Monday, January 31, 2011

தமிழா ! தமிழா !

மீன் பிடிக்க
சென்ற எம்
தமிழனை மீனவனை மீன்
போல கொத்தி சுருக்கு கயிறு
மாட்டி கொன்ற அற்ப பதர்களே !
எம் தமிழனை கொன்றால்
யார் கேட்பார் என நினைத்தீர்களா ?
உங்களை சொல்லி குற்றமில்லை

கடிதம் எழுதுவதும்
கட்டி அணைத்து
கண்ணீர் துடைப்பது போல
நடிப்பதும் மட்டுமே எங்கள்
அரசியலார்களின்
வேலை என்பதை
தெரிந்து இருக்கிறீர்கள்

தமிழன் கேவலபடுவதும்
தமிழ் கேவலபடுவதும்
எங்களுக்கு புதிதல்ல
என்று நினைத்தீரோ !

ஈழ தமிழனை சாக
விட்டு வேடிக்கை பார்த்த
இந்தியா அரசு இதிலும்
வேடிக்கை பார்க்கிறதே !

ஆஸ்திரேலியாவில்
சில மாணவர்கள் தாக்க பட்டதற்கே
துடிதுடித்தீரே நாங்களும்
இந்தியர் தானே பிறகேன் இப்படி?


(இந்த கவிதையை எழுத தூண்டிய அன்பர் செந்தழல் ரவிக்கு நன்றி ! மேலும் மீனவர் பிரச்சனை பற்றி அறிந்து கொள்ள கிளிக்குங்கள் )







Friday, January 28, 2011

Thursday, January 27, 2011

இது யாதெனில் ...
















இறக்கி வைக்க
முடிவதில்லை
இச் சுமையை...



எளிதில்
துறக்க முடிவதில்லை
இச் சுமையை ...

பத்து மாதத்தோடு
முடிவதில்லை இது
எதற்கும் பயன்படாது
என நினைதேன் -ஆனால்
பயன்படுகிறது என் குழந்தைக்கு
கார் ஓட்ட ..
என் தொந்தி ...

Saturday, January 22, 2011

மக்கள் சேவையில் நான் ..






(கடந்த டிசம்பர் 2010 பாரத ஸ்டேட் வங்கி (STATE BANK OF INDIA) திருச்சி கைலாசபுரம் கிளையில்  பணியில் நான் சேர்ந்த போது பயிற்சி மையத்தில் நான் வாசித்த கவிதை இது.. பாரத ஸ்டேட் வங்கி பற்றிய உங்கள் கருத்துக்களும் வரவேற்க்கபடுகின்றன .. )


கிளை
இல்லா
மரம் உண்டு
பாரத ஸ்டேட் வங்கி
கிளை இல்லா ஊர் உண்டா?

கடல் நடுவே காசில்லாமல்
கலங்கி நின்றாலும்
காப்பாற்றும் பாரத ஸ்டேட் வங்கி
ATM மூலம் ...


கல்வி நிலையம்
இல்லா ஊரிலும்
பாரத ஸ்டேட் வங்கி
ATM உண்டு ..

வாடிக்கையாளர்
திருப்தியே முதன்மையாய்
கொண்டதால் தான்
முதலிடம் பெற்றதா
இவ்வங்கி ?

இந்தியாவில் மட்டுமல்ல
உலகிலும் முதலிடம்
விரைவில் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
உங்கள் வாடிக்கையாளன்
இப்போது உங்கள் ஊழியனாய் ...

மாது விலைக்கு ...























கசக்கி எறியப்படும்
மலர்கள் நாங்கள்

சதைகளை தின்னும்
மனிதர்கள் போல்
எங்களையும் தின்பார்கள்
காம அரக்கர்கள்

எங்கள் அங்கங்கள்
அவர்களின் விளையாட்டு
மைதானங்கள் -விருப்பம்
போல் விளையாடுவர் நாங்கள்
விரும்பா விட்டாலும் ...

எங்களை நேசிப்பார் யாருமில்லை
பூஜிப்பார் யாருமில்லை
அவசர தேவைக்கு
விற்கப்படும் பொருள் நாங்கள் ...

நாங்களும் மாது தான்
ஆனால் விலைக்கு ...