தமிழா
உன்னை
ஆடு மாடு கொடுத்து
மேய்க்க சொல்கிறது
ஒரு கூட்டம்
மிக்சி ,கிரைண்டர்
கொடுத்து உன்னை
ஆட்டுவிக்க நினைக்கிறது
ஒரு கூட்டம்
இலவசங்கள்
வாங்கி கொண்டு
உன்னை விற்க போகிறாயா
ஐந்து ஆண்டுகள்
உன்னை ஆள்வதற்கு
உன்னை விற்க போகிறாயா
வாக்கிற்கு பணம் வாங்கி ...
கள்ளபணம் தானே
வாங்கி கொள் என
ஒரு கூட்டம் உன்னை சொல்லும்
உண்மை தான்
ஆனால் அதை வாங்க
நமக்கு என்ன உரிமை ?
உன் குடியுரிமையை
காப்பாற்ற வாக்களி
நீ இந்தியன் என்றால் வாக்களி
பணம் வாங்காமல் ..