Showing posts with label சிலேடை. Show all posts
Showing posts with label சிலேடை. Show all posts

Monday, September 5, 2011

இரு காதலிகளும்... நானும் ...



அவள் வந்ததில் இருந்து
என்னை நீ சரியாக
கவனிப்பதே இல்லை
புலம்புகிறாள் முதல் காதலி ..





இணையத்தில் எப்போதும்
இணைந்திருப்பாய் என்னுடன் ..
இப்போது அவளுடன்
இணைந்திருக்கிறாய்..
 மறந்து விட்டாயா என்னை ..

 உன் கைகள் என்னை
 எப்போதும் வருடி கொண்டே
 இருக்கும் முன்பு ..இப்போது
 அப்படி இல்லை ..

நான் அளவில் சிறியவள்
என்பதால் வெறுக்கிறாயா
 இல்லை   அவள் மோகம்
உன்னை ஆட்டுவிக்கிறதா ..

 எப்படி ஆனாலும் உன்
முதல்   காதலி நான் தான்
 மறந்து  விடாதே !

அவள் அழகி
தான் உன்னை   எப்போதும்
இணையத்தில் இயங்க வைப்பவள் தான்
அதற்காக என்னை மறந்து
விடாதே காதலா !
நான்  உன்னவள்  ...



  கடந்த வாரம் சோனி வயோ லேப்டாப் ஓன்று வாங்கினேன் .அதன் பிறகு செல்போனை அவ்வளவாய் பயன்படுத்துவதில்லை ..இக்கவிதை செல்போன் தன்னை முன்பு போல பயன்படுத்தாதர்க்கு என்னிடம் புலம்புவதாக எனது கற்பனையில் ..















Saturday, July 30, 2011

அழகு பெண்ணொருத்தியால் நான் அழிந்த கதை ...























 கொள்ளை அழகு
பெண்ணொருத்தி
புது மண பெண்ணாய்
இங்கு வருகிறாள்
என்று கேட்டதில் இருந்து
எங்களுக்கு நடுக்கம் தான் ..



எத்தனை காலம்
இங்கிருக்கிறோம்
இந்த வீடு எங்களுக்கு
சொந்தம் அல்லவா !

புயலை போல
திடீரென வந்து
எங்களை அழிக்க தான்
திருமணம் செய்தாயா கள்ளி !

நீ பேரழகி தான் -ஆனால்
இவ்வீடு
அழுக்கு வீடு அல்லவா !

அதோ வருகின்றனர்
உன் உறவினர்கள்
பற்பல ஆயுதங்களை

கொண்டு எங்களை அழிக்க ..


நீங்கள் பயன்படுத்தும்
அந்த அதிக அழுத்த காற்று உள்ள

கருவி எங்களை
உரு தெரியாமல்
அல்லவா அழிக்கிறது


வீட்டுக்குள் வீடு கட்ட
எங்களை தவிர
யாரால் முடியும் ?

எங்கள் சாபத்தால்
உன் வாழ்க்கை
நாசமாகாதா மண
பெண்ணே !


அதோ அந்த மூலையில்
வேண்டா பொருட்கள் உள்ள
அறையில்
எங்களுக்கு இடம் கொடுப்பாயா
உன் மண வாழ்க்கை
இனிக்குமடி


அப்படி செய்தால் ..
வருத்ததுடன் சிலந்தி ...




(திருமணம் முடிந்து புது வீட்டிற்க்கு வரும் மணப் பெண்ணினால் தங்களுக்கு வரும் ஆபத்தை எண்ணி சிலந்தி மணமகளிடம் தங்களை காப்பாற்ற கேட்பதாய் இக்கவிதையை எழுதி இருக்கிறேன் )


இந்த கவிதையை எழுத தூண்டிய எனது அலுவலக தோழிக்கு நன்றி !








Thursday, January 27, 2011

இது யாதெனில் ...
















இறக்கி வைக்க
முடிவதில்லை
இச் சுமையை...



எளிதில்
துறக்க முடிவதில்லை
இச் சுமையை ...

பத்து மாதத்தோடு
முடிவதில்லை இது
எதற்கும் பயன்படாது
என நினைதேன் -ஆனால்
பயன்படுகிறது என் குழந்தைக்கு
கார் ஓட்ட ..
என் தொந்தி ...