Sunday, December 19, 2010
அது மட்டும் இல்லை எனில் ?
Posted by Prem S On Sunday, December 19, 2010

ஆண் என்ற அகங்காரம்
சிறிதாவது இருக்கும்
ஆண்கள் அனைவருக்கும்
அடி மனதில் ...
என்ன நாம் அப்படி உயர்ந்து
விட்டோம்? திண் தோள்களும்
உடல் வலிமையையும் தவிர ..
நமக்குள் ஓர் உயிரை
சுமக்க முடியுமா
தாய் என்ற தவச் சொல்
நமக்கு கிடைக்குமா ?
நமக்கு ஒரே பெருமை
பெண்ணுக்கு தாய்மையை
தருவது மட்டும் தான்
அதுவும் நாளைய உலகில்
இல்லாமல்போகலாம்
அப்போது நமக்கு என்ன பெருமை?
Thursday, December 9, 2010
காவலன் பாடல்கள்
Posted by Prem S On Thursday, December 09, 2010
மொத்தம் ஐந்து பாடல்கள்
மெல்லிசை பாடல்கள் இரண்டு
அறிமுக குத்து பாடல் ஓன்று
ராப் பாடல் ஓன்று
இன்னொரு குத்து பாடல் என
விஜய் பட பாடல்கள் அமைப்பு
இதிலும் காணப்படுகிறது
ஆச்சர்ய அதிசயமாக
நாயகியை தேடி காதல் செய்யும்
பாடல்கள் இரண்டு உண்டு இதில்
முந்தைய படங்களில்
நாயகி தான் விஜயை
காதல் செய்வது போல் இருக்கும்
"விண்ணை காப்பான் ஒருவன்" பாடல்
விஜயின் அறிமுக பாடல்
"யாரது" பாடல் கார்த்திக்கின்
குரலில் காதலியை தேடும் பாடல்
மெலிதாய் இனிக்கிறது
பட்டாம்பூச்சி பாடலில் கே.கே மற்றும்
ரீட்டா குரலில் மயக்குகிறது
"சட சட" என்ற பாடலில்
பட பட என பாடியிருக்கிறார்
கார்த்திக்
"ஸ்டெப் ஸ்டெப் "பாடல் ராப்
ரகம் குதிக்க வைக்கும் பாடல்
மொத்தத்தில் விஜய் படத்திற்கே
உண்டான பாடல்கள்
இந்த முறை மெலோடியயும்
இணைத்திருக்கிறார் இசை வித்தியாசாகர் என்பதால் ...
(பாடல்கள் கேக்க)
click here
Monday, November 29, 2010
உயிர்கொல்லி தினம்
Posted by Prem S On Monday, November 29, 2010
*HAPPY LOVERS DAY
HAPPY WOMENS DAY
என்பது போல்
*மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கு
தான் மணம் உண்டுமல்லிகைக்கு
*மருந்தரியா நோய்க்கு
பாதுகாப்பில்லா
உறவு ஏன் ?
உயிர் குடிக்கும்
என தெரிந்தும்
*நாகரிகத்தின் வெளிப்பாடு
நல்லதற்கு தான்
தீயதர்க்கு அல்ல !
AIDS இல்லா இந்தியா உருவாக
மனைவியை மட்டுமேWednesday, November 24, 2010
என் தந்தை
Posted by Prem S On Wednesday, November 24, 2010
Monday, November 22, 2010
தந்தை
Posted by Prem S On Monday, November 22, 2010
Saturday, October 23, 2010
பெண்
Posted by Prem S On Saturday, October 23, 2010

**பெண் ஓர் தென்றல்
அவளை மதிப்பவர்க்கு!
பெண் ஓர் புயல்
அவளை பழிப்பவர்க்கு!
**பெண் ஓர் சூரியன்
பகைவரை சுட்டெரிப்பதில்!
பெண் ஓர் நிலா
கவிஞர்களை
சுண்டி இழுப்பதில்!
**பெண் ஓர் கவிதை
காதலனுக்கு
பெண் ஓர் விதை
குடும்பத்தை விஸ்தரிப்பதில்
பெண் ஓர் மலர்
மென்மையின் உருவாய் இருப்பதால்..
**மொத்தத்தில்
பெண் ஓர் இறை
படைக்கிறாள்
காக்கிறாள் அழிப்பதில்லை...
அவளை மதிப்பவர்க்கு!
பெண் ஓர் புயல்
அவளை பழிப்பவர்க்கு!
**பெண் ஓர் சூரியன்
பகைவரை சுட்டெரிப்பதில்!
பெண் ஓர் நிலா
கவிஞர்களை
சுண்டி இழுப்பதில்!
**பெண் ஓர் கவிதை
காதலனுக்கு
பெண் ஓர் விதை
குடும்பத்தை விஸ்தரிப்பதில்
பெண் ஓர் மலர்
மென்மையின் உருவாய் இருப்பதால்..
**மொத்தத்தில்
பெண் ஓர் இறை
படைக்கிறாள்
காக்கிறாள் அழிப்பதில்லை...
Friday, October 22, 2010
நாளைய தமிழ்
Posted by Prem S On Friday, October 22, 2010

*அங்கு கண்டேன்
இங்கு கண்டேன்
கூறிடுவர் விரைவில்
நம் தமிழ் எங்கு கண்டோம் என !
*ஆங்கிலம் இணைப்பு மொழி தானே
ஏன் உயிர்ப்பாக நினைக்கிறாய் ?
ஆங்கிலத்தை அரவணை
தவறில்லை தமிழை ஏன்
துறவறம் கொள்ள செய்கிறாய் ?
*தமிழனை கண்டாலாவது
தமிழில் பேசு
பிறரோடு உன் ஆங்கிலத்தை வீசு!
*நாளைய உலகில்
தமிழ் இருக்கட்டும்
இறக்கச் செய்திடாதே !
இங்கு கண்டேன்
கூறிடுவர் விரைவில்
நம் தமிழ் எங்கு கண்டோம் என !
*ஆங்கிலம் இணைப்பு மொழி தானே
ஏன் உயிர்ப்பாக நினைக்கிறாய் ?
ஆங்கிலத்தை அரவணை
தவறில்லை தமிழை ஏன்
துறவறம் கொள்ள செய்கிறாய் ?
*தமிழனை கண்டாலாவது
தமிழில் பேசு
பிறரோடு உன் ஆங்கிலத்தை வீசு!
*நாளைய உலகில்
தமிழ் இருக்கட்டும்
இறக்கச் செய்திடாதே !
Subscribe to:
Posts (Atom)










