Thursday, January 31, 2013

TWITTER இல் விஸ்வரூபம் படும் பாடு ..


மத சார்பற்ற மாநிலம் தேடி போவேன் தமிழகம் இல்லை என்றால் என்ற கமலின் பேட்டி கண்ட போது  அவரது ரசிகர்கள் இல்லாதவர்களும் வருத்தபடுவார்கள் என நினைக்கிறேன் .

இந்த விஷயம் பற்றி இணையத்தில் தேடிய போது  TWITEER  இல் இந்த பக்கத்தில்  ஒரு கூட்டமே கும்மி அடித்து கொண்டு இருப்பதை கண்டேன் .


பல ரசிக்க தக்க  கமலுக்கு ஆதரவு அளிக்கும் TWEET  கள்  நிரம்பி வழிகிறது .அதில் எனக்கு பிடித்தவை இங்கு 


sateesh botta ‏@bkrsatish
With #viswaroopam its proved that censor has nothing to do except certifying as U or A. They are bunch of jokers as per Tamilnadu Govt



  1. 10h
    penathal suresh ‏@penathal
    Classic lose-lose Situation: #Viswaroopam Kamal loses money, Muslim outfits lose credibility, JJ loses respect, commonman loses a movie

Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் தடை நீங்கியது ..அரசு பிடிவாதம் தொடர்கிறது




செய்தி :
  • விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்கி இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது உயர்நீதிமன்றம்
  • விஸ்வரூபம் திரைபடத்தை நாளை திரையிடலாம் என அறிவிப்பு



அரசு தொடர்ந்து பிடிவாதம் :

  • தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி க்கு வழங்காமல்  விஜய் டிவிக்கு வழங்கியது காரணமா ?
  • நாளை காலை 10.30 மணி வரையாவது நிறுத்தி வைக்கலாமா என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.காலை 5 மணிக்கே படத்தை  திரையிட்டு விடுவார்கள் என்பதால் இந்த கேள்வி
  • 10.30 am வரை தடை பிறப்பித்தால் மேல்முறையீடு செய்து தடையை நீட்டிக்க அரசு எண்ணுகிறது

(எனக்கு தெரிந்து கமல் ஜெ.யை சந்தித்து  காலில் விழுந்தால் போதும்  திரையிடலாம்  என தோன்றுகிறது ?

உங்கள் கருத்து என்ன ?

உங்கள் பார்வைக்கு :














Tuesday, January 22, 2013

GOOGLE+ FOLLOWERS WIDGET யை EDIT செய்ய வேண்டுமா ?

GOOGLE + FOLLOWER WIDGET
இன்று காலை BLOGGER DASHBOARD இல் உலவி கொண்டிருக்கும் போது தற்செயலாக GOOGLE+ FOLLOWER WIDGET யை நமது தளத்திற்கு ஏற்றபடி  EDIT செய்யும் வசதி இருப்பதை அறிந்தேன் .தெரியாத அன்பர்களுக்காக இந்த பதிவு



முதலில் பிளாக்கர் DASHBOARD இல் LAYOUT பகுதிக்கு செல்லுங்கள் அங்கு GOOGLE FOLLOWER WIDGET யை EDIT இல் கிளிக் செய்யுங்கள் .இதுவரை இணைக்காதவர்கள் ADD GADGET சென்று இணைத்து கொள்ளுங்கள்

GOOGLE + FOLLOWER WIDGET

  • அங்கு DEFAULT ஆக SIZE என்பதில் AUTOMATIC என்று இருக்கும் .அதை MANUALLY SPECIFY என்று மாற்றி உங்கள் தளத்தின் SIDEBAR அளவுக்கு ஏற்ற மாதிரி  HEIGHT மற்றும் WIDTH உள்ளிடுங்கள்
  • பின்புலம் DEFAULT ஆக DARK TEXT ON LIGHT BACKGROUND ஆக இருக்கும் .பின்புலம் கருப்பாக வேண்டும் எனில் கீழே படத்தில் குறிப்பிட்டபடி  செய்யுங்கள் SAVE செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் .இனி உங்கள் தளத்துக்கு ஏற்றபடி GOOGLE+ FOLLOWER WIDGET இருக்கும் 



GOOGLE + FOLLOWER WIDGET

உங்கள் பார்வைக்கு :



Monday, January 21, 2013

அனுஷ்காவும் அலெக்ஸ் பாண்டியனும் ...



ரஜினி நடித்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரில் ஓர் படம்   நல்லா தான்  இருக்கும் என்று படம் பார்க்க போனால் வருவியா வருவியா என குத்து குத்தி வெளியே அனுப்புகிறார்கள் .சிவகாசி ,வேட்டைக்காரன் ரக விஜய்க்கு போட்டியாக உருவெடுத்து வருகிறார் கார்த்தி

கதை 
மாற்றான் படத்தில் தடை செய்யப்பட்ட மருந்து போல இங்கேயும் ..அந்த மருந்தை அனுமதிக்க முதல்வரின் கையெழுத்துக்காக அவளது மகளை கடத்த கடத்தல் காரன் கார்த்தியிடம் ஒப்படைக்கிறார்கள் .

அவரும் சில இரவுகள் அனுஷ்காவை பத்திரமாக வைக்கிறார் காட்டில் ஓர் வீட்டில் .திரும்ப ஒப்படைக்க போகும் போது அனுஷ்கா அந்த மருந்தை பற்றி சொல்ல நல்லவனாகி  முதல்வரிடம் அனுஷ்காவை எப்படி ஒப்படைக்கிறார் என்பது தான் கதை 

அனுஷ்கா :

  • அனுஷ்கா ரசிகர்களுக்கு கண்கொள்ள காட்சியாக கார்த்தி அனுஷ்காவை கடத்தும் காட்சி இருந்திருக்கும் .
  • அனுஷ்கா கார்த்தியின் சட்டையை போட்டு இருக்கும் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்து.
  • ஏகபட்ட உயரத்தில் இருந்து விழும் கார்த்திக்கு ஒன்றும் ஆகவில்லை .அனுஷ்கா மட்டும் மூலிகை சிகிச்சை எடுக்கிறார் 
  • அனுஷ்கா- கார்த்தி காதல் காட்சிகள் அவ்வளவாக இல்லை 
ALEX PANDIYAN-KARTHI

அலப்பரைகள் :

  • தூரத்து சொந்தம் என்று கார்த்தியை சந்தானத்தின் அம்மா அறிமுகபடுத்தியும் அவரது தங்கைகளை வைத்து காமெடி என்ற பெயரில் செய்யும் கூத்து ரொம்ப அதிகம் 
  • கார்த்தி யார் என்பதை  தெரிந்த சந்தானத்தின் அம்மாவே மகள்களை கார்த்திக்கு எண்ணை தேய்த்து விட வைக்கும் இடம் எல்லாம் ஐயோ ரகம் 
  • எண்ணை தேய்த்து விடுவதும் காம விளையாட்டுகள் விளையாடுவதுமாக போகிறது காமெடி காம நெடி

மொத்தத்தில் நேரம் போக வில்லை எனில் அனுஷ்கா ரசிகர்  எனில் இப்படத்தை பார்க்க முற்படலாம் 

உங்கள் பார்வைக்கு :




Saturday, January 19, 2013

பவர் ஸ்டாரின் பவர் -லட்டு தின்ன ஆசை



பாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் அச்சு அசல் ரீமேக்  .ஹிந்தி ஆசிரியர்க்கு பதில் பாட்டு வைத்தியர் .கராத்தே மாஸ்டருக்கு பதில் டான்ஸ் மாஸ்டர் ,நாயகின் அம்மாவுக்கு வீட்டு வேலை செய்யும் கதாபாத்திரம் அப்படியே சேது வாக பாக்கியராஜ் வேடத்தில் ..


மூன்று வாலிபர்கள் ஒரு பொண்ணை காதலிக்கும்  அதே கதை சற்று மாறுபட்ட  கதாபாத்திரங்களில்  ..

  • என்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என  பவர் அடிக்கும் லூட்டி கலக்கல்
  • பவர் காட்டும் ஒவ்வொரு முகபாவனைக்கும் நமக்கு சிரிப்பு வருகிறது.
  • சந்தானம் பவாரை கலாய்த்து அடிக்கும் வசனங்களுக்கு பவரை பார்க்கும் போது நமக்கு சிரிப்பு வருகிறது (சந்தானத்தையும் தான் )
  • நாயகி விசாகா தமிழ் சினிமா கதாநாயகிகள் பண்ணுவதை விட அதிகமாகவே பண்ணி இருக்கிறார் அழகாவும் இருக்கிறார்

  • இந்த படத்தின் உண்மையான நாயகன் பவர்ஸ்டார் என்று தான் நினைக்கிறேன் .
  • பவரை கலாய்த்து ஒரு பாட்டு சந்தானத்துக்கே பாதகமாய் அமைந்து விட்டது என நினைக்கிறேன் 
  • சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார் 
  • சந்தானத்துக்கு மட்டும் தனி பாட்டு காதலை சொல்வதற்கு !.
சந்தானம் அவர் மனதில் உள்ளதை எல்லாம் வசனங்களாக அள்ளி தெளித்துள்ளார்

உதாரணத்துக்கு பவர் ஸ்டாரை பார்த்து சந்தானம் பேசும் சில வசனங்கள் 
  • நான்லாம் காமெடியன்னு தெரிஞ்சு இருக்கேன் நீ காமெடியன்னு  தெரியாமா காமெடி பன்ற 
  • நானும் எத்தன நாலா தான் அடுத்தவன் காதல ஊட்டி  வளக்குறது நானும் டூயட் பாடனும் 

மொத்தத்தில் இன்று போய் நாளை வா படம் பார்க்கதாவர்களுக்கு இந்த படம் கலக்கலோ கலக்கல் .பார்த்தவர்களுக்கோ கலக்கல் .சிரித்து சிரித்து வயிறு புண்ணாவது நிச்சயம்





Tuesday, January 8, 2013

விஸ்வரூபம் DTH இல் முதலில் ஒளிபரப்பானால் பதிவுலகத்தின் நிலை ?



விஸ்வரூபம்  திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பே DTH  இல் ஒளிபரப்பானால் பதிவுலகில் என்ன நடக்கும் என்பது பற்றிய எனது கற்பனை இந்த பதிவு


இவை அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே .நடக்க வாய்ப்பு உண்டு !

  • DTH இல் திரைப்படம் வெளியான  அன்றே  இரவு 12 மணிவாக்கில் விஸ்வரூபம் வீழ்ந்ததா ?,விஸ்வரூபம் -எழுச்சி  என்று பல திரை விமர்சனங்கள் போட்டி போட்டி கொண்டு பதிவுலகில் வெளியிடப்படலாம் 
  • அடுத்தநாள்  திரையரங்கில் பார்த்து அரக்க பறக்க விமர்சனம் போடுவோர்கள் இனி டிவியில் பார்த்து எழுத உந்த படலாம் .ஏன்என்றால் அதற்க்கு முன்பே  விமர்சனங்கள் வந்து தமிழ் மணம் திரட்டியில் திரைமணத்தில் சூடான இடுகைகளில் வந்து விடும் 
  • பிரபல பதிவர்களும் என்ன செய்ய DTH இல் பார்த்து விமர்சனத்தை முதலில் போடுவோம் என நினைக்க வாய்ப்பு உண்டு .
  • விமர்சனம் எழுதும் பல பதிவர்களின் தூக்கம் கெட வாய்ப்பு உண்டு .படம் முடிந்து விமர்சனத்தை டைப் செய்து பதிவாக போட வேண்டுமே 
  • விமர்சனம் படிக்க காத்து கிடக்கும் பதிவர்கள் காலையிலே இணையத்தை நோண்டினால் ஏகபட்ட விமர்சனங்கள் திரைமணம் திரட்டியை  ஆக்கிரமித்து கொள்ள வாய்ப்பு உண்டு:
 UPDATE:விஸ்வரூபம் வெளியீடு 25 தேதிக்கு  தள்ளி போகிறது .திரையரங்கில் தான் முதலில் வெளியிடப்படும் .DTH இல் மறுநாள் வெளியிடபடும்

உங்கள் பார்வைக்கு :