Sunday, November 18, 2012

WINDOWS 8 வாங்கிய பின் செய்ய வேண்டியது என்ன ?

இந்த பதிவை படிக்கும் முன் WINDOWS 8 வாங்குவது பற்றிய எனது முந்தைய பதிவை WINDOWS 8- வாங்கும் முன் செய்ய வேண்டியது என்ன ?ஓர் அலசல்  படித்து விட்டு வாருங்கள் இப்பதிவு WINDOWS 8 வாங்கிய பின் செய்ய வேண்டியவைகளை குறிப்பிடுகிறது



WINDOWS 8 வாங்கி இன்ஸ்டால் செய்த பிறகு நீங்கள் உங்கள் கணினிக்கு அமைத்த PASSWORD ஐ கொண்டு உள்நுழையுங்கள் .

PICTURE PASSWORD
WINDOWS 8 இல்  உள்ள புதிய அம்சம் இது இதன் மூலம் நீங்கள் ஒரு படத்தை தேர்ந்து எடுங்கள் அதில் வட்டம் நேர்கோடு வரையுங்கள் எந்த இடத்தில்  வரைகிறோம்  என்பதை அதன் அளவை நினைவில் கொள்ளுங்கள் .


கணினியில் வலது மூலையில் கர்சரை கொண்டு சென்றால் கீழ்க்கண்டதை   போன்று வரும் .அதில் தேவையானதை தேர்வு செய்யலாம்


.
இடது மூலையில் கர்சரை கொண்டு சென்றால் இயக்கத்தில் உள்ள APPLICATION களை காட்டும் அதில் RIGHT CLICK செய்து CLOSE செய்யலாம்


MICROSOFT MAIL இல் உறுப்பினராவது பல வசதிகளை தரும் .உறுப்பினர் ஆகி கொண்டு வலது மூலையில் கர்சரை கொண்டு கீழே SETTINGS செல்லுங்கள் அங்கு  CHANGE PC SETTINGS செல்லுங்கள்



அங்கு SWITCH TO MICROSOFT ACCOUNT என்பதை தேர்வு செய்யுங்கள் .உங்கள் MICROSOFT MAIL PASSWORD கொண்டு உள்நுழையுங்கள்  அவ்வளவு தான் இனி உங்கள் கணினி க்கு மைக்ரோசாப்ட் MAIL PASSWORD  கொண்டு நுழையலாம் .இதன் மூலம் பல GAMES ,APPLICATION பதிவிறக்க முடியும்
\

மொழி பிரச்சனை 

கணினியை அதன்  பிறகு மீண்டும் துவங்குகையில் இணைய இணைப்பு MBLAZE,AIRCEL TONGLE போன்றவை மூலம் பெற்று இருந்தால் YOUR PC IS OFFLINE PLEASE ENTER OLD PASWORD என்று காட்டும் அப்போது மொழியை ENGLISH(UK) இல் இருந்து ENGLISH(US) க்கு மாற்றுங்கள் இப்போது எந்த பிரச்சனையும் இருக்காது .

APPLICATION  TILE 

WINDOWS 8 SCREEN இல் APPLICATION கள் TILES போன்று பதியபட்டிருக்கும் அதில் RIGHT CLICK செய்து சிறிதாக்கி அல்லது பெரிதாக்கி கொள்ளலாம் .APPLICATION களை DRAG செய்து நமக்கு விருப்பபடி வைத்து கொள்ளலாம்


WINDOWS 8 இல் LOCKCREEN ,START SCREEN  என்ற இரண்டு உள்ளது அதில் நமது விருப்பட்ட படங்களை வைத்து கொள்ளலாம்

இதற்கு முந்தைய பகுதி :






விரைவில் 

  • WINDOWS 8 வசதிகள் ஒரு விரிவான அலசல் 

Sunday, November 11, 2012

WINDOWS 8- வாங்கும் முன் செய்ய வேண்டியது என்ன ?ஓர் அலசல்

WINDOWS 8 பற்றி இணையத்தில் படித்ததில் இருந்து அதை பயன்படுத்த ஆசை உண்டானது .WINDOWS  8 பற்றியும் அதன் வசதிகள் பற்றியும் மேலும் எனது  சுக துக்க அனுபவங்கள் பற்றியும் எழுதலாம் என நினைக்கிறேன்  .

இப்பதிவின் நீளம் கருதி தொடராக அடுத்தடுத்து வெளியிட உள்ளேன் உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கபடுகிறது


WINDOWS 8 வாங்கும்முன்..


  • MICROSOFT  இன் மெயிலில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள்.இது பல APPLICATION,GAMES யை தரவிறக்க உதவும் 
  • விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் எதுவும் அழியாது. 
  •  மற்ற விண்டோஸ் வெர்சன்களில் இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும்.
  • WINDOWS 8 வாங்கும் முன் உங்கள் கணினி அதற்க்கு ஏற்றதா என கண்டறிய இந்த WINDOWS 8 UPGRADE ASSISTANT தரவிறக்கி கொள்ளுங்கள் .இது உங்கள் கணினி ஏற்றதா எவை விண்டோஸ் 8ஏற்று  கொள்ளாது  என காட்டும் .
  • பின்னர் WINDOWS 8 வாங்க CREDIT CARD ,PAYPAL  மூலம் இணையத்தில் பெறலாம் 
  • விண்டோஸ் 7 PC யை ஜூன் 2 ,2012 க்கு பிறகு வாங்கி இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் WINDOWS 8க்கு மாற   699 ரூபாய் செலுத்தினால் போதும்    (You must purchase a qualifying Windows 7 PC between 2 June 2012 and 31 January 2013 to be eligible for this offer. The last day to register and order your Windows 8 upgrade is 28 February 2013.)
  • மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்
  • இந்த நாட்களில் கணினி வாங்காதவர்கள் ரூபாய் 1990 செலுத்தி வாங்கலாம் 

சுக துக்க அனுபவங்கள் 
  • WINDOWS 8 UPDATE செய்ய முடிவு செய்திருந்தால் அதை டவுன்லோட் செய்ய உங்கள் இணைய இணைப்பு சிறப்பாக இருந்தால் நல்லது .இல்லையேல் 2 நாட்களுக்கு மேல் கூட ஆகலாம் .மின் இணைப்பும் அவசியம் (எனக்கு அப்படி தான் ஆனது )
  • இல்லையேல் 2GB FREE DOWNLOAD க்கு RECHARGE செய்யவும் .குறைந்தது 6 மணி நேரத்தில் DOWNLOAD ஆகும் 
  • மிக மெதுவான இணைய இணைப்பால் எனக்கு 2 நாட்கள் பிடித்தது தரவிறக்க  !
மேலும் சுக துக்க அனுபவங்கள்  அடுத்தடுத்த பகுதிகளின் இறுதியில் ..


  • பகுதி -2 :

WINDOWS 8 வாங்கிய  பிறகு செய்ய வேண்டியது என்ன ?-மற்றும் அனுபவங்கள் 


  • பகுதி -3

WINDOWS 8 இன் சிறப்பம்சங்கள்  ஓர் பார்வை 


  • பகுதி -4





  • பகுதி -5






Tuesday, October 30, 2012

100 முதல் 500 ரூபாய் வரை தினமும் இணையம் மூலம் சம்பாதிக்க...

இணையம் மூலம் தினமும் 5$ பணம் சம்பாதிக்க எளிதான வழி... என்ற எனது முந்திய பதிவில் இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என எழுதி இருந்தேன் ,அந்த பதிவில் அன்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கருத்துரையில் ஒரு சிறந்த தளத்தை தெரிவித்திருந்தார்.அவருக்கு எனது நன்றிகள் .



இத்தளம் மூலம் பணம் கிடைப்பது மட்டும் அன்றி நமது ஆங்கில அறிவு பொது அறிவையும் பெருக்கி கொள்ளலாம்

தளத்தின் சிறப்பம்சங்கள் :

  • இத்தளத்தில் நீங்கள் அரைமணி நேரம் செலவிட்டாலே குறைந்தது 50 ரூபாய் முதல் 500 வரை சம்பாதிக்க முடியும் 
  • தளத்தில் சேர்ந்த உடன்  200 ரூபாய் போனஸ் ஆக உங்கள் கணக்கில் ஏற்றப்படும் 
  • 1200 ரூபாய் சேர்ந்ததும்  CHEQUE மூலம் பணம் பெற்று கொள்ளலாம் 
  • தினமும் உங்கள் INBOX,VIEW ADS,PLAY QUIZ,READ NEWS ஆகிய பகுதிகளை பார்வையிடுவதன் மூலம்  5 ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும் .இது ACTIVE DAY எனப்படும்

பொது அறிவை பெருக்க :

  • PLAY QUIZ  எனப்படும் பகுதி பொது அறிவு கேள்விகளுக்கானது .இதில் மொத்தம் 25 கேள்விகள் இருக்கும்
  •  60% கேள்விகளுக்கு மேல் நீங்கள் சரியான விடை அளித்து இருந்தால்  போனஸ் புள்ளிகள் கிடைக்கும்.இதன் மூலமும் கணிசமான தொகையை பெறலாம்.குறைந்தது 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பெற முடியும் 
ஆங்கில அறிவை பெருக்க 

  • MEMORY BOOSTER  எனப்படும் பகுதியில் நீங்கள் ஆங்கில அறிவு பெருக்கலாம்.
  • மொத்தம் 20 விடுபட்ட இடங்களில் உள்ள எழுத்தை கண்டுபிடித்து வார்த்தையை பூர்த்தி செய்ய வேண்டும் .60% வார்த்தை கண்டுபிடித்தால் போனஸ் புள்ளிகளுடன் கணிசமான தொகையை பெறலாம் குறைந்தது 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பெற முடியும் 
மணிக்கொரு விளையாட்டு :

இதில் மூன்று விளையாட்டுகள் உள்ளன.இவை அனைத்தும் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் விளையாடலாம் 

1.PREDICT NUMBER GAME-
ஓன்று முதல் நூறு வரை  உள்ள எண்ணை கணினி அமைத்து கொள்ளும்.அதை 6 தடவைகளுக்குள் சரியான எண்ணை கண்டுபிடித்தால் கணிசமான தொகையை பெறலாம் 

2.HOURLY BREAKING NEWS CONTEST-
சமீபத்தில் நடந்த CURRENT AFFAIRS களை வைத்து ஒரு கேள்வி இருக்கும் .இதை GOOGLE இல் தேடினால் எளிதில் கிடைக்கும் .இதன் மூலமும் கணிசமான தொகையை ஒவ்வொரு மணிக்கும் பெறலாம் 


3.HOURLY QUIZ CONTEST-

இது பொது அறிவு சம்பந்தபட்டது இதையும் GOOGLE இல் தேடினால் எளிதில் கிடைக்கும் .இதன் மூலமும் கணிசமான தொகையை ஒவ்வொரு மணிக்கும் பெறலாம் 

இன்னும் பல பகுதிகள் உள்ளன .அதை ஒவ்வொன்றும் இத்தளத்தில் இணைந்து பெறுங்கள் .தளத்தில் இணைய இங்கு  கிளிக்குங்கள்



Saturday, October 27, 2012

துப்பாக்கி டீசர் -விஜய் SUPERSINGER இறுதிபோட்டி ஓர் பார்வை

  • பல மாதங்களாக நடந்து வந்த விஜய் டிவியின் SUPERSINGER -JUNIOR இறுதி போட்டி இன்று முடிவுகள் பெரிய விழாவாக நடத்தப்பட்டது .ஆட்டம் பாட்டம் கொண்டாத்துடன் நடந்த  இந்நிகழ்ச்சியில் A.R.RAHMAN  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.துப்பாக்கி பட டீசர் வெளியிடப்பட்டது 

இறுதிபோட்டியாளர்கள் 

  • பிரகதி-அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் .இறுதிபோட்டிக்கு இரண்டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 
  • ஆஜித்- திருச்சியை சேர்ந்தவர் WILDCARD ROUND மூலம் இறுதிபோட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போட்டியாளர் 
  • கெளதம் -தூத்துக்குடி யில் இருந்து வந்தவர் .மூன்றாவதாக இறுதிபோட்டிக்குள் நுழைந்தவர் 
  • சுகன்யா -பாலக்காட்டை பூர்விகமாக கொண்டவர்.இறுதி போட்டிக்கு முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் 
  • யாழினி-WILDCARD ROUND மூலம் இறுதிபோட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது  போட்டியாளர் 

                                                         வெற்றியாளர்கள் 


விஜய் டிவியின் SUPERSINGER -JUNIOR-3 யில் வென்று  60 லட்சம் மதிப்பிலான வீட்டை பரிசாக பெற்றார் ஆஜித்

முதல்இடம்- பரிசு------    ஆஜித்  ARUN EXCELLO  HOME -60LAKS

இரண்டாம்இடம்- பரிசு:பிரகதி-5 LAKS GIFT VOUCHER

மூன்றாம்இடம்- பரிசு-    யாழினி3LAKS GIFT VOUCHER

நான்காவது இடம் SUKANYA 2 LAKS

ஐந்தாவது இடம்--GOWTHAM-2LAKS 


 விழாவின்சிறப்பம்சங்கள் 

  • துப்பாக்கி பட டீசர் வெளியிடப்பட்டது .பார்க்க கீழே 

  •  A.R.RAHMAN  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
  • "ஆண்ட்ரியா "புகழ் அனிருத்  3 பட பாடலுக்கு இசையமைத்தார் 
  • இணையத்தில்நிகழ்ச்சியை  பார்த்தவர்கள் சலிப்படைந்திருக்க கூடும்  12மணிக்கு மேல் நேரடி ஒளிபரப்பு தொடர்ந்து தடைபட்டது 
  • இணையத்தில் விளம்பர இடைவேளையில் போது முந்திய போட்டியாளர்களின் பேட்டி ஒளிபரப்பபட்டது 

உங்கள்பார்வைக்கு 




Thursday, October 18, 2012

இணையம் மூலம் தினமும் 5$ பணம் சம்பாதிக்க எளிதான வழி ..

ப்ளாக் வைத்திருக்கும் பலரும் விரும்பும்  வருவாய் தரும்   GOOGLE ADSENSE தமிழ் மொழியில் உள்ள தளங்களை ஏற்று கொள்வதில்லை.ADSENSE APPROVAL உள்ள மொழிகளில் தளம் ஆரம்பித்து APPROVAL கிடைத்த உடன் தமிழ் மொழியில் உள்ள தளங்களில் பயன்படுத்தலாம்.அதற்கு பிற மொழி தெரியணுமே !

 இணையத்தில் உலவி கொண்டிருக்கையில் ADSENSE க்கு  மாற்றாக தற்போது   PTC (PAID TO CLICK) முறையில் வருவாய் தரும் சில தளங்களை கண்டேன் அதில் சிறப்பானது CLIX SENSE எனப்படும் தளம்

சிறப்பம்சங்கள் 


  • இத்தளம் அங்குள்ள விளம்பரங்களை கிளிக் செய்யும் போது ஒரு கிளிக்கிற்கு ௦.01$ தருகிறது 
  • CLIXGRID என்ற ஒரு விளையாட்டை விளையாடுவதன் மூலம் 5$ வரை பெற முடியும் .இதில் மொத்தம் 25 CLICK ஒரு நாளைக்கு விளையாடலாம் .இது LOTTERY போன்று ௦.01$ முதல் 5$ வரை சம்பாதிக்கலாம் 

  • மேலும் நீங்கள் ஆங்கிலத்தில் வல்லவர் எனில் அவர்கள் கொடுக்கும் TASK களை பூர்த்தி செய்தால் 1$ வரை சம்பாதிக்கலாம் 
  • குறைந்த பட்ச தொகை 8$.உங்கள் கணக்கில் 8$ பெற்றவுடன் PAYPAL,CHEQUE ,MONEY TRANSFER மூலமாக உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கில் மாற்றி கொள்ளலாம் 
  • இதற்கு இந்த தளத்தில் உறுப்பினர் ஆகுங்கள் .பின்பு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் இந்த தளத்தில் செலவிடுவதன் மூலம் கணிசமான தொகையை நாமும் சம்பாதிக்கலாம்
  • இத்தளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்க உறுப்பினர் ஆக இங்கு கிளிக்குங்கள்  

உங்கள் பார்வைக்கு :

Sunday, October 14, 2012

துப்பாக்கியும் -6 வித்தியாசமும் ....

விஜயின்  துப்பாக்கி திரைப்பட புகைப்படம் 1982 இல் வெளிவந்த ஆங்கில திரைப்படத்தை ஒத்து உள்ளது .புகைப்படம் மட்டுமா இல்லை முழு படமுமா என்பதை படம் வந்தால் தான் தெரியும் 

விஜயின்  துப்பாக்கி ஸ்டில் 





கீழே காணும் புகைப்படம் 1982 இல் வெளிவந்த ஆங்கிலத்திரைப்படம் An Officer and a Gentleman


மேற்கண்ட  இரு புகைப்படங்களுக்கு இடையே ஆறு வித்தியாசங்கள் உள்ளன .(எனக்கு தெரிஞ்சு).
  1. .விஜய் டிரஸ் நிறம் பச்சை -அங்கு வெள்ளை 
  2.  விஜய் மற்றும் காஜல் புன்னகை -அங்கு இல்லை 
  3. பின்புறத்தில் மேகங்கள் -அங்கு வேறு 
  4. காஜல் கையில் வளையல் -அங்கு அது இல்லை 
  5. காஜல் பெல்ட் அணியவில்லை -அங்கு அணிந்துள்ளார் 
  6.  விஜயின் உடையில் 3 ஸ்டார் -அங்கு இரண்டு 
இதை தவிர உங்களுக்கு வேறு வித்தியாசங்கள் தெரிந்தால்  கருத்துரையில் தெரிவிக்கலாம் .
வித்தியாசங்களை  கண்டுபிடிக்க வசதியாக ஒருசேர புகைப்படம் கீழே



உங்கள்  பார்வைக்கு :

 

Friday, October 12, 2012

துப்பாக்கி பாடல்கள் -துளைத்ததா நெஞ்சை ?

 விஜய் யின் துப்பாக்கி பாடல்கள் சமீபத்தில் வெளியிடபட்டது .மொத்தம் ஆறு பாடல்கள் மற்றும் ஒரு தீம் சாங். நடிகர் விஜய் ஒரு பாடலை பாடி உள்ளார் .பாடல்கள்  பற்றியும் பாடலில் நான் ரசித்த வரிகள் மற்றும் பாடல் கேக்க இணைப்பும் கீழே


கூகிள் கூகிள் 

ஜாலியான பாடல் .விஜய்  ,ஆண்ட்ரியா பாடியுள்ளனர் .மதன் கார்க்கி இணையத்தை முழுவதும் கலக்கி எடுத்துள்ளார்  .ஆங்கில கலப்பு அதிகம் உள்ள பாடல் .facebook,twitter என புகுந்து விளையாடி உள்ளார்

ரசித்த  வரிகள்

 பொண்ணுங்க நம்பர் என் phoneல பாத்தா
சத்தமில்லாம தூக்கிடுவா -
ஓரக் கண்ணால sight அடிச்சாலும்
நோக்குவர்மத்தில் தாக்கிடுவா


நான் dating கேட்டா 
watch பாத்து ok சொன்னானே!

shopping கேட்டா 
ebay.com கூட்டிப் போனானே!

movie கேட்டேன் 
 Youtube போட்டுப் popcorn தந்தானே!--
(அவ்வளவு நேரம் இல்லாமையா இருக்காரு பாஸ் வெளிய கூட்டு போகாம ..)



போய் வரவா :
மெலடி பாடல் கார்த்திக் ,சின்மயி குரலில் லயிக்கிறது .ரொம்ப மெலிதாக போகும் பாடல் .பா .விஜய் எழுதி உள்ளார்

ரசித்த வரிகள் 
எங்கே  மகன் என்று எவரும் கேக்க
ராணுவத்தில் என தாயும்  சொல்ல 
அத்தருணம் போல 
பொற்பதக்கங்கள் கை கிடைக்குமா 

நாட்டுக்கென்றே 
தன்னை கொடுத்த வீரம் 
ஆடை மட்டும் வந்து வீடு சேரும் 
அப்பெருமை போல 
இவ்வுலகில் வேறு கிடைக்குமா 

இந்த வரிகளை படிக்கையில் விஜய் ராணுவ வீரரோ இப்படத்தில் என  தோன்றுகிறது


அன்டார்டிகா 
விஜய் பிரகாஷ், க்ரிஷ்.பாடி  உள்ளனர். மதன் கார்க்கி எழுதியுள்ளார்.ஒவ்வொரு வரியிலும் கவிதை தெறிக்கிறது

ரசித்த  வரிகள் 


அவள் புருவத்துக் குவியலில்

மலைச் சரிவுகள் தோற்பதால்

விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன்!
அழகளந்திடும் கருவிகள்

செயலிழந்திடும் அவளிடம்

அணியிலக்கணம்
 அசைவதை பார்த்தேன்!

அவள் மேலே வெயில் வீழ்ந்தால்

நிலவொளியாய் மாறிப் போகும்

அவள் அசைந்தால்,
அந்த அசைவிலும் இசை பிறக்கும்!


வெண்ணிலவே :

மெலடி  பாடல்.ஹரிஹரன் பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளனர்.முத்துகுமார் எழுதி  உள்ளார்

ரசித்த வரிகள்

அழகே நீயோ பூகம்பம் தானா
அருகே  வந்தால் பூக்கம்பம் தானா

நீ என் கனவில் வரவே 
எழாமல் இருக்கிறேன்


குட்டி  புலி கூட்டம் 
ஹரிகரன்  திப்பு மற்றும் பலர் பாடியுள்ளனர் .விவேகா எழுதியுள்ளார் 
 ரசித்த  வரிகள்

 ஐயோ நெஞ்சம் தான் 
அது பெண்மை தாண்டி என்னும் எண்ணம் கொஞ்சம் தான் 
பெண்ணே இன்பம் தான் 
அது வேண்டாம்  என்று சொல்லும்
ஆண்கள் பஞ்சம் தான் 
துப்பாக்கி
அலைக்கா  லைக்கா

ஜாவேத் அலி ,ஷர்மிளா பாடியுள்ளனர் .பா. விஜய் எழுதி உள்ளார் .டூயட்  பாடல் 


ரசித்த வரிகள்

நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே
மைனஸ் டிகிரி வெப்பம் 
நீ ஆக்சிஜனில் சுவாசித்தாலே 
வாசம் சேர்க்கும் நுட்பம் 




உங்கள் பார்வைக்கு :

Monday, October 8, 2012

அனிச்சம் பூ- அனுஷ்கா ஓர் ஆய்வு

ANUSHKA,ANICHAM
அனிச்சம் பூவழகி என அனுஷ்காவை பார்த்து தாண்டவம் படத்தில் விக்ரம் பாடுவார் .


இந்த பாடலை கேட்டவுடன் அனிச்சம் பூ எப்படி பட்டது என இணையத்தில் தேடிய போது அனிச்சம் பூ மிகவும் மென்மையானது,நறுமண மிக்கது  எனவும் அதை முகர்ந்தாலே வாடி விடும் என்பதையும் அறிந்தேன் .

அனிச்சம் பூ

மேலும் திருக்குறளில் அதை பற்றி பல குறள்கள் உள்ளன .அதில் சில கீழே
90 வது குறள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. 
பொருள்
அனிச்சம் எனப்படும் பூ முகர்ந்தவுடன் வாடி விட கூடியது .அதுபோல சற்று முகம் கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடி விடுவர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1111 வது குறள்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

பொருள் :
அனிச்சம் மலரின் மென்மையை புகழ்ந்து பாராட்டுகிறேன்.ஆனால் அந்த மலரை விட மென்மையானவள் என் காதலி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அனிச்சம் பூ
1115 வது குறள்

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள்  நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை

பொருள் 

அவளுக்காக நல்ல பறை ஒலிக்க வில்லை .ஏனெனில் அவள் இடை  ஒடிந்து வீழ்ந்து விட்டாள் .காரணம் அவள் அனிச்ச மலர்களை காம்பு நீக்காமல் தலையில் வைத்து  கொண்டது தான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1120 வது குறள் 

அனிச்சமும்  அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

பொருள்

அனிச்ச மலராயினும் அன்னப்பறவை இறகாயியினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு என் காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக அனுஷ்கா அனிச்சம் பூவை போல அவ்வளவு மென்மையானவர் என பாடல் ஆசிரியர் கூறுகிறார்

உங்கள்  பார்வைக்கு :
 

Friday, October 5, 2012

தாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...

THANDAVAM STILLS,தாண்டவம் ,விக்ரம் ,அனுஷ்கா

 தாண்டவம் கதை

லண்டன் குண்டுவெடிப்பில் கண் பார்வையை இழந்து உயிர்  தப்பிய விக்ரம் குண்டு வெடிப்பில் இழந்த மனைவியை கொன்றவர்களை பழிவாங்குவது தான் கதை

மூன்று ஹீரோயின்கள்

எமி ஜாக்சன் ,அனுஷ்கா ,லக்ஷ்மிராய் என மூன்று ஹீரோயின்கள் .லக்ஷ்மி ராய் ஒரு சில காட்சிகள் தான் மற்ற இருவருக்கும் சம அளவில் காட்சிகள்

எமி ஜாக்சன்

THANDAVAM STILLS,தாண்டவம் ,எமி ஜாக்சன்
  • மிஸ் லண்டன் ஆக அறிமுக காட்சி மற்றும் இரண்டு பாடல்கள்.மிஸ் யுனிவர்ஸ் ஆக சமூக அக்கறை வேண்டும் என மரம் வளர்த்தல் ,go green  என நடித்து போட்டோ எடுப்பது உண்மை உரைக்கும் காட்சிகள்.
  •  கண்பார்வையற்ற விகரமுடன் நட்பு பாராட்டி இறுதியில் விக்ரமை போலீசில் காட்டி கொடுக்கும்  கேரக்டர் ஆக நடித்திருக்கிறார் 

அனுஷ்கா  

அனுஷ்கா ,தாண்டவம் ,ANUSHKA
  •  விக்ரமின் மனைவியாக பிளாஷ்பேக்கில் வருகிறார்அனுஷ்கா 
  •  விக்ரம் -அனுஷ்கா திருமணம் முடிந்து பின்பு நடக்கும் காட்சிகள் மௌனராகம் படத்தின் மோகன் ரேவதியை நினைவூட்டினாலும் ரசிக்க வைக்கின்றன.
  •  அனுஷ்காவிற்கு பிடித்த விசயங்களை அவர் தங்கை மூலம் கேட்டு கொண்டு அனுஷ்காவிடம் விக்ரம் பேசும் காட்சிகள் கலக்கல்.இரண்டு பாடல்கள் இவருக்கும் இருக்கிறது

லக்ஷ்மி ராய்

LAKSHMI RAI,THANDAVAM
  •  விக்ரம் நண்பரின் மனைவியாக வருகிறார் லக்ஸ்மி ராய்
  •  குண்டு வெடிப்பில் இழந்த கணவனை கொன்றவர்களை கொல்வதற்காக விக்ரமுடன் இணைந்து அவர்களை  கொல்வதற்கு உதவி செய்கிறார் .மற்ற படி பெரிதாக காட்சிகள் இல்லை இவருக்கு..

சந்தானம் டாக்ஸி டிரைவர் ஆக கதையுடன் இணைந்தும்,நாசர் விக்ரம் செய்த கொலைகளை கண்டுபிடிக்கும் அதிகாரியாகவும்  வருகிறார்


மொத்தத்தில் கிளாமர் காட்சிகள் இல்லாத குடும்பத்துடன் எந்த நெளிவு சுளிவுக்கும் வழிவகுக்காமல் பார்க்க கூடிய படம் தான் இந்த தாண்டவம் .

Thursday, September 20, 2012

சரவணன் -மீனாட்சி - 18+ ?

MEENATCHI
  • விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி பல யூத்துகளை நாடகம் பார்க்க வைத்தது உண்மை .ஆனால் அது தற்போது குடும்பத்துடன் பார்க்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை 
  •  சரவணன் மீனாட்சிக்கு திருமணம் முடிந்து முதல் இரவு நடக்க தான் இந்த அக்க போர் .
  • முதல்  இரவை வைத்து ஒரு மாதத்திற்கு மேலாக கதையை ஓட்டுகின்றனர் 
நடந்தது  என்ன ?
    • ஆடி  மாதத்தை முன்னிட்டு முதல் இரவு தள்ளி வைக்க படுகிறதாம் அதுக்கு நடந்த அக்க போர்கள் நெளிய வைப்பவை.மாமனாரே மருமகளிடம்  முதல் இரவை பற்றி மறைமுகமகமாக பேசும் கொடுமைகளும் உண்டு ..(நல்ல வேலை அப்பா பேசமா போனாரே )
    • ஒரு  வழியாக ஆடி முடிந்து ஆவணி பிறந்து முதல் இரவை  கொண்டாடலாம் என்றால் மீனாட்சியின் மாமனார்கள் நடு இரவில் முதல் இரவை கலைத்து தங்கள் பண்ணை வீட்டில் தான் நடக்க வேண்டும் என்கிறார்  
    MEENATCHI
    • பண்ணை  வீட்டில் முதல் இரவு நடக்க விருக்கும் நேரத்தில் மீனாட்சி மாமனார்கள் ரூமுக்கு வெளியே இசை கச்சேரி நடத்தி முதல் இரவு நடக்க விடாமல் பண்ணுகின்றனர் .
    • அதுக்கு சரவணனும் மீனாட்சியும் முதல் இரவு  நடக்கவில்லையே என காட்டும் ரியாக்சன்கள் இருக்கிறதே அப்பப்பா இனி குடும்பத்துடன் இந்த நாடகத்தை பார்ப்பதில்லை என முடிவெடுத்து விட்டேன் (தனியா பாத்துக்குவோம் )
     உங்கள் பார்வைக்கு :