நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில நாட்கள் தான் ஆகிறது அதற்குள் அந்த நிகழ்ச்சியின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை எனக்கு !ஏன் என்பதற்கு சில காரணங்கள்
- சூர்யாவுக்கு மாற்றாக பிரகாஷ்ராஜ் எதிர்பார்க்காத ஒன்று.
- "மாற்றம் ஒன்றே மாறாதது .உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் கேள்விகளுடனும் கோடிகளுடனும் உங்கள் சூர்யா "-இதை சூர்யா சொல்லும் போதே உற்சாகம் புன்னகை கலந்து சொல்வார் . இதே வரிகளை பிரகாஷ்ராஜ் சொல்லும் போது முந்தைய ஈர்ப்பு இல்லை
- வில்லத் தனம் காட்டிய நடிகர் என்பதால் எப்பவும் இறுக்கமாக இருக்க வேண்டுமா என்ன ?
- கதாநாயகன் என்பதால் சூர்யாவுக்கு ஜொள்ளு விட்ட பெண் பங்கேற்பாளர்களை பார்க்கும் போதும் விஜய் டிவி தனது விளம்பரங்களில் போட்டு காட்டும் போதும் நிகழ்ச்சியை பார்க்க ஓர் ஆர்வம் ஏற்படும்.அவ்வப்போது சூர்யாவே ஜொள்ளு விட்ட நிகழ்ச்சிகளும் உண்டு ஆனால் தற்போது அது நடக்க சாத்தியம் இல்லை எனவே தோன்றுகிறது .
- நான் சூர்யா ரசிகர் இல்லை.ஆனாலும் இவை எனக்கு தோன்றுகிறது என்னை பொறுத்தவரை கார்த்தியை போட்டிருந்தால் நிகழ்ச்சி களை கட்டிருக்கும் என நினைக்கிறேன்
கேள்விகளை பொறுத்தவரை கொஞ்சம் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது ஆனாலும் முந்தைய சீசன் போல அவ்வப்போது கேள்விகள் வருகின்றன
உதாரணத்துக்கு :
இந்த வசனத்தை பூர்த்தி செய்க
எப்படி இருந்த நான் ------------------
எ) இப்படி ஆகிட்டேன் b )அப்படி ஆகிட்டேன்
முந்தைய சீசனில் எழுதிய பதிவுகள் :