யாரும்
தனக்கு பிடித்து
சொல்வதில்லை பொய்களை ..
நித்தம் சொல்லும் பொய்களில்
எனக்கு பிடித்த பொய்
எதுவென்று தேடி பார்த்தேன் ...
காதல்
கவிகளில் சொல்லும்
பொய்கள் கவிதைக்கானவை
பிடித்தும் பிடிக்காத
பொய்கள் பல உண்டு
அதில்..
எந்த பொய்யும்
எனக்கு பிடிக்க வில்லை
தேடி பார்த்ததில் ஒன்றை தவிர ...
என் உடல் நிலை சரியில்லை
என்றாலும்
என் தாய் என்னிடம்
தொலை பேசியில்
கேட்கின்ற பொழுது
நலமாக இருக்கிறேன் என்று
என் தாய் மனது
மகிழ நான் சொல்லும்
பொய் மட்டுமே !