Sunday, October 30, 2011

உங்கள் தளத்தில் வாசகர்கள் அதிக நேரம் இருக்க ..


நமது வலைதளத்திற்கு வரும் வாசகர்கள் ஒரு பதிவு படித்ததோடு சென்று விடாமல் இருக்க LINKWITHIN போன்ற    RELATED POSTS இணைத்திருப்போம் .இது அதற்க்கான பதிவு அல்ல .

உங்கள் தளத்திலிருந்து வேறு தளங்களுக்கு இணைப்பு கொடுக்கும் போது  வாசகர்கள் அந்த இணைப்பிலிருந்து வேறு தளங்களுக்கு சென்று நமது தளத்திற்கு திரும்பி வர முடியாமல் போய் விடும் .

இதை தவிர்க்க வேறு தளத்தின் இணைப்புகள் புது WINDOW இல் OPEN ஆக என்ன செய்வது என்று பார்ப்போம் புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக ..

இணைப்பு கொடுக்க புதிய பதிவர்கள் செய்வது



<a href="http://www.example.com">TEXT HERE</a>


புதிய பக்கத்தில் (TAB )  OPEN ஆக 
 
<a href="http://www.example.com" target="blank">TEXT HERE</a>


target="blank" என்பதை மட்டும் இணைத்தால் போதும் உங்கள் தளத்தில் வாசகர்கள் தொடர்ந்து இருக்க செய்யலாம் புதிய WINDOW இல் OPEN ஆகும் உங்கள் வெளி இணைப்புகள் ..


Wednesday, October 26, 2011

ஒஸ்தி-உசத்தியா ?-- பாடல்கள் ஓர் அலசல்

சிம்புவின் ஒஸ்தியில் மொத்தம்  5 பாடல்கள், 4  குத்து ஒரு மெலடி டைப்பில் அனைவரையுமே   கவரும் வண்ணத்தில் உள்ளது .பாடல்கள் மற்றும்  நான் ரசித்த வரிகள் மற்றும் பாடலின் இணைப்பு  சுட்டியும்   கீழே !

வாடி வாடி க்யூட்  பொண்டாட்டி ..

ஒஸ்தி  நாயகி ரிச்சா

சிம்பு எழுதி பாடியுள்ள இப்பாடல் முதலில் கேட்ட  மாத்திரமே பிடிக்கின்ற ஆட வைக்கின்ற பாடல் ..பொண்டாட்டிக்கு என்னவெல்லாம் செய்வார் என்பதை பாடலாக  எழுதி உள்ளார் .எவன்டி உன்ன பெத்தான் வானம் பட பாடல் ரகம் இது ..

பாடலில்  நான் ரசித்த வரிகள் ..

"வாடி வாடி வாடி  என் கியூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி  வாடி வாடி வாடி  என் ஹாட்  பொண்டாட்டி.."
என தொடங்குகிறது

உனக்கு முன்னாடி  சத்தியமா என் என் உசிரு என்ன விடாது ஏனா நான் போயிட்டா உன்ன யார் பார்த்துப்பா ?  

- என மனைவியை ஐஸ் வைக்கும்   வரிகள் பல ..

சிம்புவின் வசீகரிக்கும் குரலை கேளுங்கள் 



கலா சலா கலசலா ...
 
சிம்பு ரொம்ப கஷ்டப்பட்டு(?) மல்லிகா செரவத்தை அழைத்து ஆட வைத்திருக்கிறார் இப்பாடலில் ..இதுவும் குத்து பாடல் தான் ..பாடலின் இடையே ரா  ரா என  T .R தொண்டை வலிக்க பாடுவதை கேளுங்கள் .


 வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான் சர்தா பீடா போல என் பெற தான் மெல்லுவான் (பாலிவுட் நாயகியாம் )
 என தொடங்குகிறது ..

மல்லிகா நீ கடிச்சா நெல்லிக்கா போல் இனிப்பா ..பிடிச்சா வைச்சுகயா மனசுள்ள தைச்சுகையா  என போகிறது ..



நெடுவாலி..
ஒஸ்தி நாயகி ரிச்சா

நெடுவாலிக்கு அர்த்தம் தெரிந்தால் அன்பர்கள் சொல்க ..குத்து பாடல் ரகம் தான்

நெடு வாலி அடியே நெடு வாலி உடும்பா உடும்பா என்ன நீயும் கவ்வி போறியே -என தொடங்குகிறது  

டுமீலு தான் டுமீலு தான் மாமா கண்ணுல சுட்ட டுமீலு தான்  என பாடும் பெண் குரல் அருமை



ஒஸ்தி  

S .T.R ( அதாங்க சிம்பு)
இது அறிமுக பாடல் என்பதை தவிர வேறொன்றும் இல்லை  

தமிழ் நாட்டு காப்பு தான் தரணியெல்லாம் டாப்பு தான் ஒஸ்தி  என தொடங்குகிறது பாடல் ..

ரவுடிஊரில் உண்டு போலீஸ் ஊரில் உண்டு ரவுடி போலீஸ் உண்டா அது நான் தான் மாமே ஒஸ்தி என கலாய்க்கிறது நம்மை ..






உன்னாலே உன்னாலே .. 

 மெலோடி பாடல் இது ..அப்போ இப்போ என வார்த்தை உபயோகங்கள் பாடலில் அருமை 

"உன்னாலே உன்னாலேசுத்துதடி பூமிபந்து தன்னாலே  கண்ணாலே கண்ணாலே ஒட்டுதடி வானவில்லு என் மேல" என தொடங்குகிறது 


நாள் முழுக்க ஊர  நான் சுத்துனேன் அப்போ 
நீ சிரிச்ச உன்ன நான் சுத்துறேன் இப்போ

என பல  அப்போ இப்போக்கள் பாடலில் ..




  மொத்தத்தில் ஒஸ்தி உசத்தி தான் பாடலில் ..


தீபாவளி தீபாவலி ஆகாமல் இருக்க..



சிதறும்
மத்தாப்பின் கீற்றாய் 
சிதறட்டும் உங்கள் துன்பங்கள்..
இந்நாளில் ...


ஒருவன் 
அழிந்ததற்க்காய் 
மகிழ்கிறோம்  விழா எடுக்கிறோம் என்றால் 
அது தீபாவளி மட்டுமே !


காசை கரியாக்குவதாய்
வெடி வாங்குவதை சொல்லும் 
நபர்கள் அந்த பிள்ளைகள் 
வெடி வெடிக்கையில் உண்டான 
முக மலர்ச்சியை கண்டிருக்க 
மாட்டாரோ !

 தீபாவளி  தீபாவலி
ஆகாமல் கவனமாக 
வெடிப்போமே கவலைகள் கலைந்து 
மகிழ்வோமே இந்நாளில் .. 


வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள்  வாழ்த்துக்கள் ....






Wednesday, October 19, 2011

வருவாய் தரும் GOOGLE ADSENSE மற்றும் பிற தளங்களும் ..


இப்பதிவு GOOGLE ADSENSE.  பற்றியும்  பிற வருவாய் தருவதாய் சொல்லிகொள்ளும் தளங்கள் பற்றியும்  எனது அனுபவங்கள் .புதிய பதிவர்களுக்கு ..

GOOGLE ADSENSE.  விண்ணப்பிக்கும் முன் ..
உங்கள் தளம் தமிழ் தளமாக இருந்தால் ALEXA RANK  ஒரு லட்சத்திற்கு கீழ் இருந்தால் மட்டுமே விண்ணப்பியுங்கள் (இது ஆங்கில தளங்களுக்கு இல்லை )

GOOGLE  ADSENSE  தமிழ் தளங்களுக்கு இல்லை .ஆங்கிலத்தை தான் அதில் தேர்வு செய்ய வேண்டியது வரும் .அதனால் உங்கள் SIDEBAR ,HEADER மற்றும் 
 பதிவின் தலைப்பிலும் ஆங்கிலத்தை இணையுங்கள் (பார்க்க :GOOGLE  ADSENSE  வைத்துள்ள பிரபல பதிவர்கள் ஆங்கிலத்திலும் எழுதியிருப்பதை ..)


குறைந்தது 200 பக்க பார்வைகள் ஒரு தினத்திற்கு உங்கள் தளத்தில் இருக்கிறதா என  பார்த்து கொள்ளுங்கள் 

உங்கள் தளம் விரைவில் LOAD  ஆக தேவையற்ற GADGETS மற்றும் அதிக திரட்டிகளின் ஓட்டுபட்டைகளை   இணைக்காதீர் 

விண்ணப்பித்த பின் .. 

விண்ணப்பித்த பின்னர் இரு தினங்களுக்கு ஒரு முறையாவது பதிவிடுங்கள் ..

உங்கள் விண்ணப்பத்தை   ஏற்று கொள்ளும் வரை தொடர்ந்து விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டாம்  

உங்கள் விண்ணப்பம் ஏற்று கொள்ளபட்டால் அதிக விளம்பரங்களை உங்கள் தளத்தில் வைக்க வேண்டாம் இது உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களை 
எரிச்சல் அடைய செய்யும்.

 பிற தளங்கள்
     
 என்னை பொறுத்தவரை GOOGLE ADSENSE  தவிர பிற தளங்களில் விளம்பரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டாம் 

உங்களுக்கு வருவாய் தருவதாய் சொல்லி கொண்டு அவர்களுக்கு தான் வருவாய் கிடைக்கும்

ஒரு CLICK க்கு ௦.0001$  தருவதாக சொல்வார்கள் அதன் மதிப்பு 25 பைசாவுக்கும் குறைவு என்பதை கவனியுங்கள் .50 $ சேர்ந்தவுடன் உங்களுக்கு பணம் அனுப்பப்படும்  என்பார்கள் .

2 மாதம் கழித்து  யாரவது CLICK செய்து  இருந்தால் உங்களுக்கு 75  பைசா வந்திருக்கும் எப்போது 50 $ வருவது ? உங்கள் தளத்தில் அவர்கள் இலவச விளம்பரம் செய்கிறார்கள் என்பதே நான் கண்ட உண்மை .

நமது கருத்தை இலவசமாகவே பதிவோமே GOOGLE ADSENSE  விண்ணப்பம் 
ஏற்று கொள்ளும் வரை ..

Friday, October 14, 2011

விலை மாது


கசக்கி எறியப்படும்
மலர்கள் நாங்கள்

சதைகளை தின்னும்
விலங்குகள்  போல்
எங்களையும் தின்பார்கள்
காம அரக்கர்கள்

எங்கள் அங்கங்கள்
அவர்களின் விளையாட்டு
மைதானங்கள் -விருப்பம்
போல் விளையாடுவர் நாங்கள்
விரும்பா விட்டாலும் ...

எங்களை நேசிப்பார் யாருமில்லை
பூஜிப்பார் யாருமில்லை
அவசர தேவைக்கு
விற்கப்படும் பொருள் நாங்கள் ...

நாங்களும் மாது தான்
ஆனால் விலைக்கு ...

Monday, October 3, 2011

LINKWITHIN விட்ஜெட்க்கு மாற்றாக புதிய RELATED POSTS விட்ஜெட்

LINKWITHIN RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது .

இதன் சிறப்பம்சங்கள்  

*THUMBANIL SIZE நமது விருப்பபடி வைத்து கொள்ளலாம் 
*எத்தனை பதிவு வேண்டும் என்பதையும்  மாற்றி கொள்ளலாம்
*நமது பதிவின் தலைப்புக்கு ஏற்றபடி புதிய படங்களை அதுவே மாற்றி கொள்கிறது .
* பதிவின் கீழ் மட்டும் வர வேண்டுமா ,முகப்பு பக்கம் முழுவதும் வர வேண்டுமா என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்
*புதிய பதிவுகள் NEW என்று அதுவே குறிப்பிட்டு காட்டுகிறது .


இத்தனை சிறப்பம்சங்கள் உள்ள புதிய RELATED WIDGET  யை உங்கள் பிளாக்கில் இணைக்கஇந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .WIDGETS இல் ADD செய்யுங்கள்  உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி ..

எனது தளத்தில் உள்ள  இந்த WIDGET உங்கள் பார்வைக்கு கீழே ..