Thursday, September 20, 2012

சரவணன் -மீனாட்சி - 18+ ?

MEENATCHI
  • விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி பல யூத்துகளை நாடகம் பார்க்க வைத்தது உண்மை .ஆனால் அது தற்போது குடும்பத்துடன் பார்க்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை 
  •  சரவணன் மீனாட்சிக்கு திருமணம் முடிந்து முதல் இரவு நடக்க தான் இந்த அக்க போர் .
  • முதல்  இரவை வைத்து ஒரு மாதத்திற்கு மேலாக கதையை ஓட்டுகின்றனர் 
நடந்தது  என்ன ?
    • ஆடி  மாதத்தை முன்னிட்டு முதல் இரவு தள்ளி வைக்க படுகிறதாம் அதுக்கு நடந்த அக்க போர்கள் நெளிய வைப்பவை.மாமனாரே மருமகளிடம்  முதல் இரவை பற்றி மறைமுகமகமாக பேசும் கொடுமைகளும் உண்டு ..(நல்ல வேலை அப்பா பேசமா போனாரே )
    • ஒரு  வழியாக ஆடி முடிந்து ஆவணி பிறந்து முதல் இரவை  கொண்டாடலாம் என்றால் மீனாட்சியின் மாமனார்கள் நடு இரவில் முதல் இரவை கலைத்து தங்கள் பண்ணை வீட்டில் தான் நடக்க வேண்டும் என்கிறார்  
    MEENATCHI
    • பண்ணை  வீட்டில் முதல் இரவு நடக்க விருக்கும் நேரத்தில் மீனாட்சி மாமனார்கள் ரூமுக்கு வெளியே இசை கச்சேரி நடத்தி முதல் இரவு நடக்க விடாமல் பண்ணுகின்றனர் .
    • அதுக்கு சரவணனும் மீனாட்சியும் முதல் இரவு  நடக்கவில்லையே என காட்டும் ரியாக்சன்கள் இருக்கிறதே அப்பப்பா இனி குடும்பத்துடன் இந்த நாடகத்தை பார்ப்பதில்லை என முடிவெடுத்து விட்டேன் (தனியா பாத்துக்குவோம் )
     உங்கள் பார்வைக்கு :



      Saturday, September 15, 2012

      சன் டிவியின் "சூப்பர் குடும்பம்" சூப்பரா ?

      •  விஜய் டிவி தனது தொகுப்பாளர்களை விஜய் குடும்பம் என அழைக்கும்.ஆனால் சன் டிவி  தனது சீரியல் நட்சத்திரங்களை வைத்து சூப்பர் குடும்பம் என்ற நிகழ்ச்சியையே நடத்தி கொண்டு இருக்கிறது 
      • சனிக்கிழமை தோறும்  இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது 
      • மீனா ,சுகன்யா ,கங்கை அமரன் போன்ற பழைய ஆட்களை ஜட்ஜ் ஆக போட்டு கொல்லுகின்றனர்
      • நிகழ்ச்சி  தொகுப்பாளராக மமதி  மற்றும் காயத்ரி ஜெயராம் நடத்துகின்றனர் 

      நிகழ்ச்சி எப்படி ?
      •  சன் டிவியின்  சீரியல்களில் ஒவ்வொறு சீரியல்களிலும் நால்வரை அழைத்து  ஒவ்வொரு  குடும்பம் உருவாக்கி உள்ளனர் 
      • ஆட்டம்  ,பாட்டு ,நடிப்பு என தங்களுக்கு தெரிந்தவற்றை ஒவ்வொருவரும் செய்கின்றனர் 
      • அட்டகாசமான கலைஞர் என்று ஒருவரை  ஒவ்வொரு நிகழ்ச்சியின்  இறுதியில் தேர்ந்தேடுக்கின்றனர்
      மொத்தத்தில் மனம் விட்டு சிரிக்க இந்த நிகழ்ச்சி பார்க்கலாம் (ஒவ்வொருவரும் செய்யும் சாகசங்கள் அப்படி )

      உங்கள்  பார்வைக்கு :

      Friday, September 14, 2012

      HUNT FOR HINT- சில ரகசியங்கள்

      HUNT FOR HINT -இது தற்போது இணையத்தில் பரபரப்பாக  பலரால் விளையாட பட்டு  கொண்டிருக்க கூடிய ஒரு விளையாட்டு.அத்தனை திரில் வேகம் .விளையாட்டை அமைத்தவர்களுக்கு  நன்றிகள்.நான் தற்போது LEVEL 4 இல் இருக்கிறேன் .அதை தாண்ட தெரியாமல் திணறி கொண்டிருக்கிறேன்



      விளையாட்டு எப்படி :
      • கொடுக்கப்பட்ட படங்களை வைத்து மறைந்திருக்கும் CLUE க்களை கொண்டு கேள்வியையும் கண்டுபிடித்து விடையையும் கண்டுபிடித்து அடுத்தடுத்த லெவல்களுக்கு செல்ல வேண்டும்
      • PAGE SOURCE,PAGE TITLE,CHANGE THE URL  போன்ற பல CLUE மூலம் ஒவ்வொரு படியையும் கடக்க வேண்டும் 
      • இந்த 4 வது லெவலுக்கு வருவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே .இது தான் அக்குழுவினரின் வெற்றி என நினைக்கிறேன் 

        TOBLERONE :

      என்ன இது புது பெயர் என நினைக்கிறீர்களா (எங்கயோ  பார்த்த பெயர் ஆக இருக்கிறதே என இந்த விளையாட்டை விளையாடியவர்கள் நினைப்பார்கள் )
      •   TOBLERONE  சுவிட்சர்லாந்தில் பிரபலமான ஒரு முக்கோண வடிவ சாக்லேட் .
      • இந்த போட்டியின் 3 வது லெவலில் TOBLERONE  என்ற படம் இருந்தது .அதை கூகுளில் தேடினால் சுவிட்சர்லாந்து சாக்லேட் என்று வந்தது.பிறகு விக்கிபீடியாவில் தேடி ஒரு வழியாக விடையை கண்டுபிடித்தேன் 
      • விக்கிபீடியாவில்  தான் விடை கிடைத்தது எனக்கு .விக்கிபீடியாவையும் கூகிள் யையும் தேட வைத்ததே அவர்கள் வெற்றி தான் .தொடரட்டும் அவர்கள் பணி 

      Saturday, September 8, 2012

      கோபிநாத்தும் ஒன்பதும் ...

      கோபிநாத்

      • கோபிநாத் இந்த பெயரை தெரியாத விஜய் டிவி நேயர்கள் இருப்பது அரிது .விஜய் டிவி தொகுப்பாளர்களில் இவருக்கென்று தனி இடம் உண்டு
      • நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது .அந்த நிகழ்ச்சி இவ்வளவு  வெற்றி பெற விவாத திறமையுடன் இவரின் நடிப்பு திறமையும் காரணம்.
      • பவர்  ஸ்டாரை கேவலபடுத்தி தானே கேவலப்பட்ட கோபிநாத் நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள் .
      • தற்போது  விஜய் டிவி யில் காலை மற்றும்  இரவு 9 மணிக்கு இவர் ராஜ்ஜியம் தான் விஜய் டிவியில் ..

      உன்னால் முடியும் 
      • உன்னால் முடியும் -இது தான் விஜய் டிவியின்  புதிய விவாத நிகழ்ச்சி ஞாயிறு தோறும்  காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது .நீயா நானாவை  விட இதில் கோபிநாத் அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது 
      • வெற்றி பெற்ற தொழிலதிபர்களை அழைத்து அவர்கள் வளர்ந்த விதம் பற்றி பேசும் புதிய நிகழ்ச்சி 
      • கடந்த வாரங்களில் இதயம் அதிபர் ,சக்தி மசாலா அதிபர்களை அழைத்து விவாதம் நடத்தினர் ,MBA மாணவர்கள் விவாதத்தில்பங்கேற்றனர்.நாளை POWER சோப்பு அதிபர் பங்கேற்கிறார் 
      • சற்று  வித்தியாசமான நிகழ்ச்சி தான்.வித்தியாசத்திற்க்கு என்றுமே விஜய் டிவி தான் போல !
      • இனி விஜய் டிவியில் ஞாயிறு காலையும் இரவும் 9 மணிக்கு கோபிநாத் தான் .

      Wednesday, September 5, 2012

      கடவுளை பின்னுக்கு தள்ளியவர்கள் ..

      TEACHER'S DAY

      மாதா பிதா
      குரு அதன் பின்னர் தானே
      தெய்வம்
      அத்தனை மகிமை
      அல்லவா உங்களுக்கு ..



      கடவுளையே
      பின்னுக்கு தள்ளியவர்கள்
      அல்லவா நீங்கள் !

      எல்லா  தொழிலுக்கும்
      அச்சாணி நீங்கள் தானே !
      அவர்களை உருவாக்குவது
       நீங்கள் தானே !

      உங்களை போற்றுகிறோம்
      நினைவு கூறுகிறோம்
      இந்நாளில் ..


                                     இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

      Monday, September 3, 2012

      நான் ரசித்த படங்கள் -2

       இந்த படங்கள் எல்லாம் பார்த்த மாத்திரம் எனக்கு பிடித்து போனது நீங்களும் ரசியுங்கள் கருத்திடுங்கள் அன்பர்களே!

      எப்படிலாம் யோசிக்கிறாங்க
      +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      இது உண்மை தானோ
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      எதிர்காலத்தில் இது நடக்கலாமுங்க
       ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      ஷூக்களால் ஒரு மனிதன் சோகமாய் இருப்பது போன்ற படம்
       +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      இவுங்களுக்கு ரொம்ப குசும்பு தான்
       +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      இது புதுசு எப்டிலாம் யோசிக்கிறாங்க பாருங்க 
       ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
       நன்றி :கூகிள்+

      மற்றுமொரு பதிவு :     என்னை கவர்ந்த படங்கள்


       உங்கள் பார்வைக்கு :



      Saturday, September 1, 2012

      சிறந்த கருத்தாளர் -ஆகஸ்ட்

      ஒவ்வொரு  மாதமும் எனது தளத்தில் சிறந்த கருத்திடுபவர்களுக்கு அவரின் தளத்தை எனது தளத்தின் இடது SIDEBAR தொடக்கத்தில்  விளம்பரபடுத்தி வருகிறேன் .அதே போல் சென்ற ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கருத்தாளர் பற்றிய பதிவு இது !


      ஆகஸ்ட் மாதம் மொத்தம் 13 பதிவுகள் என்னால் வெளியிடப்பட்டது அதில் குறிப்பிடத்தக்க கருத்துக்கள் கீழே    
      ட்பு ஒன்று போதுமே ....
      என்ற பதிவிற்கு அன்பர் அளித்த கருத்து
      அரசன் சே said...
      அதிகாலை அரும்பிய மலர்களின் மீது அழகு படுத்தும் பனித்துளியாய் நம் வாழ்வை அலங்கரிப்பது நட்பு மட்டுமே .. நற்கவிதை அன்பரே
           
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

      HIDDEN BLOGS வசதி -நமது DASHBOARD இல் 

      என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே

      AROUNA SELVAME said... பாஸ்... நல்லதா போச்சிங்க உங்க ஐடியா.... முதலில் என் தளத்தில் உங்களது தான்....
      இது சும்மா...ஹிஹிஹி

      நல்ல பயனுள்ள பதிவுதாங்க இது. நானும் சிலதைப் பதிந்துவிட்டு எதற்காகப் பதிந்தோம் என்று தெரியாமல் விழித்திருக்கிறேன். எடுத்தாலும் திரும்பவும் கொண்டு வரலாம் என்பது சற்று மன ஆறுதல் தான்.
      நன்றிங்க பாஸ்.
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

       

      ஏன் இந்த கொலைவெறி ? 

      என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே

      கவியை விட உங்கள் கருத்து மிகப் பிடித்தது. காதல், கற்பு, கலவரம் .... இவற்றையெல்லாம் வெறுமனே அடக்கியாள முடியாது என்பது தெரியாது.... பெரும்பாலான ஆட்சியாளர்களுக்கு..      
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

       நாங்கள் பதிவர்கள் தமிழ்பதிவர்கள்.. 

      என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே

      இக்பால் செல்வன் said...
      அருமையான கவிதை .. இணையம் நமக்கு எவ்வளவு சக்தியைக் கொடுக்கின்றது .. எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீங்கள் நினைப்பதை நான் படித்துக் கருத்திடுகின்றேன். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இவை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடிந்ததில்லை அல்லவா !!! இணையம் என்றுமே அற்புதமான ஒன்று .. அட்சயப் பாத்திரம் இது !!!     

      +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      நான் எப்படியடி தூங்க? 
      என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே 





      அரசன் சே said...
      காலங்காலமாய் அவர்கள் செய்யும் வாடிக்கை விளையாட்டு தான் அன்பரே .. அதானே எப்படி தூங்க முடியும் ..
      ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++     
      Abdul Basith said...
      மூன்றாமாண்டில் காலடி வைத்திருப்பதற்கும், மேலும் வளர்ச்சி அடைவதற்கும் வாழ்த்துக்கள் அன்பரே! தற்போது சினிமா செய்திகளுக்கு தான் மவுஸ் அதிகம். பேசாமல் சினிமா பற்றியும் கவிதை எழுதுங்களேன்? :D :D :D
         ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++    
      மேற்கண்ட  கருத்துகளை தவிர பல கருத்துக்கள் உள்ளன .பதிவின் நீளம் கருதி அவை சேர்க்க பட வில்லை .பல சிறந்த கருத்துக்களை அளித்து என்னை ஊக்கபடுத்திய "கரைசேரா அலை" அரசனுக்கு ஆகஸ்ட் மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுக்கிறேன்
      அவரது தளம் இந்த மாதம் முழுவதும் எனது தளத்தின்  இடது SIDEBAR இல் விளம்பரபடுத்தபடும்.நன்றி
      முந்தைய கருத்தாளர்கள் :
      மே             வரலாற்று சுவடுகள்