Monday, January 21, 2013

அனுஷ்காவும் அலெக்ஸ் பாண்டியனும் ...



ரஜினி நடித்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரில் ஓர் படம்   நல்லா தான்  இருக்கும் என்று படம் பார்க்க போனால் வருவியா வருவியா என குத்து குத்தி வெளியே அனுப்புகிறார்கள் .சிவகாசி ,வேட்டைக்காரன் ரக விஜய்க்கு போட்டியாக உருவெடுத்து வருகிறார் கார்த்தி

கதை 
மாற்றான் படத்தில் தடை செய்யப்பட்ட மருந்து போல இங்கேயும் ..அந்த மருந்தை அனுமதிக்க முதல்வரின் கையெழுத்துக்காக அவளது மகளை கடத்த கடத்தல் காரன் கார்த்தியிடம் ஒப்படைக்கிறார்கள் .

அவரும் சில இரவுகள் அனுஷ்காவை பத்திரமாக வைக்கிறார் காட்டில் ஓர் வீட்டில் .திரும்ப ஒப்படைக்க போகும் போது அனுஷ்கா அந்த மருந்தை பற்றி சொல்ல நல்லவனாகி  முதல்வரிடம் அனுஷ்காவை எப்படி ஒப்படைக்கிறார் என்பது தான் கதை 

அனுஷ்கா :

  • அனுஷ்கா ரசிகர்களுக்கு கண்கொள்ள காட்சியாக கார்த்தி அனுஷ்காவை கடத்தும் காட்சி இருந்திருக்கும் .
  • அனுஷ்கா கார்த்தியின் சட்டையை போட்டு இருக்கும் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்து.
  • ஏகபட்ட உயரத்தில் இருந்து விழும் கார்த்திக்கு ஒன்றும் ஆகவில்லை .அனுஷ்கா மட்டும் மூலிகை சிகிச்சை எடுக்கிறார் 
  • அனுஷ்கா- கார்த்தி காதல் காட்சிகள் அவ்வளவாக இல்லை 
ALEX PANDIYAN-KARTHI

அலப்பரைகள் :

  • தூரத்து சொந்தம் என்று கார்த்தியை சந்தானத்தின் அம்மா அறிமுகபடுத்தியும் அவரது தங்கைகளை வைத்து காமெடி என்ற பெயரில் செய்யும் கூத்து ரொம்ப அதிகம் 
  • கார்த்தி யார் என்பதை  தெரிந்த சந்தானத்தின் அம்மாவே மகள்களை கார்த்திக்கு எண்ணை தேய்த்து விட வைக்கும் இடம் எல்லாம் ஐயோ ரகம் 
  • எண்ணை தேய்த்து விடுவதும் காம விளையாட்டுகள் விளையாடுவதுமாக போகிறது காமெடி காம நெடி

மொத்தத்தில் நேரம் போக வில்லை எனில் அனுஷ்கா ரசிகர்  எனில் இப்படத்தை பார்க்க முற்படலாம் 

உங்கள் பார்வைக்கு :