Friday, March 1, 2013

"தற்கொலை" தீர்வாகுமா ?

suicide
யார் உனக்கு உரிமை
தந்தது தற்கொலை செய்ய?

தன் குருதி சிந்தி
இன்னுயிர் நடுங்கி
உன்னை  பெற்றடுத்த தாய்க்கு
மீண்டும் அவள் உயிர் நடுங்க
உன் உயிர் நீக்கினாயே ஏன் ?



கோழைகள்  தான்
தற்கொலை செய்வர்
நீ வீரன் அல்லவா நினைத்தேன்
நான்

உனக்குள்ள துக்கங்கள்
உன் சாவினாலே போகும்
என நினைத்தாய் நீ !
உன் குடும்பம் படபோகும்
அல்லல் நினைத்து
பார்த்தாயா அந்த முடிவை
எடுக்கும் போது ..

அரசு உத்தியோகதிற்காய்
அல்லும் பகலும்
உழைத்தாய்-வெற்றி கொண்டாய்
இப்போது உன் உழைப்பெல்லாம்
வீண் ஆக்கி விட்டாயே

எனக்கு தற்கொலை
செய்பவர்களை பிடிப்பதில்லை
இப்போது நீயும் ....


-எனது பள்ளி பருவ நண்பன் ஒருவன் இன்று தன் உயிரை தானே போக்கினான்.அவனுக்கு எனது அஞ்சலிகள்.இறந்தவர்களை விமர்சிக்க கூடாது எனினும் என்னால் முடிய வில்லை.


                                                                                -கனத்த இதயத்துடன் -
                                                                                        பிரேம்குமார் .சி 

உங்கள் பார்வைக்கு :


Sunday, February 17, 2013

"பவர் " ஸ்டார் -FACEBOOK கலாட்டாக்கள் ஓர் பார்வை


கண்ணா லட்டு தின்ன ஆசையா மூலம் பவர் ஸ்டார் உண்மையிலேயே ஸ்டார் ஆவதற்கு ஆன வாய்ப்புகள் பிரகாசாமாகி வருகிறது .FACEBOOK  இல் பவரை பற்றி பல பக்கங்கள் உள்ளன அவற்றில் இருந்து  சில ..



இந்த படம் ஒன்று போதும்  பவரின் பவரை காட்ட !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உலக அழகி ஐஸ்வர்யாவை அம்மா வேடத்துக்கு அழைக்கும்  பவர் 



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இளசுகளின் சண்டை பவருக்காக ...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்திய அரசுக்கு வேண்டுதல் பவர் ரசிகர்களிடம் இருந்து ..




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டெங்கு கொசுவை ஒழிப்பது எப்படி விளக்கும் பவர் 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இறுதியாக ரஜினியின் கோச்சடையானுக்கு போட்டியாக பவரின் வில்லத்தனத்தில் ஆனந்த தொல்லை 




இன்னும் வேண்டுவோர் இந்த facebook  பக்கத்தில் சென்று இணைந்து கொள்ளுங்கள்

Sunday, February 10, 2013

4 3 2 1 - விஜய் டிவி இது தான் !

vijay tv

என்ன என்ன 4321 என்ன? புள்ளி ராஜா கணக்கில் வேறு ஒன்றா  என எண்ணி கொண்டு இருந்த போது விஜய் டிவி அது என்ன என்பதை அறிவித்து விட்டது



கடந்த இரண்டு நாட்களாக விஜய் டிவியை பார்ப்பவர்களுக்கு தெரிந்து இருக்கும் .4321 என்று ஒரு விளம்பரம் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தது .அது ஏன்னவென்று இப்போது சொல்லி விட் டார்கள்

4321 இது தான் 

4 -OPTIONS

3 -LIFELINE

2  -நபர்கள்

1 -கோடி

  • வேற ஒன்றும் இல்லை நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி  -2 க்கான விளம்பரம் தான் இது 
  • சூர்யாவை தூக்கி விட்டு பிரகாஷ்ராஜ் போட்டு ஆரம்பித்து உள்ளனர் 
  • சூர்யா அளவுக்கு பிரகாஷ்ராஜ் எடுபடுவாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும் 

Saturday, February 9, 2013

ஸ்ருதி ஹாசன் CCL-நட்சத்திர கிரிக்கெட் இல் ,...


CELEBRITY  CRICKET  LEAGUE -3 எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி உள்ளது .முந்தைய சீசனில் கோப்பை வென்ற தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் சென்னை ரைநோஸ் இந்த முறையும் கோப்பை வெல்லுமா எனபது  ரசிகர்களின் ஆர்வம் .



CCL  அணிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இந்த பதிவில் ...


  • மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த சென்னை ரைநோசும் கலந்து கொள்கிறது .
  • சென்னை அணிக்கு CAPTAIN  ஆக விஷால்யும்  துணை கேப்டன் ஆக விக்ராந்தும் உள்ளனர் மேலும் அணியில் உள்ளவர்கள் விவரம் கீழே 


  • BRAND  AMBASSIDOR  ஆக சுருதி ஹாசன் நியமிக்க பட்டு இருக்கிறார் '
  • ராஜா பத்மநாபன் பயிற்சியாளராக நியமிக்க பட்டு இருக்கிறார்
  • சென்னை அணியின் ஓனர் கங்க பிரசாத் 
  • டீம் மேனேஜர் ரமேஷ் ஸ்ரீநிவாசன் 




  • திரை உலகம் என்பதற்கு  ஏற்றால் போல் CCL -3 காலேண்டேர்களையும் வெளியிட்டு உள்ளது .சார்மி,ஸ்ரேயா ப்ரியாமணி மற்றும் பலர் பிகினி உடைகளில் காலேண்டரை அலங்கரித்து உள்ளனர் 
  • இன்றைய போட்டியில் சென்னை அணியை போஜ்புரி அணி வென்றது .முதலில் ஆடிய சென்னை 187-3 ரன்கள் எடுத்தது ,விஷ்ணு 96 ரன்களையும் ,விக்ராந்த் 40 ரன்களும் .எடுத்தனர் இருப்பினும் பின்னர் ஆடிய போஜ்புரி 190-5 எடுத்து வெற்றி பெற்றது 


Thursday, January 31, 2013

TWITTER இல் விஸ்வரூபம் படும் பாடு ..


மத சார்பற்ற மாநிலம் தேடி போவேன் தமிழகம் இல்லை என்றால் என்ற கமலின் பேட்டி கண்ட போது  அவரது ரசிகர்கள் இல்லாதவர்களும் வருத்தபடுவார்கள் என நினைக்கிறேன் .

இந்த விஷயம் பற்றி இணையத்தில் தேடிய போது  TWITEER  இல் இந்த பக்கத்தில்  ஒரு கூட்டமே கும்மி அடித்து கொண்டு இருப்பதை கண்டேன் .


பல ரசிக்க தக்க  கமலுக்கு ஆதரவு அளிக்கும் TWEET  கள்  நிரம்பி வழிகிறது .அதில் எனக்கு பிடித்தவை இங்கு 


sateesh botta ‏@bkrsatish
With #viswaroopam its proved that censor has nothing to do except certifying as U or A. They are bunch of jokers as per Tamilnadu Govt



  1. 10h
    penathal suresh ‏@penathal
    Classic lose-lose Situation: #Viswaroopam Kamal loses money, Muslim outfits lose credibility, JJ loses respect, commonman loses a movie

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் தடை நீங்கியது ..அரசு பிடிவாதம் தொடர்கிறது




செய்தி :
  • விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்கி இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது உயர்நீதிமன்றம்
  • விஸ்வரூபம் திரைபடத்தை நாளை திரையிடலாம் என அறிவிப்பு



அரசு தொடர்ந்து பிடிவாதம் :

  • தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி க்கு வழங்காமல்  விஜய் டிவிக்கு வழங்கியது காரணமா ?
  • நாளை காலை 10.30 மணி வரையாவது நிறுத்தி வைக்கலாமா என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.காலை 5 மணிக்கே படத்தை  திரையிட்டு விடுவார்கள் என்பதால் இந்த கேள்வி
  • 10.30 am வரை தடை பிறப்பித்தால் மேல்முறையீடு செய்து தடையை நீட்டிக்க அரசு எண்ணுகிறது

(எனக்கு தெரிந்து கமல் ஜெ.யை சந்தித்து  காலில் விழுந்தால் போதும்  திரையிடலாம்  என தோன்றுகிறது ?

உங்கள் கருத்து என்ன ?

உங்கள் பார்வைக்கு :














Tuesday, January 22, 2013

GOOGLE+ FOLLOWERS WIDGET யை EDIT செய்ய வேண்டுமா ?

GOOGLE + FOLLOWER WIDGET
இன்று காலை BLOGGER DASHBOARD இல் உலவி கொண்டிருக்கும் போது தற்செயலாக GOOGLE+ FOLLOWER WIDGET யை நமது தளத்திற்கு ஏற்றபடி  EDIT செய்யும் வசதி இருப்பதை அறிந்தேன் .தெரியாத அன்பர்களுக்காக இந்த பதிவு



முதலில் பிளாக்கர் DASHBOARD இல் LAYOUT பகுதிக்கு செல்லுங்கள் அங்கு GOOGLE FOLLOWER WIDGET யை EDIT இல் கிளிக் செய்யுங்கள் .இதுவரை இணைக்காதவர்கள் ADD GADGET சென்று இணைத்து கொள்ளுங்கள்

GOOGLE + FOLLOWER WIDGET

  • அங்கு DEFAULT ஆக SIZE என்பதில் AUTOMATIC என்று இருக்கும் .அதை MANUALLY SPECIFY என்று மாற்றி உங்கள் தளத்தின் SIDEBAR அளவுக்கு ஏற்ற மாதிரி  HEIGHT மற்றும் WIDTH உள்ளிடுங்கள்
  • பின்புலம் DEFAULT ஆக DARK TEXT ON LIGHT BACKGROUND ஆக இருக்கும் .பின்புலம் கருப்பாக வேண்டும் எனில் கீழே படத்தில் குறிப்பிட்டபடி  செய்யுங்கள் SAVE செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் .இனி உங்கள் தளத்துக்கு ஏற்றபடி GOOGLE+ FOLLOWER WIDGET இருக்கும் 



GOOGLE + FOLLOWER WIDGET

உங்கள் பார்வைக்கு :



Monday, January 21, 2013

அனுஷ்காவும் அலெக்ஸ் பாண்டியனும் ...



ரஜினி நடித்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரில் ஓர் படம்   நல்லா தான்  இருக்கும் என்று படம் பார்க்க போனால் வருவியா வருவியா என குத்து குத்தி வெளியே அனுப்புகிறார்கள் .சிவகாசி ,வேட்டைக்காரன் ரக விஜய்க்கு போட்டியாக உருவெடுத்து வருகிறார் கார்த்தி

கதை 
மாற்றான் படத்தில் தடை செய்யப்பட்ட மருந்து போல இங்கேயும் ..அந்த மருந்தை அனுமதிக்க முதல்வரின் கையெழுத்துக்காக அவளது மகளை கடத்த கடத்தல் காரன் கார்த்தியிடம் ஒப்படைக்கிறார்கள் .

அவரும் சில இரவுகள் அனுஷ்காவை பத்திரமாக வைக்கிறார் காட்டில் ஓர் வீட்டில் .திரும்ப ஒப்படைக்க போகும் போது அனுஷ்கா அந்த மருந்தை பற்றி சொல்ல நல்லவனாகி  முதல்வரிடம் அனுஷ்காவை எப்படி ஒப்படைக்கிறார் என்பது தான் கதை 

அனுஷ்கா :

  • அனுஷ்கா ரசிகர்களுக்கு கண்கொள்ள காட்சியாக கார்த்தி அனுஷ்காவை கடத்தும் காட்சி இருந்திருக்கும் .
  • அனுஷ்கா கார்த்தியின் சட்டையை போட்டு இருக்கும் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்து.
  • ஏகபட்ட உயரத்தில் இருந்து விழும் கார்த்திக்கு ஒன்றும் ஆகவில்லை .அனுஷ்கா மட்டும் மூலிகை சிகிச்சை எடுக்கிறார் 
  • அனுஷ்கா- கார்த்தி காதல் காட்சிகள் அவ்வளவாக இல்லை 
ALEX PANDIYAN-KARTHI

அலப்பரைகள் :

  • தூரத்து சொந்தம் என்று கார்த்தியை சந்தானத்தின் அம்மா அறிமுகபடுத்தியும் அவரது தங்கைகளை வைத்து காமெடி என்ற பெயரில் செய்யும் கூத்து ரொம்ப அதிகம் 
  • கார்த்தி யார் என்பதை  தெரிந்த சந்தானத்தின் அம்மாவே மகள்களை கார்த்திக்கு எண்ணை தேய்த்து விட வைக்கும் இடம் எல்லாம் ஐயோ ரகம் 
  • எண்ணை தேய்த்து விடுவதும் காம விளையாட்டுகள் விளையாடுவதுமாக போகிறது காமெடி காம நெடி

மொத்தத்தில் நேரம் போக வில்லை எனில் அனுஷ்கா ரசிகர்  எனில் இப்படத்தை பார்க்க முற்படலாம் 

உங்கள் பார்வைக்கு :




Saturday, January 19, 2013

பவர் ஸ்டாரின் பவர் -லட்டு தின்ன ஆசை



பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் அச்சு அசல் ரீமேக்  .ஹிந்தி ஆசிரியர்க்கு பதில் பாட்டு வைத்தியர் .கராத்தே மாஸ்டருக்கு பதில் டான்ஸ் மாஸ்டர் ,நாயகின் அம்மாவுக்கு வீட்டு வேலை செய்யும் கதாபாத்திரம் அப்படியே சேது வாக பாக்கியராஜ் வேடத்தில் ..


மூன்று வாலிபர்கள் ஒரு பொண்ணை காதலிக்கும்  அதே கதை சற்று மாறுபட்ட  கதாபாத்திரங்களில்  ..

  • என்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என  பவர் அடிக்கும் லூட்டி கலக்கல்
  • பவர் காட்டும் ஒவ்வொரு முகபாவனைக்கும் நமக்கு சிரிப்பு வருகிறது.
  • சந்தானம் பவாரை கலாய்த்து அடிக்கும் வசனங்களுக்கு பவரை பார்க்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது (சந்தானத்தையும் தான் )
  • நாயகி விசாகா தமிழ் சினிமா கதாநாயகிகள் பண்ணுவதை விட அதிகமாகவே பண்ணி இருக்கிறார் அழகாவும் இருக்கிறார்

  • இந்த படத்தின் உண்மையான நாயகன் பவர்ஸ்டார் என்று தான் நினைக்கிறேன் .
  • பவரை கலாய்த்து ஒரு பாட்டு சந்தானத்துக்கே பாதகமாய் அமைந்து விட்டது என நினைக்கிறேன் 
  • சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார் 
  • சந்தானத்துக்கு மட்டும் தனி பாட்டு காதலை சொல்வதற்கு !.
சந்தானம் அவர் மனதில் உள்ளதை எல்லாம் வசனங்களாக அள்ளி தெளித்துள்ளார்

உதாரணத்துக்கு பவர் ஸ்டாரை பார்த்து சந்தானம் பேசும் சில வசனங்கள் 
  • நான்லாம் காமெடியன்னு தெரிஞ்சு இருக்கேன் நீ காமெடியன்னு  தெரியாமா காமெடி பன்ற 
  • நானும் எத்தன நாலா தான் அடுத்தவன் காதல ஊட்டி  வளக்குறது நானும் டூயட் பாடனும் 

மொத்தத்தில் இன்று போய் நாளை வா படம் பார்க்கதாவர்களுக்கு இந்த படம் கலக்கலோ கலக்கல் .பார்த்தவர்களுக்கோ கலக்கல் .சிரித்து சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம்





Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் DTH இல் முதலில் ஒளிபரப்பானால் பதிவுலகத்தின் நிலை ?



விஸ்வரூபம்  திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே DTH  இல் ஒளிபரப்பானால் பதிவுலகில் என்ன நடக்கும் என்பது பற்றிய எனது கற்பனை இந்த பதிவு


இவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே .நடக்க வாய்ப்பு உண்டு !

  • DTH இல் திரைப்படம் வெளியான  அன்றே  இரவு 12 மணிவாக்கில் விஸ்வரூபம் வீழ்ந்ததா ?,விஸ்வரூபம் -எழுச்சி  என்று பல திரை விமர்சனங்கள் போட்டி போட்டி கொண்டு பதிவுலகில் வெளியிடப்படலாம் 
  • அடுத்தநாள்  திரையரங்கில் பார்த்து அரக்க பறக்க விமர்சனம் போடுவோர்கள் இனி டிவியில் பார்த்து எழுத உந்த படலாம் .ஏன்என்றால் அதற்க்கு முன்பே  விமர்சனங்கள் வந்து தமிழ் மணம் திரட்டியில் திரைமணத்தில் சூடான இடுகைகளில் வந்து விடும் 
  • பிரபல பதிவர்களும் என்ன செய்ய DTH இல் பார்த்து விமர்சனத்தை முதலில் போடுவோம் என நினைக்க வாய்ப்பு உண்டு .
  • விமர்சனம் எழுதும் பல பதிவர்களின் தூக்கம் கெட வாய்ப்பு உண்டு .படம் முடிந்து விமர்சனத்தை டைப் செய்து பதிவாக போட வேண்டுமே 
  • விமர்சனம் படிக்க காத்து கிடக்கும் பதிவர்கள் காலையிலே இணையத்தை நோண்டினால் ஏகபட்ட விமர்சனங்கள் திரைமணம் திரட்டியை  ஆக்கிரமித்து கொள்ள வாய்ப்பு உண்டு:
 UPDATE:விஸ்வரூபம் வெளியீடு 25 தேதிக்கு  தள்ளி போகிறது .திரையரங்கில் தான் முதலில் வெளியிடப்படும் .DTH இல் மறுநாள் வெளியிடபடும்

உங்கள் பார்வைக்கு :