெயராய்  இருந்தாலும் உங்கள் profile  பார்த்து கூட்டமடிப்பர்
*******************************************************************************
பவர் ஸ்டாரை பற்றி எழுதுவது


POWER STAR

பவர் ஸ்டாரை பற்றி எழுதுவது இப்போது ஹிட் அடிக்க தொடங்கி உள்ளது ஆனால் முதலில் பவர்  ஸ்டார் பெயரை வைத்து விட வேண்டும்

உதாரணத்திற்கு
facebook இல் powerstar  என்று வைப்பதை விட powerstar  facebook இல் என்று வைப்பது ஹிட் அடிக்கும்

பவர் ஸ்டார் FACEBOOK கலாட்டக்கள்

பவர் ஸ்டாரின் லத்திகா பரபர விமர்சனம் 

பவர் ஸ்டார் ஒரு பாட்டுக்கு ஆடி தன் திறமையை காட்டி வருவதால் விரைவில் சாதாரண ஸ்டார் ஆகி விடும் வாய்ப்பு உண்டு .இப்போதைக்கு பதிவு தேத்தலாம்
********************************************************************************
தலைப்புகளில் கவர்ச்சி 


KALAINGAR

தலைப்புகள் தான் பக்க பார்வைகளை அதிகமாக்குகிறது .உதாரணத்திற்கு 

facebook  இல் கலைஞர் இன்னும் இருக்க வேண்டுமா ? என்று வைத்த பதிவுக்கு வந்த பக்க பார்வைகளை விட அதில் உள்ள ஒரு கருத்தை வைத்து மாற்றி அமைத்த  கலைஞர் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர் பதிவுக்கு அதிக பக்க பார்வைகளை பெற்று தந்தது

*******************************************************************************

இதன் தொடர்ச்சி விரைவில் ..அடுத்த பதிவாக ..

உங்கள் பார்வைக்கு :4 comments:

 1. சரிங்க... நல்ல யோசனைகள்...

  இந்த "பிரபலம்" என்றால் என்னவென்று விளக்கமாக சொல்ல முடியுமா...?

  ReplyDelete
 2. @திண்டுக்கல் தனபாலன் //


  //இந்த "பிரபலம்" என்றால் என்னவென்று விளக்கமாக சொல்ல முடியுமா...//


  நீங்கள் தான்

  ReplyDelete
 3. நல்ல ஆலோசனைகள்! நன்றி!

  ReplyDelete
 4. ஹா.ஹா...எல்லாமே செம ஐடியாவா இருக்கு.

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here