Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Tuesday, December 6, 2016

அம்மா -ஓர் கவிதாஞ்சலி !..




என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

தைரியத்தின் மறுபெயர்
தமிழகத்தின் திருஉயிர்
சமரசம் செய்து கொள்ளா
தலைவி நீ !


அரசியல் வெற்றிடம் இங்கே
அதை நிரப்புவார் எங்கே ?
எதிர்த்தோர் மனதிலும் 
ஓர் இடம் அனைவர் 
நெஞ்சிலும் நீங்கா இடம்!

என் ஆத்ம தலைவன் 
நீர் இல்லை 
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!

-முதல்வரின் மறைவிற்கு எனது கவிதாஞ்சலி


Wednesday, November 24, 2010

என் தந்தை


**கருத்துகள் அதிகம்
பகிர்ந்ததில்லை...
அளவளாவி அதிகம்
பேசியதில்லை ...

**அதிகமாய் என்னை
கண்டித்ததில்லை ...
கஷ்ட காலத்தில் கூட
படிப்பே பிரதானம் என
வேலைக்கு அனுப்பியதில்லை ...

**சிறு கடின வேலையில்
கூட என்னை
ஈடுபடுத்தியது இல்லை..
என் தந்தை...

**வேறுபட்ட தந்தை களுள்
என் தந்தையும் ஒருவர் ...

Monday, November 22, 2010

தந்தை


எப்போதும் என்னிடம்
கண்டிப்பாய் கறாராய்
இறுக்கமாய் இருக்கும்
தந்தை இனிதாய் பேசினார்
அரசு வேலை கிடைத்த சமயம்..
இப்போது நினைக்கிறேன்
அவர் அப்படி நடந்து கொண்டதே
நான் நன்றாக வர வேண்டும்
என்பதால் தானோ என்று...

Saturday, October 23, 2010

கலவை பெண்


பூக்களை
கொஞ்சம் கிள்ளி எடுத்து
புன்னகை
கொஞ்சம் செய்து கலந்து
உறவுகளை
கொஞ்சம் உயிரில் சுமந்து
செய்த உன்னத கலவை
பெண்

Friday, October 22, 2010

பெண்


கண்கள் அவளின் கவிமொழி
நாணம் அவளின் அடையாளம்
நளினம் அவளின் நற்குணம்
ஒழுக்கம் அவளின் உயிர்
அவள் தான் பெண் !

Wednesday, September 8, 2010