Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, March 5, 2018

பிடர்கொண்ட சிங்கமே பேசு -வைரமுத்து கவிதை

வைரமுத்து -கலைஞர்
கலைஞரின் ஆஸ்தான கவிஞர் கலைஞர் பேச வேண்டும் என்பதற்காக எழுதிய கவிதை அவர் முன்னாலேயே வைரமுத்துவின் கணீர் குரலில்  படிக்க பட்டு  வீடியோ ஆக்க பட்டு இருக்கிறது .முதுமையின் முன் கலைஞர் இருப்பதை பார்க்க முடியாதோர் வீடியோ தவிருங்கள்


பிடர்கொண்ட சிங்கமே பேசு * இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும் படர்கின்ற பழைமை வாதம் பசையற்றுப் போவதற்கும் சுடர்கொண்ட தமிழைக் கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்கப் பிடர்கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய்திறந்து * யாதொன்றும் கேட்க மாட்டேன் யாழிசை கேட்க மாட்டேன் வேதங்கள் கேட்க மாட்டேன் வேய்ங்குழல் கேட்க மாட்டேன் தீதொன்று தமிழுக் கென்றால் தீக்கனல் போலெழும்பும் கோதற்ற கலைஞரே நின் குரல்மட்டும் கேட்க வேண்டும் * இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும் படர்கின்ற பழைமை வாதம் பசையற்றுப் போவதற்கும் சுடர்கொண்ட தமிழைக் கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்கப் பிடர்கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய்திறந்து

Saturday, September 2, 2017

மரிக்கவா பிறந்தாய் ?

NEET,SUICIDE,ANITHA,ENTRANCE,அனிதா ,நீட் ,தற்கொலை ,அனிதா தற்கொலை



நீட்டி முழக்கி
ஒரு  வருட அவசர சட்டம்
என தம் வேலையை
திறம்பட செய்த அரசியல் கழிசடைகள்
நீட் உண்டா இல்லையா
என குழம்பிய மாணவர்கள்

Tuesday, December 6, 2016

அம்மா -ஓர் கவிதாஞ்சலி !..




என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

தைரியத்தின் மறுபெயர்
தமிழகத்தின் திருஉயிர்
சமரசம் செய்து கொள்ளா
தலைவி நீ !


அரசியல் வெற்றிடம் இங்கே
அதை நிரப்புவார் எங்கே ?
எதிர்த்தோர் மனதிலும் 
ஓர் இடம் அனைவர் 
நெஞ்சிலும் நீங்கா இடம்!

என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

-முதல்வரின் மறைவிற்கு எனது கவிதாஞ்சலி


Friday, May 17, 2013

"சூது கவ்வியதா" ஸ்ரீசாந்த் ?


இறுதி ஓவர்
என்ன நடக்கும்
தேவை 20 ரன்
இருப்பதோ ஆறு பந்துகள்



கடைசி பந்து வரை
பரபரப்பு

நகம் கடித்து
இருக்கை  நுனியில் வந்து
உற்சாகமாய்
நம் வேலை விட்டு
தொலை காட்சி முன்
அமர்ந்தால்!
தோல்வி அடைந்த   அணி
வீரர்கள் செய்தது
மேட்ச் பிக்சிங்
என்று தெரிய வந்தால்?

 நம்மை
முட்டாள் அல்லவா
ஆக்குகிறார்கள்
இவர்கள் !
பெர்னாட்சா கூற்று
சரி தானோ !


ஹர்பஜனுடன் ஆக்ரோஷம்
களத்தில் ஆக்ரோசம்
எல்லாமே நடிப்பா-இல்லை
அதுவும் சூதா
ஸ்ரீசாந்த்

செய்தி :ஸ்பாட்  பிக்சிங் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீஷாந்த் உட்பட 3 பேர் கைது

Friday, March 29, 2013

புனிதமாக்கும் புனிதரே !



எமக்காய் 
எம் பாவங்களுக்காய் 
உயிர் நீத்தீர் இன்று ..

எமக்காய் 
எவ்வளவோ
செய்தீர் 
செய்கிறிரீர் செய்வீர்
உமக்காய் நான் என்ன
செய்தேன்? ஒன்றுமில்லை

உன் ஆலயம் வர
என்னால் முடியாமல்
போனது ஏன் ?
சோம்பலா? 
நேரம் இல்லாமையா?
அறியாமையா? எக்காரணம்
கொண்டும் என்னை நியாய படுத்த
முடியாது -நீர் என்னை
 தவிர்க்கவா
செய்தீர் நான் உம்மை தரிசிக்க
வராததற்கு..

இனியாவது 
உம்மை பின் தொடர
முயல்கிறேன்
முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் 
நான் உம் பிள்ளை!

புனித வெள்ளியில் 
என்னை 
புனிதமாக்கும் புனிதரே !

Friday, March 8, 2013

"பெண் "எனப்படுவள் யாரெனில் ....



WOMEN'S DAY.மகளிர் தினம்


உலக மகளிர்  அனைவருக்கும் மகளிர் தின  வாழ்த்துக்கள் 

**பெண் ஓர் தென்றல்
அவளை மதிப்பவர்க்கு!
பெண் ஓர் புயல்
அவளை பழிப்பவர்க்கு!



**பெண் ஓர் சூரியன்
பகைவரை சுட்டெரிப்பதில்!
பெண் ஓர் நிலா
கவிஞர்களை
சுண்டி இழுப்பதில்!

**பெண் ஓர் கவிதை
காதலனுக்கு
பெண் ஓர் விதை
குடும்பத்தை விஸ்தரிப்பதில்
பெண் ஓர் மலர்
மென்மையின் உருவாய் இருப்பதால்..

**மொத்தத்தில்
பெண் ஓர் இறை
படைக்கிறாள்
காக்கிறாள் அழிப்பதில்லை...



Friday, March 1, 2013

"தற்கொலை" தீர்வாகுமா ?

suicide
யார் உனக்கு உரிமை
தந்தது தற்கொலை செய்ய?

தன் குருதி சிந்தி
இன்னுயிர் நடுங்கி
உன்னை  பெற்றடுத்த தாய்க்கு
மீண்டும் அவள் உயிர் நடுங்க
உன் உயிர் நீக்கினாயே ஏன் ?



கோழைகள்  தான்
தற்கொலை செய்வர்
நீ வீரன் அல்லவா நினைத்தேன்
நான்

உனக்குள்ள துக்கங்கள்
உன் சாவினாலே போகும்
என நினைத்தாய் நீ !
உன் குடும்பம் படபோகும்
அல்லல் நினைத்து
பார்த்தாயா அந்த முடிவை
எடுக்கும் போது ..

அரசு உத்தியோகதிற்காய்
அல்லும் பகலும்
உழைத்தாய்-வெற்றி கொண்டாய்
இப்போது உன் உழைப்பெல்லாம்
வீண் ஆக்கி விட்டாயே

எனக்கு தற்கொலை
செய்பவர்களை பிடிப்பதில்லை
இப்போது நீயும் ....


-எனது பள்ளி பருவ நண்பன் ஒருவன் இன்று தன் உயிரை தானே போக்கினான்.அவனுக்கு எனது அஞ்சலிகள்.இறந்தவர்களை விமர்சிக்க கூடாது எனினும் என்னால் முடிய வில்லை.


                                                                                -கனத்த இதயத்துடன் -
                                                                                        பிரேம்குமார் .சி 

உங்கள் பார்வைக்கு :


Saturday, December 29, 2012

சதை தின்னும் மிருகமா நீ ?-18+


சதை தின்னும் மிருகமா நீ
பிணம் தின்னும் கழுகா நீ
மனிதன் இல்லையா நீ !
சதைக்கு  அலைவதேன் ?

மரண தண்டனை உனக்கு
தீர்வாகுமா ?-கற்பழிக்க துடிக்கும்
உன் ஆண் உறுப்பை
அறுத்து எரிய வேண்டாமா ?
சதை தின்ன அலையும்
மனிதனல்லவா நீ !

செய்தி :டெல்லியில் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் மரணம்

உங்கள் பார்வைக்கு :


Wednesday, September 5, 2012

கடவுளை பின்னுக்கு தள்ளியவர்கள் ..

TEACHER'S DAY

மாதா பிதா
குரு அதன் பின்னர் தானே
தெய்வம்
அத்தனை மகிமை
அல்லவா உங்களுக்கு ..



கடவுளையே
பின்னுக்கு தள்ளியவர்கள்
அல்லவா நீங்கள் !

எல்லா  தொழிலுக்கும்
அச்சாணி நீங்கள் தானே !
அவர்களை உருவாக்குவது
 நீங்கள் தானே !

உங்களை போற்றுகிறோம்
நினைவு கூறுகிறோம்
இந்நாளில் ..


                               இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Sunday, August 5, 2012

நட்பு ஒன்று போதுமே ....

FREINDSHIP  DAY
காதல்
கைவிடும்போதும்
மன  உளைச்சலில்
காலன் துரத்திடும் போதும்
நட்பு ஓன்று போதுமே
நம் உயிர் காத்திட ..



இயந்திர
இதயங்கள்
இளைப்பாறி
கொள்வது
இனிய நட்பு
கிடைத்தால் தானே !

நட்பு ஒன்று போதுமே!
உறவுகள்
கைவிடும் போது..
துன்பத்தில்
தோள் கொடுப்பதும்
இன்பத்தில்
இணைந்திருப்பதும் தானே
நட்பு ,,


Wednesday, March 21, 2012

ஜெ.. க்கு நன்றிகள் பல ..

ஜெயலலிதா ,JEYALALITHA
நல்லா இருங்க மக்களே !

குறட்டை வீட்டு
காலையில் அதிக நேரம்
தூங்கும் இளசுகளை
அதிகாலையில் மின்தடை
செய்து எழுப்பும் உங்கள்
அக்கறைக்கு நன்றிகள் பல !

தொலைக்காட்சி
நெடுந்தொடரால் சீரழியும்
பெண்களை காப்பாற்ற
பகலில் அதிக நேரம்
மின்தடை செய்யும் உங்களுக்கு
 எங்கள் நன்றிகள் பல !

எங்கள் கிராமத்தில்
குடும்பங்களில் அளவளாவி
பேசி எவ்வளவு நாளாகி விட்டது
தொலைக்காட்சி அரக்கன்
வந்ததில் இருந்து ..
 எளிதில் போக்கினார் ஜெ
 மின்சார தடை இரவிலும்..
ஜெ.. க்கு நன்றிகள் பல ..

நள்ளிரவிலும்
மின்தடை செய்து எங்கள்
தூக்கத்தை கெடுப்பதில்
என்ன நன்மை? தேடி பார்த்தும்
ஒன்றும் அடங்க வில்லை
சொல்வீரா முதல்வரே !

--இது வஞ்ச புகழ்ச்சியா உண்மை புகழ்ச்சியா உங்கள் முடிவே !((இது எங்கள் கிராமத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது .நகரம் அல்ல )

 







உங்கள்  பார்வைக்கு :

    Tuesday, February 21, 2012

    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

    கடவுள் ,வேண்டுதல்

     லட்ச கணக்காணோர் எழுதிய
    வங்கி தேர்வில் என்னை
    தேர்வு செய்ய வேண்டினேன்
    அவ்வாறே செய்தார் கடவுள்
    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான்!



    அலுவலகத்தில்
    எனக்கெதிராய் செயல்படுபவர்களை
    எனக்கு ஆதரவாய்
    செயல்பட வேண்டுகிறேன்
    அவ்வாறே செய்கிறார் கடவுள்
    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !


    அதிகாலையில் எழுந்திரிக்க
    அலாரம் வைப்பதில்லை நான்
    அவரிடம் சொல்கிறேன்
    எழுப்புகிறார் குறிப்பிட்ட நேரம் முன்பே !
    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

    இழுபறியில் இருக்கும் என
    நினைத்த தேர்வு முடிவுகளில்
    என்னை தேர்வு பெற செய்யுங்கள்
    என வேண்டுகிறேன் அதையும்
    செய்கிறார் எனது உழைப்பு கண்டு !
    கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

    இன்னும் எத்தனயோ
    செய்தார் செய்கிறார் செய்வார்
    ஆனால் நான் என்ன செய்தேன்
    அவருக்கு !ஒன்றுமில்லை
    கடவுளுக்கு  வேலை வைக்கிறேன் நான் !


    (இக்கவிதை கர்த்தருக்கு நான் செலுத்தும் சாட்சி கவிதை .எனது வாழ்க்கை சம்பவங்கள்.சிறப்பான கருத்துக்கள் அளிக்க வேண்டுகிறேன் )


    உங்கள் பார்வைக்கு :

    Wednesday, January 18, 2012

    சீறுகின்றாள் செந்தமிழ்த் தாய் !


     தமிழ் பேச
    கூச்சப்படும் தமிழா !
    நான் செந்தமிழ் தாய்
    பேசுகிறேன்

    ஆங்கிலம் இணைப்பு மொழி
    தானே !ஏன் உயிர்ப்பாக
    நினைக்கிறாய் ?


    ஆங்கிலத்தை அரவணை
    தவறில்லை! தமிழை  ஏன்
    துறவறம் கொள்ள செய்கிறாய் ?

    என்னை கொன்று போடும்
    தமிங்கலத்தில் பேசும் நீ
    செந்தமிழ் பேச
    நா தழுதழுப்பது ஏன் ?

    உன் தாயும் நானும்
    ஒன்றல்லவா -உன் தாய் மொழி அல்லவா
    நான் !

    நாளைய உலகில்
    தமிழ் இருக்கட்டும்
    இறக்கச் செய்திடாதே !
    (* ஈகரை வலைத்தளம் சமீபத்தில் நடத்திய கவிதைபோட்டிக்காக நான் எழுதிய கவிதை இது ..)


    உங்கள் பார்வைக்கு :



    Thursday, December 1, 2011

    AIDS DAY

    *HAPPY LOVERS DAY
    HAPPY WOMENS DAY
    என்பது போல்
    HAPPY AIDS DAY என்று
    சொல்ல முடியுமா?
    முடியாதல்லவா!

    *காலனை அறிந்தே
    கட்டி தழுவ
    நினைத்தவர்களின் தினம்
    இது !

    *மாற்றான் தோட்டத்து
    மல்லிகைக்கு
    தான் மணம் உண்டு
    மங்கையர்க்கு அல்ல !

    *மருந்தரியா நோய்க்கு
    பாதுகாப்பில்லா
    உறவு ஏன் ?
    உயிர் குடிக்கும்
    என தெரிந்தும்
    உல்லாசம் ஏன் ?

    *நாகரிகத்தின் வெளிப்பாடு
    நல்லதற்கு தான்
    தீயதர்க்கு அல்ல !
    AIDS இல்லா இந்தியா உருவாக
    மனைவியை மட்டுமே
    மனதில் கொள்வோம்!

    Saturday, November 19, 2011

    ஜெயலலிதாவுக்கு ஓர் கடிதம்

    ஜெ,JEYALALITHA,ஜெயலலிதா
    யார் கேட்டது
    உங்களிடம் இலவசங்கள்
    எங்களை வருத்தி தான்
    இலவசங்கள்   வழங்க
    வேண்டுமா ?அப்படி ஓர் இலவசங்கள்
    தேவை இல்லை எங்களுக்கு ..



    பேருந்து கட்டணம்
    ஏறக்குறைய இரு மடங்கு
    உயர்வு பால் விலை உயர்வு
    மின்கட்டணமும் உயர்வதாய் சொல்லி
    எங்களை நசுக்கி உள்ளீர்கள் ..

    மக்கள் நல பணியாளர்கள்
    வீண் செலவு என கருதி
    வீட்டுக்கு அனுப்பிய 
    நீங்கள் நூலகம் 
    தலைமை செயலகம்
    மருத்துவமனையாக மாற்றம்
    சமச்சீர்கல்வி கல்வி குளறுபடி
    ஆகியவற்றில் செய்தது வீண்செலவு
    இல்லையா ?

    உள்ளாட்சி தேர்தலிலும்
    உங்களுக்கு அமோக ஆதரவு
    அளித்தோமே ! எங்களை
    உங்களுக்கு ஏன் ஓட்டளித்தோம்
    என நினைக்க வைத்து விட்டீர்கள் ...

    எத்தனை போராட்டம்
    நடத்தினாலும் விலை உயர்வை
    மாற்ற போவது  இல்லை நீங்கள்
    மாற போவதும் இல்லை
    ஐந்து ஆண்டுகள்  அனுபவிப்போம்
    உங்களுக்கு வாக்கு அளித்ததற்கு...

    Thursday, November 17, 2011

    Wednesday, October 26, 2011

    தீபாவளி தீபாவலி ஆகாமல் இருக்க..



    சிதறும்
    மத்தாப்பின் கீற்றாய் 
    சிதறட்டும் உங்கள் துன்பங்கள்..
    இந்நாளில் ...


    ஒருவன் 
    அழிந்ததற்க்காய் 
    மகிழ்கிறோம்  விழா எடுக்கிறோம் என்றால் 
    அது தீபாவளி மட்டுமே !


    காசை கரியாக்குவதாய்
    வெடி வாங்குவதை சொல்லும் 
    நபர்கள் அந்த பிள்ளைகள் 
    வெடி வெடிக்கையில் உண்டான 
    முக மலர்ச்சியை கண்டிருக்க 
    மாட்டாரோ !

     தீபாவளி  தீபாவலி
    ஆகாமல் கவனமாக 
    வெடிப்போமே கவலைகள் கலைந்து 
    மகிழ்வோமே இந்நாளில் .. 


    வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள்  வாழ்த்துக்கள் ....






    Friday, October 14, 2011

    விலை மாது


    கசக்கி எறியப்படும்
    மலர்கள் நாங்கள்

    சதைகளை தின்னும்
    விலங்குகள்  போல்
    எங்களையும் தின்பார்கள்
    காம அரக்கர்கள்

    எங்கள் அங்கங்கள்
    அவர்களின் விளையாட்டு
    மைதானங்கள் -விருப்பம்
    போல் விளையாடுவர் நாங்கள்
    விரும்பா விட்டாலும் ...

    எங்களை நேசிப்பார் யாருமில்லை
    பூஜிப்பார் யாருமில்லை
    அவசர தேவைக்கு
    விற்கப்படும் பொருள் நாங்கள் ...

    நாங்களும் மாது தான்
    ஆனால் விலைக்கு ...

    Sunday, September 18, 2011

    உலகச் சாம்பியனா நாம் ?

    டெஸ்ட் தொடரை இழப்பதற்கு முன்பு ஒருமுதல் இடம் இழந்த இந்தியா என்ற  பதிவு போட்டிருந்தேன் .டெஸ்ட் தொடரை 0-4  என்ற   கணக்கில்  இழந்த நாம் இப்போது ஒரு தின தொடரையும்  0-3 என்ற கணக்கில் இழந்திருக்கிறோம் .இது பற்றிய எனது உணர்வு ..



     காயம் அடைந்ததாய் 
    சொல்லிக்கொண்டவர்கள் 
    காயம் அடைந்தவர்கள் 
    எல்லோரும்  பங்கேற்பர்
    வர விருக்கும் 
    CHAMPIONS LEAGUE தொடரில் ..
    என்ன மாயமோ இது ?
    எல்லாம் பணம் தானா ?

     0-4  என்ற  கணக்கில்  
    டெஸ்ட் தொடரை இழந்தோம் 
    ௦-3 என்ற  கணக்கில்
    ஒரு தின தொடரை இழந்திருக்கிறோம்
    இப்போது..
    இனி இழப்பதற்கு  ஏது  ?

    உலக சாம்பியன் என்று 
    மார்தட்டி அதிக நாட்கள் இல்லை ..
    அதற்குள் ஒரு வெற்றி கூட 
    இல்லாமல் தாயகம் 
    திரும்பி இருக்கிறது இந்தியா 

    அதிர்ஷ்டமும் இல்லை நமக்கு 
    வெற்றியும் இல்லை 
    இந்த ஒரு தின தொடரில் ..
    மழை கூட  நமக்கு 
    சாதகமாய் இல்லை.


    டிராவிட்டும் ஒய்வு பெற்று 
    விட்டார் இனி யாரை நம்பி 
    வெளிநாட்டு சுற்று பயணங்கள்?
    மேற்கிந்திய தீவுகள் தொடர் 
    முடிந்தவுடன் நாம் வங்க தேசத்திற்கு 
    சென்றிருக்க வேண்டும் 
    என்று சொன்னாலும் சொல்வார் தோனி ..

     
    டெஸ்ட் தொடரை விட 
    ஒரு தின தொடரில் நமது 
    பேட்டிங் சிறந்து இருப்பது 
    மட்டுமே ஆறுதல் ..

    டெஸ்ட் ,இருபது ஓவர் 
    ஒருதின போட்டி என
    முத்தாய்ப்பு தோல்விகள் 
    உலகச் சாம்பியனுக்கு ...
    நாம் சாம்பியனா என்ன ?..






    Monday, September 5, 2011

    இரு காதலிகளும்... நானும் ...



    அவள் வந்ததில் இருந்து
    என்னை நீ சரியாக
    கவனிப்பதே இல்லை
    புலம்புகிறாள் முதல் காதலி ..





    இணையத்தில் எப்போதும்
    இணைந்திருப்பாய் என்னுடன் ..
    இப்போது அவளுடன்
    இணைந்திருக்கிறாய்..
     மறந்து விட்டாயா என்னை ..

     உன் கைகள் என்னை
     எப்போதும் வருடி கொண்டே
     இருக்கும் முன்பு ..இப்போது
     அப்படி இல்லை ..

    நான் அளவில் சிறியவள்
    என்பதால் வெறுக்கிறாயா
     இல்லை   அவள் மோகம்
    உன்னை ஆட்டுவிக்கிறதா ..

     எப்படி ஆனாலும் உன்
    முதல்   காதலி நான் தான்
     மறந்து  விடாதே !

    அவள் அழகி
    தான் உன்னை   எப்போதும்
    இணையத்தில் இயங்க வைப்பவள் தான்
    அதற்காக என்னை மறந்து
    விடாதே காதலா !
    நான்  உன்னவள்  ...



      கடந்த வாரம் சோனி வயோ லேப்டாப் ஓன்று வாங்கினேன் .அதன் பிறகு செல்போனை அவ்வளவாய் பயன்படுத்துவதில்லை ..இக்கவிதை செல்போன் தன்னை முன்பு போல பயன்படுத்தாதர்க்கு என்னிடம் புலம்புவதாக எனது கற்பனையில் ..