Friday, March 29, 2013

புனிதமாக்கும் புனிதரே !



எமக்காய் 
எம் பாவங்களுக்காய் 
உயிர் நீத்தீர் இன்று ..

எமக்காய் 
எவ்வளவோ
செய்தீர் 
செய்கிறிரீர் செய்வீர்
உமக்காய் நான் என்ன
செய்தேன்? ஒன்றுமில்லை

உன் ஆலயம் வர
என்னால் முடியாமல்
போனது ஏன் ?
சோம்பலா? 
நேரம் இல்லாமையா?
அறியாமையா? எக்காரணம்
கொண்டும் என்னை நியாய படுத்த
முடியாது -நீர் என்னை
 தவிர்க்கவா
செய்தீர் நான் உம்மை தரிசிக்க
வராததற்கு..

இனியாவது 
உம்மை பின் தொடர
முயல்கிறேன்
முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் 
நான் உம் பிள்ளை!

புனித வெள்ளியில் 
என்னை 
புனிதமாக்கும் புனிதரே !