Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Friday, March 2, 2018
Friday, May 26, 2017
காலா - கரிகாலன் -முதல் பார்வை
Posted by Prem S On Friday, May 26, 2017
காலா -கரிகாலன் இது தான் தலைவரின் அடுத்தபட தலைப்பு .தலைப்பு வெளியானதில் இருந்தே TRENDING இல் இருந்தது சமூக தளங்களில் ..
தனுஷின் தயாரிப்பு ரஞ்சித் இயக்கம் போன்றவற்றால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது
முதல் பார்வை
காலன் என்றால் எமன் கரிகாலனின் சுருக்கம் எனவும் எடுத்து கொள்ளலாம் அந்த கண்களில் இருக்கும் நெருப்பு ஏதோ சொல்கிறது
லோக்கல் தாதா கெட்டப்பில் ஜீப்பில் அமர்ந்திருக்கும் இடம் மும்பையை கதைக்களமாக கொண்டதை தெரிய படுத்துகிறது .சேரி பகுதியில் வசிக்கும் தாதா கதை என்பது குறிக்கிறது இப்படம்
பட டிசைன் ஒற்றுமை
பட டிசைன் தளபதியை ஒத்திருப்பதை காண முடிகிறது
மேல்பட பகிர்வு நன்றி RAJINIFANS.com
இந்த படத்திலும் வயதான கெட்டப்பில் தான் ரஜினி வருவது உறுதி படுத்தபட்டு விட்டது .இருப்பினும் கெத்தான ரஜினியை ரஞ்சித் தருவார் என எதிர்பார்ப்போம் !
Wednesday, April 9, 2014
கோச்சடையான் -எங்கே ரஜினி ? ஓர் அலசல்
Posted by Prem S On Wednesday, April 09, 2014
என்ன தான் தொழில்நுட்ப புதுமை என்றாலும் எந்திரனை ஏற்று கொள்ள முடிந்தது .அதில் ரஜினி தெரிந்தார் .ஆனால் இந்த படம் முழுவதும் ரஜினி நடிக்காதது போலவே இருக்கிறதே!முழுவதும் அணைத்து பாத்திரங்களும் animation வடிவிலயே அமைக்கப்பட்டு இருக்கிறது .
உதாரணத்திற்கு கீழே உள்ள படங்களை பாருங்கள் .அதில் எங்கே ரஜினி தெரிகிறார் .அனிமேஷன் ரஜினியின் அப்பட்டமாக தெரிகிறது
கீழே உள்ள வீடியோவை பாருங்கள் .அதில் ரஜினியை அடையாளம் கண்டுபிடியுங்கள்
மேலே கண்ட TRAILOR இல் ரஜினி ரசிகர்கள் ஆறுதல் பட்டு கொள்ள கூடிய ஒரே அம்சம் தலைவரின் குரல் தான் அந்த கம்பீர குரலுக்காக வேணும் இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வருவார்கள் என நினைத்தாரோ ரஜினி மகள்
கே.எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் இருந்து விலகிய போதே பலருக்கு புரிந்திருக்கும் இப்படம் ரஜினி படம் அல்ல அனிமேசன் படம் என்று ..
ரஜினி ஒரு பாடல் பாடியதாக அதிகம் விளம்பரப்படுத்தபட்டது.ஆனால் அவர் பாட வில்லை .வசனம் பேசி இருக்கிறார் .
மொத்தத்தில் இது ரஜினி படம் இல்லை என்பதே உண்மை ஆனாலும்அனிமேசன் படம் பார்க்கவும் ரஜினி ரசிகன் முயல்வான் .ஆனால் மற்ற ரசிகர்கள் பார்ப்பார்களா? என்பது கேள்விகுறி தான் .
Saturday, December 21, 2013
Sunday, March 3, 2013
"பவர் ஸ்டாரின்" லத்திகா -பரபர விமர்சனம்
Posted by Prem S On Sunday, March 03, 2013
கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பார்த்த பின்னர் பவரின் முந்தைய படங்களை பார்த்தாக வேண்டும் என்ற ஒரு விபரீத துடிப்பு ஏற்பட்டது .அதுவும் 225 நாட்களை கடந்து ஓ(ட்)டிய லத்திகாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசையில் DVD கடையில் லத்திகா பட CD கொடுங்க என்றேன் .மேலும் கீழும் ஒரு முறை பார்த்த கடைக்காரர் "அந்த " மாதிரி CD லாம் இப்ப விக்கிறது இல்லை என குண்டை தூக்கி போட்டார்.
பவரின் பவர் அவருக்கு தெரிய வில்லை போலும் என நினைத்து இணையத்தில் தேடி தரவிறக்கி கண்டு இங்கே எனது அனுபவங்களை பகிர்கிறேன்
கதை :
- கதை அது இருக்கா என்ன ? என்றெல்லாம் கேக்க படாது .கொஞ்சம் இருக்கு
- நல்லவர் வல்லவராக வாழும் பவரின் குழந்தை லத்திகாவை வில்லன் ரகுமான் கடத்தி பணம் பொருள் அனைத்தையும் வாங்கி கொண்டு அலைய விடுகிறார் .அவர் ஏன் அப்படி செய்கிறார் ரகுமானிடம் இருந்து லத்திகாவை பவர் எப்படி மீட்கிறார் என்பதே கதை
- பவரிடம் வேலை பார்க்கும் BA தான் ரகுமானின் மனைவி .ரகுமான் பவரை தனது மனைவியுடன் தவறாக உள்ளார் என தவறாக எண்ணி பவரின் மகளை கடத்துகிறார்
- பவர் தான் அவ்வாறு இல்லை என்பதை நிரூபிக்க உண்மையாகவே (!) ரகுமானின் மனைவியுடன் தவறாக நடிப்பது போல் நடிக்க பவரை கத்தியால் குத்தி விடுகிறார் ரகுமான் மனைவி .உண்மை உணர்ந்த ரகுமான் திருந்தி லத்திகாவை விடுவிப்பது தான் கதை
சிறப்பம்சங்கள்
- குண்டு துளைத்து கொண்டு லத்திகா டைட்டில் வரும் போதே நம் இதயத்தை பவர் குண்டு வைத்து தகர்க்க போகிறார் என தெரிந்தது
- ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க முயன்றிருக்கிறார் பவர்
- படத்தில் பவருக்கு சொந்த குரல் இல்லை யாரோ குரல் கொடுத்து உள்ளனர்
- பவரின் காதல் கல்யாண ப்ளாஷ்பேக்லாம் ம்ம் எங்கையோ போய்ட்டீங்க பவர்
- "நீங்க நல்ல இருக்கோணும் நாடு முன்னேற" என எம்.ஜி .ஆர் பட பாடல் பின்னணியில் எம்.ஜி.ஆரே பவரை வரவேற்பது போன்ற காட்சிகள் எல்லாம் ரொம்ப ஓவர்
- "மலரே குறிஞ்சி மலரே" என பழைய பாடலுக்கு பவரின் ரொமான்சை பார்க்க கண்கள் போதாது
- படத்தில் ஒருத்தர் குரல் கூட சரியாக சிங் ஆக வில்லை DVD தரமா இல்லை படத்திலேயே அப்படி தானா என தெரிய வில்லை
மொத்தத்தில் விஜயகாந்த் போன்றவர்கள் நடித்து இருந்தால் ஓடிருக்க கூடிய படம் இந்த லத்திகா
உங்கள் பார்வைக்கு :
Monday, January 21, 2013
அனுஷ்காவும் அலெக்ஸ் பாண்டியனும் ...
Posted by Prem S On Monday, January 21, 2013
கதை
மாற்றான் படத்தில் தடை செய்யப்பட்ட மருந்து போல இங்கேயும் ..அந்த மருந்தை அனுமதிக்க முதல்வரின் கையெழுத்துக்காக அவளது மகளை கடத்த கடத்தல் காரன் கார்த்தியிடம் ஒப்படைக்கிறார்கள் .
அவரும் சில இரவுகள் அனுஷ்காவை பத்திரமாக வைக்கிறார் காட்டில் ஓர் வீட்டில் .திரும்ப ஒப்படைக்க போகும் போது அனுஷ்கா அந்த மருந்தை பற்றி சொல்ல நல்லவனாகி முதல்வரிடம் அனுஷ்காவை எப்படி ஒப்படைக்கிறார் என்பது தான் கதை
அனுஷ்கா :
- அனுஷ்கா ரசிகர்களுக்கு கண்கொள்ள காட்சியாக கார்த்தி அனுஷ்காவை கடத்தும் காட்சி இருந்திருக்கும் .
- அனுஷ்கா கார்த்தியின் சட்டையை போட்டு இருக்கும் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்து.
- ஏகபட்ட உயரத்தில் இருந்து விழும் கார்த்திக்கு ஒன்றும் ஆகவில்லை .அனுஷ்கா மட்டும் மூலிகை சிகிச்சை எடுக்கிறார்
- அனுஷ்கா- கார்த்தி காதல் காட்சிகள் அவ்வளவாக இல்லை
அலப்பரைகள் :
- தூரத்து சொந்தம் என்று கார்த்தியை சந்தானத்தின் அம்மா அறிமுகபடுத்தியும் அவரது தங்கைகளை வைத்து காமெடி என்ற பெயரில் செய்யும் கூத்து ரொம்ப அதிகம்
- கார்த்தி யார் என்பதை தெரிந்த சந்தானத்தின் அம்மாவே மகள்களை கார்த்திக்கு எண்ணை தேய்த்து விட வைக்கும் இடம் எல்லாம் ஐயோ ரகம்
- எண்ணை தேய்த்து விடுவதும் காம விளையாட்டுகள் விளையாடுவதுமாக போகிறது காமெடி காம நெடி
மொத்தத்தில் நேரம் போக வில்லை எனில் அனுஷ்கா ரசிகர் எனில் இப்படத்தை பார்க்க முற்படலாம்
உங்கள் பார்வைக்கு :
Saturday, January 19, 2013
பவர் ஸ்டாரின் பவர் -லட்டு தின்ன ஆசை
Posted by Prem S On Saturday, January 19, 2013
பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் அச்சு அசல் ரீமேக் .ஹிந்தி ஆசிரியர்க்கு பதில் பாட்டு வைத்தியர் .கராத்தே மாஸ்டருக்கு பதில் டான்ஸ் மாஸ்டர் ,நாயகின் அம்மாவுக்கு வீட்டு வேலை செய்யும் கதாபாத்திரம் அப்படியே சேது வாக பாக்கியராஜ் வேடத்தில் ..
மூன்று வாலிபர்கள் ஒரு பொண்ணை காதலிக்கும் அதே கதை சற்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் ..
- என்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என பவர் அடிக்கும் லூட்டி கலக்கல்
- பவர் காட்டும் ஒவ்வொரு முகபாவனைக்கும் நமக்கு சிரிப்பு வருகிறது.
- சந்தானம் பவாரை கலாய்த்து அடிக்கும் வசனங்களுக்கு பவரை பார்க்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது (சந்தானத்தையும் தான் )
- நாயகி விசாகா தமிழ் சினிமா கதாநாயகிகள் பண்ணுவதை விட அதிகமாகவே பண்ணி இருக்கிறார் அழகாவும் இருக்கிறார்
- இந்த படத்தின் உண்மையான நாயகன் பவர்ஸ்டார் என்று தான் நினைக்கிறேன் .
- பவரை கலாய்த்து ஒரு பாட்டு சந்தானத்துக்கே பாதகமாய் அமைந்து விட்டது என நினைக்கிறேன்
- சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார்
- சந்தானத்துக்கு மட்டும் தனி பாட்டு காதலை சொல்வதற்கு !.
உதாரணத்துக்கு பவர் ஸ்டாரை பார்த்து சந்தானம் பேசும் சில வசனங்கள்
- நான்லாம் காமெடியன்னு தெரிஞ்சு இருக்கேன் நீ காமெடியன்னு தெரியாமா காமெடி பன்ற
- நானும் எத்தன நாலா தான் அடுத்தவன் காதல ஊட்டி வளக்குறது நானும் டூயட் பாடனும்
மொத்தத்தில் இன்று போய் நாளை வா படம் பார்க்கதாவர்களுக்கு இந்த படம் கலக்கலோ கலக்கல் .பார்த்தவர்களுக்கோ கலக்கல் .சிரித்து சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம்
Sunday, December 30, 2012
தமிழ் சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்கள் 2012
Posted by Prem S On Sunday, December 30, 2012
2012 இல் பல தமிழ் படங்கள் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்து உள்ளது .அவற்றில் நான் ரசித்த பார்த்த படங்கள் பற்றிய எனது எண்ணங்கள் கீழே
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
காதலில் சொதப்புவது எப்படி :
நான் ஈ
காதலில் சொதப்புவது எப்படி :
- நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு வாழ்த்துக்கள் பாலாஜி.
- ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள் என்பதே கதை.
- நெகடிவ் க்ளைமாக்ஸ் இல்லை.சுவிட்சர்லாந்து டூயட் இல்லை.தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை உடைத்து எரிந்திருக்கிறது இப்படம்.
- "இத சொல்றதுக்கு உனக்கு இவ்வளவு நாள் ஆச்சா!"என அமலாபால் சித்தார்த்திடம் சொல்லும் அழகே தனி!
- இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நான் ஈ
- நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து வில்லனை பழிவாங்குவது தான் கதை
- ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால் மனித இனம் படும் சின்ன சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
- இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
- இப்படத்தினை பற்றிய எனது முழு விமர்சனத்தை இங்கு படிக்கலாம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
- தமிழ் சினிமாவின் பல கிளிசேக்களை கிழித்தெறிந்த படம் .முக்கால்வாசி படத்தில் காதாநாயகி இல்லை.
- தலையில் அடிபட்டதால் கடந்த ஒரு வருடத்தில் நடந்தைவை அனைத்தும் மறந்த நாயகனுக்கு அவன் திருமணமும் மறந்து விடுகிறது .அவனது நண்பர்கள் அதை மறைத்து திருமணத்தை எப்படி நடத்தினார்கள் என்பது தான் கதை .
- நட்பின் பெருமையை சொல்லும் படம்
Sunday, October 14, 2012
துப்பாக்கியும் -6 வித்தியாசமும் ....
Posted by Prem S On Sunday, October 14, 2012
விஜயின் துப்பாக்கி திரைப்பட புகைப்படம் 1982 இல் வெளிவந்த ஆங்கில திரைப்படத்தை ஒத்து உள்ளது .புகைப்படம் மட்டுமா இல்லை முழு படமுமா என்பதை படம் வந்தால் தான் தெரியும்
விஜயின் துப்பாக்கி ஸ்டில்
கீழே காணும் புகைப்படம் 1982 இல் வெளிவந்த ஆங்கிலத்திரைப்படம் An Officer and a Gentleman
மேற்கண்ட இரு புகைப்படங்களுக்கு இடையே ஆறு வித்தியாசங்கள் உள்ளன .(எனக்கு தெரிஞ்சு).
வித்தியாசங்களை கண்டுபிடிக்க வசதியாக ஒருசேர புகைப்படம் கீழே
உங்கள் பார்வைக்கு :
விஜயின் துப்பாக்கி ஸ்டில்
கீழே காணும் புகைப்படம் 1982 இல் வெளிவந்த ஆங்கிலத்திரைப்படம் An Officer and a Gentleman
மேற்கண்ட இரு புகைப்படங்களுக்கு இடையே ஆறு வித்தியாசங்கள் உள்ளன .(எனக்கு தெரிஞ்சு).
- .விஜய் டிரஸ் நிறம் பச்சை -அங்கு வெள்ளை
- விஜய் மற்றும் காஜல் புன்னகை -அங்கு இல்லை
- பின்புறத்தில் மேகங்கள் -அங்கு வேறு
- காஜல் கையில் வளையல் -அங்கு அது இல்லை
- காஜல் பெல்ட் அணியவில்லை -அங்கு அணிந்துள்ளார்
- விஜயின் உடையில் 3 ஸ்டார் -அங்கு இரண்டு
வித்தியாசங்களை கண்டுபிடிக்க வசதியாக ஒருசேர புகைப்படம் கீழே
உங்கள் பார்வைக்கு :
Friday, October 5, 2012
தாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...
Posted by Prem S On Friday, October 05, 2012
தாண்டவம் கதை
லண்டன் குண்டுவெடிப்பில் கண் பார்வையை இழந்து உயிர் தப்பிய விக்ரம் குண்டு வெடிப்பில் இழந்த மனைவியை கொன்றவர்களை பழிவாங்குவது தான் கதை
மூன்று ஹீரோயின்கள்
எமி ஜாக்சன் ,அனுஷ்கா ,லக்ஷ்மிராய் என மூன்று ஹீரோயின்கள் .லக்ஷ்மி ராய் ஒரு சில காட்சிகள் தான் மற்ற இருவருக்கும் சம அளவில் காட்சிகள்
எமி ஜாக்சன்
- மிஸ் லண்டன் ஆக அறிமுக காட்சி மற்றும் இரண்டு பாடல்கள்.மிஸ் யுனிவர்ஸ் ஆக சமூக அக்கறை வேண்டும் என மரம் வளர்த்தல் ,go green என நடித்து போட்டோ எடுப்பது உண்மை உரைக்கும் காட்சிகள்.
- கண்பார்வையற்ற விகரமுடன் நட்பு பாராட்டி இறுதியில் விக்ரமை போலீசில் காட்டி கொடுக்கும் கேரக்டர் ஆக நடித்திருக்கிறார்
அனுஷ்கா
- விக்ரமின் மனைவியாக பிளாஷ்பேக்கில் வருகிறார்அனுஷ்கா
- விக்ரம் -அனுஷ்கா திருமணம் முடிந்து பின்பு நடக்கும் காட்சிகள் மௌனராகம் படத்தின் மோகன் ரேவதியை நினைவூட்டினாலும் ரசிக்க வைக்கின்றன.
- அனுஷ்காவிற்கு பிடித்த விசயங்களை அவர் தங்கை மூலம் கேட்டு கொண்டு அனுஷ்காவிடம் விக்ரம் பேசும் காட்சிகள் கலக்கல்.இரண்டு பாடல்கள் இவருக்கும் இருக்கிறது
லக்ஷ்மி ராய்
- விக்ரம் நண்பரின் மனைவியாக வருகிறார் லக்ஸ்மி ராய்
- குண்டு வெடிப்பில் இழந்த கணவனை கொன்றவர்களை கொல்வதற்காக விக்ரமுடன் இணைந்து அவர்களை கொல்வதற்கு உதவி செய்கிறார் .மற்ற படி பெரிதாக காட்சிகள் இல்லை இவருக்கு..
சந்தானம் டாக்ஸி டிரைவர் ஆக கதையுடன் இணைந்தும்,நாசர் விக்ரம் செய்த கொலைகளை கண்டுபிடிக்கும் அதிகாரியாகவும் வருகிறார்
மொத்தத்தில் கிளாமர் காட்சிகள் இல்லாத குடும்பத்துடன் எந்த நெளிவு சுளிவுக்கும் வழிவகுக்காமல் பார்க்க கூடிய படம் தான் இந்த தாண்டவம் .
Wednesday, August 15, 2012
மாற்றான் பாடல்கள் ஓர் அலசல்
Posted by Prem S On Wednesday, August 15, 2012
முற்றுபுள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மொழியே சொக்கி நிற்கும்
அசைகின்ற சொத்துகள் உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள் என்னில் தாராளம்.
கால் முளைத்த பூவே :
மகாலக்ஷ்மி ஐயர் ,ஜாவேத் அலி,நின்சி வின்சென்ட் ஆகியோர் பாடியுள்ளனர்
ரசித்த வரிகள்
நிலவு எரிகையில் விரல்கள் திரும்புதோ
நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ
ஏனேனோ எனை ஏனோ உருக்குகிறாய்
நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய்
பாடல் கேக்க
ரெட்டைக்கதிரே:
கிரிஷ் மிலி ,பாலாஜி பாடியுள்ளனர்.ஒட்டி பிறந்த இரு சூர்யாக்களை பற்றிய பாடல் என நினைக்கிறேன்
ரசித்த வரிகள்
இவன் ஒரு பக்கம் அவன் மறு பக்கம் இது எதுவோ
பூவும் தலயும் சேர்ந்த பக்கம் பொதுவோ
பாடல் கேக்க
நாணி கோனி:
விஜய் பிரகாஷ் ,கார்த்திக் ,ஸ்ரேயா கோஷல் மற்றும் ஜசீல் பாடியுள்ளனர் .
ரசித்த வரிகள்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
நீராய் நீராய்
நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய்
என் தாகம் தாண்டி நூறாய் ..
பாடல் கேக்க
யாரோ யாரோ
கார்த்திக், பிரியா ஹிமேஷ் பாடியுள்ளனர்
இது மெல்லிய சோக பாடல்.ஏழாம் அறிவு பட பாடல் யம்மா யம்மா காதல் பொன்னமா போல அவ்வபோது தோன்றுகிறது
கனகாம்பர இதழை விரித்து
குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும் ?
நிறமாலையை போல் நெஞ்சம்
நெளிந்தாடிடும் பல வண்ணம்
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்
பாடல் கேக்க
Friday, July 20, 2012
பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ?
Posted by Prem S On Friday, July 20, 2012
தமிழ்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்க வேண்டும் என்று கூக்குரல் கொடுப்பவர்கள் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்க கூடிய படம் தான் இந்த பில்லா -2 .
சாதாரண அகதி எப்படி பல பேரை கொல்லும் பில்லாவாக மாறுகிறான் என்பது தான் கதை
பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ?
எனக்கு ரஜினியின் பில்லா மட்டுமே பிடித்தது உங்களுக்கு!
உங்கள் பார்வைக்கு :
யார் போலடா நீ
சாதாரண அகதி எப்படி பல பேரை கொல்லும் பில்லாவாக மாறுகிறான் என்பது தான் கதை
பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ?
- 3குத்து பாட்டு 2டூயட் என்ற தமிழ் படங்களின் பார்முலா நம்பி படம் பார்க்க வருவதாக இருந்தால் இது உங்களுக்கான படம் இல்லை
- காதல் ரசம் கொட்டும் காட்சிகள் இல்லை.டூயட் கூட இல்லை.
- ஒரே ஒரு வில்லனை தொடக்கத்தில் இருந்து அழிக்க முயன்று கடைசியில் அழிக்கும் தமிழ்படம் இல்லை இது.ஏகப்பட்ட வில்லன்கள் ஒவ்வொருவரையும் சில காட்சிகளுக்குள் போட்டு தள்ளி போய்(நடந்து) கொண்டே இருக்கிறார்
- நகைச்சுவை காட்சிகள் அங்கங்கே இணைக்க பட்டு இருக்கும் என நினைத்தால் அது இங்கு இல்லை.நகைச்சுவைக்கே இடம் இல்லை
- நாயகன் வில்லத்தனம் செய்தால் இறுதியில் இறப்பான் என்பதை மங்காத்தா விற்கு பிறகு இதிலும் உடைத்து எரிந்து விட்டார்கள் .பலபேரை கொன்று விட்டு இனிமேல் தான் ஆரம்பம் என அஜீத் கடைசியில் சொல்வது போதாதா ?(இது பில்லா1ன் முன்பகுதி என்பதால் இறக்காமல் இருக்கலாம் )
- இறுதி காட்சியில் வந்து யு ஆர் அண்டர் அரெஸ்ட் என்று சொல்லும் போலீஸ் இங்கு இல்லை
- ஆடியோவில் இருந்த "இதயம் இதயம்" மெலடி பாடல் படத்தில் இல்லை ஏனோ!
- பில்லா பாடல்கள் பற்றிய எனது பிரத்யேக பதிவு கீழே
- படம் தொடங்கியது முதல் இறுதிவரை யாரையாவது கொன்று கொண்டே இருக்கிறார் அஜீத் அத்தனை ரத்தம் வன்முறை
எனக்கு ரஜினியின் பில்லா மட்டுமே பிடித்தது உங்களுக்கு!
உங்கள் பார்வைக்கு :
யார் போலடா நீ
Wednesday, July 11, 2012
நான் ஈ (NAAN EE) -எந்திரனை மிஞ்சியது எப்படி ?
Posted by Prem S On Wednesday, July 11, 2012
மெல்லிய உணர்வுபூர்வமான காதல் வழிந்தோடும் படங்கள் நிச்சய வெற்றி பெறுவது உண்டு .
SHORT TERM MEMORY LOSS என்ற கருவை கொண்டிருந்தாலும் சூர்யா -அசின் இடையேயான காதல் காட்சிகளுக்காகவே கஜினியை பார்ப்பதுண்டு இன்னும் .
அதே போல சில காட்சிகள் என்றாலும் நாணி (நாயகன் ) சமந்தா காதல் காட்சிகள் அவ்வளவு அழகு
வில்லன் சுதீப்புடன் பேசிக் கொண்டே நானிக்கு நோட்டமிடும் போது மிளிர்கிறார் சமந்தா
"வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்"
"நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே !"
என்ற கார்க்கியின் வரிகள் போதாதா அவர்கள் காதலை சொல்ல !
நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து வில்லனை பழிவாங்குவது தான் கதை
எந்திரனை மிஞ்சும் கிராபிக்ஸ்
இறுதியில் ஈ இறந்து மீண்டும் ஈயாக I AM BACK என வருவது கலக்கல் .
குழந்தைகள் மட்டும் அல்லது அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம் இந்த நான் ஈ
உங்கள் பார்வைக்கு :

SHORT TERM MEMORY LOSS என்ற கருவை கொண்டிருந்தாலும் சூர்யா -அசின் இடையேயான காதல் காட்சிகளுக்காகவே கஜினியை பார்ப்பதுண்டு இன்னும் .
அதே போல சில காட்சிகள் என்றாலும் நாணி (நாயகன் ) சமந்தா காதல் காட்சிகள் அவ்வளவு அழகு
வில்லன் சுதீப்புடன் பேசிக் கொண்டே நானிக்கு நோட்டமிடும் போது மிளிர்கிறார் சமந்தா
"வீசும் வெளிச்சத்திலே
துகளாய் நான் வருவேன்"
"நுண் சிலை செய்திடும் பொன் சிலையே
பென்சிலை சீவிடும் பெண் சிலையே !"
என்ற கார்க்கியின் வரிகள் போதாதா அவர்கள் காதலை சொல்ல !
நாயகனை கொன்ற வில்லனை நாயகன் ஈயாக மறுபிறப்பு எடுத்து வில்லனை பழிவாங்குவது தான் கதை
எந்திரனை மிஞ்சும் கிராபிக்ஸ்
- ஈயாக பிறப்பெடுப்பது, மத்த ஈக்களை கண்டு பறக்க நினைப்பது என ஒவ்வொன்றிலும் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது
- ஈயின் கால்களில் இருந்து கதிர்வீச்சுகள் வந்து வில்லனை அளிப்பது போன்று லாஜிக் இல்லா கிராபிக்ஸ் அமைக்காமல் ஈயால் மனித இனம் படும் சின்ன சின்ன விசயங்களை சற்று பெரிதாக்கி கிராபிக்ஸ் இல் காட்டி இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் .
- சமந்தா விடும் கண்ணீரில் ஈ நான் தான் ஈயாக மறு பிறப்பு எடுத்து இருக்கிறேன் நாணி என எழுதுவது கலக்கல்
- ரஜினியின் எந்திரனை மிஞ்சும் அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன .சில காட்சிகள் கிராபிக்ஸ் தானா என யோசிக்க வைக்கிறது
- இந்த படத்தில் ஈக்கு அடுத்த படியாக உண்மையான நாயகன் என்றால் வில்லன் சுதீப் தான் .நாயகியை அடைய நானியை போட்டு தள்ளும் போதும் ஈயிடம் மாட்டி கொண்டு அல்லல் படும் போதும் கலக்குகிறார் .
- ஈக்கு பயந்து ஹெல்மெட் மாட்டி கொண்டு மீட்டிங்கிற்கு வருவது வீட்டு பால்கனியில் நிர்வாணமாக ஈயை விரட்டுவது (ஓட்டுவது )என மனிதர் கலக்குகிறார்
இறுதியில் ஈ இறந்து மீண்டும் ஈயாக I AM BACK என வருவது கலக்கல் .
குழந்தைகள் மட்டும் அல்லது அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான படம் இந்த நான் ஈ
உங்கள் பார்வைக்கு :

Subscribe to:
Posts (Atom)











.jpg)




















.jpg)





