Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday, May 26, 2013

சச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா ?


சூதாட்டம் ,MATCH  FIXING ,SPOT FIXING  என பல விசயங்கள் அடிபட்டாலும் 
இறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .
  • மும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 125/9 எடுத்து தோல்வி யடைந்தது .தோணி மட்டும் 63 ரன்கள் எடுத்தார் 
  • இதுவரை நடந்த ஆறு சீசன் களில் 5 இல் இறுதி போட்டியில் இருந்திருக்கிறது சென்னை .அதில் இரண்டை  வென்று உள்ளது 
  • எப்போதும் சிறந்த OPENING இன்னிங்க்ஸ் தரும் ஹஸ்ஸி 0 எடுத்து வெளியேறவும் சென்னை அவ்வளவு தான் என முடிவாயிற்று .யார் கண்டார் இந்த போட்டியிலும் SPOT FIXING  நடந்ததோ என்னவோ ?
  • சச்சின் தனது கடைசி IPL இது என நேற்று தெரிவித்தார் .இது மிக சரியான முடிவு .ஆனால் டிராவிட் IPL இல் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது 
  • சில புள்ளி விவரங்கள் கீழே :


கொசுறு :

முன்னதாக விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை வென்று விடும் என்ற நினைப்பில் நான் EDIT செய்த போட்டோ கீழே .அதில் 3TITLES என்பதற்கு பதில் 2 TITLES என்று மாற்றினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் .

பதிவின் தலைப்பு கூட இப்படி வைத்து இருந்தேன் IPL 7:சென்னை VS ? கணிப்பு இப்போதே !

CSK WON IPL 6



Friday, May 17, 2013

"சூது கவ்வியதா" ஸ்ரீசாந்த் ?


இறுதி ஓவர்
என்ன நடக்கும்
தேவை 20 ரன்
இருப்பதோ ஆறு பந்துகள்



கடைசி பந்து வரை
பரபரப்பு

நகம் கடித்து
இருக்கை  நுனியில் வந்து
உற்சாகமாய்
நம் வேலை விட்டு
தொலை காட்சி முன்
அமர்ந்தால்!
தோல்வி அடைந்த   அணி
வீரர்கள் செய்தது
மேட்ச் பிக்சிங்
என்று தெரிய வந்தால்?

 நம்மை
முட்டாள் அல்லவா
ஆக்குகிறார்கள்
இவர்கள் !
பெர்னாட்சா கூற்று
சரி தானோ !


ஹர்பஜனுடன் ஆக்ரோஷம்
களத்தில் ஆக்ரோசம்
எல்லாமே நடிப்பா-இல்லை
அதுவும் சூதா
ஸ்ரீசாந்த்

செய்தி :ஸ்பாட்  பிக்சிங் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீஷாந்த் உட்பட 3 பேர் கைது

Sunday, April 21, 2013

இணையத்தில் பணம் சம்பாதிக்க சில PTC தளங்கள் -பாகம் 1 ..


இணையத்தில் பல தளங்களில்  உலவி வருவோம் .அதில் கொஞ்சம் பணமும் கிடைத்தால் மகிழ்வோம் தானே .தமிழ் தளங்களுக்கு கூகுள் ADSENSE  
 கிடைப்பது  அரிது.அதற்கு இந்த தளங்களில் கொஞ்சம் நேரம் செலவிட்டால் போதும் எளிதாக பணம் பெறலாம்


PAID TO CLICK(PTC) தளங்கள்

இணைய தளங்களில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும் .அதற்கு பல தளங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றில்  மட்டுமே சிறப்பாக விரைவாக பணம்  ஈட்ட முடியும் .

கீழேயுள்ள தளங்கள் அனைத்தும் சிறப்பான தளங்கள்


CLICKFAIR 


இத்தளத்தின் சிறப்பு இதன் குறைந்த பட்ச CASHOUT :1$ மட்டுமே .இதிலும் விளம்பரங்கள்  மூலம் 0.02$ வரை தினமும் பெற முடியும் 

தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள் 

*****************************************************************************JOBEGO 

இத்தளத்தில் நீங்கள் இணைவதற்கு SIGNUP  BONUS ஆக 0.05$ தரப்படுகிறது .விளம்பரங்கள் கிளிக் செய்வதன் மூலம் 0.03$ தினமும் பெற முடியும் .பல எளிதான offer களும் உள்ளது

குறைந்த பட்ச CASHOUT : 5$ 

தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள் 


****************************************************************************

DOLLARS INCOME 



எனக்கு தெரிந்த வரை 0.001$ அளவில்  அதிக அளவு விளம்பரங்களை தருவது இத்தளம் மட்டுமே .உங்களுக்கே போரடிக்கும் வரையில் கிளிக்கி கொண்டே இருக்கலாம்

அது மட்டும் அல்லாமல் FACEBOOK LIKE ,TWITTER LIKE என பல எளிதான JOBS இங்கே குவிந்து கிடக்கிறது .தளத்தில் இணைந்த  உடன் உங்கள் ரேங்க் NEWBIE என இருக்கும் .அதை AMAETURE ரேங்க் கிற்கு உங்கள் PROFILE UPDATE செய்வதன் மூலம் மாற்றி கொள்ளுங்கள் .

குறைந்த பட்ச CASHOUT :15$ (AMAETUR ரேங்க் ),
                                                  NEWBIE (20$)

தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள் 
*********************************************************************************

மேலும் பல தளங்கள் விரைவில் அடுத்த பாகமாக ..

தொடர்புடைய பதிவு:

இணையம் மூலம் தினமும் 5$ சம்பாதிக்க  




Friday, March 29, 2013

புனிதமாக்கும் புனிதரே !



எமக்காய் 
எம் பாவங்களுக்காய் 
உயிர் நீத்தீர் இன்று ..

எமக்காய் 
எவ்வளவோ
செய்தீர் 
செய்கிறிரீர் செய்வீர்
உமக்காய் நான் என்ன
செய்தேன்? ஒன்றுமில்லை

உன் ஆலயம் வர
என்னால் முடியாமல்
போனது ஏன் ?
சோம்பலா? 
நேரம் இல்லாமையா?
அறியாமையா? எக்காரணம்
கொண்டும் என்னை நியாய படுத்த
முடியாது -நீர் என்னை
 தவிர்க்கவா
செய்தீர் நான் உம்மை தரிசிக்க
வராததற்கு..

இனியாவது 
உம்மை பின் தொடர
முயல்கிறேன்
முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் 
நான் உம் பிள்ளை!

புனித வெள்ளியில் 
என்னை 
புனிதமாக்கும் புனிதரே !

Wednesday, March 20, 2013

கலைஞரின் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர்

KALAINGAR

"பிரதமர் வாஜ்பய்க்கும், அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி 

அம்மையாருக்கும் செய்த துரோகத்தையும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 

விடுதுலைப் புலிகளுக்கும் செய்த துரோகத்தையும், சுயநல அரசியலின் 

காரணமாகத் தற்போது தமிழக மக்களுக்கே தொடர்ந்து செய்து வரும் 

துரோகத்தையும் மறைப்பதற்காக: மற்றவர்களைப் பார்த்து, "துரோகம், 

துரோகம்" என்று கூக்குரலிடும் உத்தியை, இங்குள்ள தமிழர்களும், ஈழத்

 தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்; உலகத் தமிழர்களும் ஒருபோதும் ஒப்புக் 

கொள்ளமாட்டார்கள் !"


மேற்கண்ட status யை கலைஞர் போட்டது தான் தாமதம்.துள்ளி எழுந்த facebook  பயனர்கள் அளித்த கருத்துக்கள் கலைஞர்  ஏன் இதனை போட்டோம் என நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.ஒரு சில கருத்துக்கள் படு கேவலமாக இருக்கிறது .கொச்சை வார்தைகளிளிலும் ஒருமையில் விழித்தும் பல ..இதையெல்லாம் படித்து கொண்டு கலைஞர் இருக்க வேண்டுமா facebook  இல் என்பது தான் என் எண்ணம் 

கலைஞர் இதை எல்லாம் டைப் செய்து எழுதுகிறாரா என தெரிய வில்லை ஆனால் அதிலும் நம் அரசியல் பதிவர் ஒருவர் குற்றம் கண்டு கலைஞரின் தமிழுக்கே ஆப்பு வைத்திருக்கிறார் .அது வேறு யாரும் அல்ல அன்பர் ரகீம் கஸாலி தான் 


அவரின் கருத்தும் நாகரிகமான சில கருத்துக்களும் கீழே 

ஹீம் கஸாலி விடுதலைப்புலியா? விடுதுலைப்புலியா?



ச. சரவணன் கரட்டு கரட்டு நீ மிரட்டு மிரட்டு





Thiru Thambi ஐயா நல்லா பாருங்க,

அது உங்க உருவம்தான் கண்ணாடிய பாத்து பேசிட்டிருக்கீங்க ;


Muthu Gopalakrishnan வாக்குமூலம் போல இருக்கு 



Karthi Keyan இன்றைக்கும் துரோகம் என்றால் தமிழர்கள் மத்தியில் 

யாருடைய பெயர் ஞாபகம் வருகிறது என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தி 

பார்த்துவிடலாமே...

Blackstartamilan Eevera இதே அம்மையார் அவர்கள் போர் என்றால் உயிரிழப்பு

 சாதாரணம் என்றவர் தானே

Nambikai Raj நீர் எம்.ஜி.ஆருக்கும் வைகோவுக்கும் செய்தது என்ன 

பெரியவரே? தியாகமா? துரோகமா?

க. தமிழன் உங்களையே நீங்கள் திட்டிக்கிறிங்க நினைச்சி அப்படியே ஷாக் 

ஆயிட்டேன்.. ஜெயலலிதா என்ற இடத்தில் கருணாநிதி என்றும் சேர்த்து 

எழுதுங்க.

Jeyaraajz Defending Champion thalaivare enna vajbai patti solreenge.........?! adutha

 kuttanikku thundu podureengalooooooooooo?!!!!!!!1


Senthil Pandi vajbai inga enga vandharu? oh adutha kootaniku adi poda arambichacha?


மேலும் பல படிக்க இங்கு இணையுங்கள் 

உங்கள் பார்வைக்கு :

Tuesday, March 19, 2013

"கலைஞரின்" FACEBOOK STATUS யும் அதிரடி கருத்துக்களும் ....


KALAINGAR IN FACEBOOK

"தற்போது எனது இல்லத்தில் "என்று மேற்கண்ட படத்துடன் கலைஞர் 

போட்டிருந்த facebook  STATUS க்கு ரசிக கலாமணிகள் கழுவி ஊத்திய கருத்துக்களில் 

சிறந்தவை கீழே 


Kurinchi Venthan Thirumbavum Muthaleruntha.....

Jeyakanth Jekan அடுத்த நாடகத்துக்கான ஒத்திகையா ?

Gowri Shankarதயவுசெய்து....தயவுசெய்து.....தயவுசெய்து...
சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்துவிடாதீர்கள்.


கத்தார் வன்னியர்சங்கம் தனி ஈழம் கிடைத்துவிட்டது.ஏய் நாதஸ் இரண்டு வாழ பழம் வாங்கிட்டு வா .


Johnson Kennedy கூட்டனி தொடர்ந்தால் ஒரு இடம் வெல்ல முடியாது...தலைவா நல்ல முடிவெடுங்க .........


Anantha Saithanyan kollakaranga ellam onna irukanga......



Subash Kumar Nee. Adikira mathiri nadikanum nan azhurathu mathiri nadipeen. Makkal nampiduvaanga


Jeevan Raveendra எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன்.

2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை ,

3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது .


4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் .

5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் .



இன்னும் பல கருத்துக்கள் படிக்க இங்கு கிளிக்குங்கள்




UPDATE:கூட்டணியில் இருந்து கலைஞர் விலகினார் 

Friday, March 1, 2013

"தற்கொலை" தீர்வாகுமா ?

suicide
யார் உனக்கு உரிமை
தந்தது தற்கொலை செய்ய?

தன் குருதி சிந்தி
இன்னுயிர் நடுங்கி
உன்னை  பெற்றடுத்த தாய்க்கு
மீண்டும் அவள் உயிர் நடுங்க
உன் உயிர் நீக்கினாயே ஏன் ?



கோழைகள்  தான்
தற்கொலை செய்வர்
நீ வீரன் அல்லவா நினைத்தேன்
நான்

உனக்குள்ள துக்கங்கள்
உன் சாவினாலே போகும்
என நினைத்தாய் நீ !
உன் குடும்பம் படபோகும்
அல்லல் நினைத்து
பார்த்தாயா அந்த முடிவை
எடுக்கும் போது ..

அரசு உத்தியோகதிற்காய்
அல்லும் பகலும்
உழைத்தாய்-வெற்றி கொண்டாய்
இப்போது உன் உழைப்பெல்லாம்
வீண் ஆக்கி விட்டாயே

எனக்கு தற்கொலை
செய்பவர்களை பிடிப்பதில்லை
இப்போது நீயும் ....


-எனது பள்ளி பருவ நண்பன் ஒருவன் இன்று தன் உயிரை தானே போக்கினான்.அவனுக்கு எனது அஞ்சலிகள்.இறந்தவர்களை விமர்சிக்க கூடாது எனினும் என்னால் முடிய வில்லை.


                                                                                -கனத்த இதயத்துடன் -
                                                                                        பிரேம்குமார் .சி 

உங்கள் பார்வைக்கு :


Wednesday, September 5, 2012

கடவுளை பின்னுக்கு தள்ளியவர்கள் ..

TEACHER'S DAY

மாதா பிதா
குரு அதன் பின்னர் தானே
தெய்வம்
அத்தனை மகிமை
அல்லவா உங்களுக்கு ..



கடவுளையே
பின்னுக்கு தள்ளியவர்கள்
அல்லவா நீங்கள் !

எல்லா  தொழிலுக்கும்
அச்சாணி நீங்கள் தானே !
அவர்களை உருவாக்குவது
 நீங்கள் தானே !

உங்களை போற்றுகிறோம்
நினைவு கூறுகிறோம்
இந்நாளில் ..


                               இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Sunday, August 12, 2012

3 -இது தனுஷ் படம் அல்ல ..

3,THREE

தனுஷின் 3 படம் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பிறகு விமர்சனமா என என்ன வேண்டாம் .இது வேறு!
 இத்தளம் ஆரம்பித்து நேற்றோடு இரண்டு  வருடங்கள் முடிந்தது இன்று மூன்றாவது வருட தொடக்கம்.இந்த நேரத்தில் என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த   நன்றிகள்
  • எனது  தளத்தின் மூல தனம் கவிதைகள் தான் என்றாலும் தற்போது நான் ரசித்த திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் எனக்கு தெரிந்த பிளாக்கர் டிப்ஸ் ஆகியவற்றை பதிந்து வருகிறேன் 
  • கடந்த 2 வருடங்களில் நான் எழுதிய கவிதை பதிவுகளை எல்லாம் சர்வ சாதாரணமாக திரைப்படம் தொலைக்காட்சி   சம்பந்தமான பதிவுகள் ஒரு மணி நேரத்தில்  முறியடித்து விடுகின்றன .அதற்கு காரணமான தமிழ்மணத்தின் திரைமணம் திரட்டிக்கு எனது நன்றிகள் .TAMIL10 மற்றும் ஏனைய அனைத்து திரட்டிகளுக்கும் நன்றிகள்
  • 100000+ பக்க பார்வைகளை கடக்க 2 வருடங்கள் பிடித்திருக்கிறது .முதல் வருடத்தை விட இரண்டாம் வருடம் அதிக பார்வைகள் பெற்று இருக்கிறது இத்தளம் 

      • திரைமணம் தளத்தின் SIDEBAR  இல் சின்னத்திரை பகுதியில்  எனது தொலைக்காட்சி சம்பந்தமான பதிவுகள் அதிகம் இருப்பதை காணலாம்.
        Tamil Blogs Traffic Ranking





      • 12/08/2012 நிலவரப்படி உலக அளவில் தளத்தின்  தரத்தை நிர்ணயிக்கும் ALEXA  வில் 3,27,115 வது  இடத் தில்  இருப்பதும் தமிழ் தளங்களுக்கான  தமிழ்மணத்தில்  81 வது இடத்தில்  இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி  அழிக்க கூடியவை
      • ஒரே ஒரு மனக்குறை என்னிடத்தில் உண்டு .எனது தளத்தில் அதிகம் பார்வையிட பட்ட பத்து பதிவுகளில் ஒரு கவிதை பதிவு கூட வர வில்லையே என்ற குறை இருக்கிறது .அதை போக்க முயற்சி செய்வேன் .நன்றி அன்பர்களே 

      அதிகம் பார்வையிட பட்ட முதல் 10 பதிவுகள்( தளம் ஆரம்பித்த நாள் முதல் ..)

      Sunday, August 5, 2012

      நட்பு ஒன்று போதுமே ....

      FREINDSHIP  DAY
      காதல்
      கைவிடும்போதும்
      மன  உளைச்சலில்
      காலன் துரத்திடும் போதும்
      நட்பு ஓன்று போதுமே
      நம் உயிர் காத்திட ..



      இயந்திர
      இதயங்கள்
      இளைப்பாறி
      கொள்வது
      இனிய நட்பு
      கிடைத்தால் தானே !

      நட்பு ஒன்று போதுமே!
      உறவுகள்
      கைவிடும் போது..
      துன்பத்தில்
      தோள் கொடுப்பதும்
      இன்பத்தில்
      இணைந்திருப்பதும் தானே
      நட்பு ,,


      Wednesday, August 1, 2012

      எனது தளத்தில் உங்கள் தளம் ..

      கருத்தாளர் -ஜூலை

      நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு

      நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டி  அதிக பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தின் முகப்பில்   ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன் . 
       கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 12 பதிவுகள்  என்னால் வெளியிடப்பட்டது .அதில் என்னை நெகிழ வைத்த  கருத்துக்கள் கீழே


      உயிரை உருவி போட்டவளே  என்ற பதிவிற்கு அன்பர் அளித்த கருத்து கீழே
      Chella Thana said...
      இந்த காலத்துல ஆண்களை விட பெண்களுக்கு தான் துணிவு கூட !! நம்ம கண்ண மட்டும் இல்ல காது, மூக்கு, வாய் எல்லாத்தையும் பார்த்து சொல்லுவாங்க..... கவிதை மிகவும் அருமை நண்பா.. ஏமாற்றப்பட்ட ஆண்களோட மனக்குமுறல 4 வரியில நச்சுனு சொல்லிருக்கிங்க , நன்றி .....
      ********************************************************************************
       என்ற கவிதைக்கு அன்பர் அளித்த உண்மையான கருத்து கீழே

      இக்பால் செல்வன் said...
      //மரணம் பிடிக்கிறது எனக்கு நீ என்னிடம் பேசாத நாட்களில் .. // பெண்களும் இதைச் சொல்லுவார்கள்.. ஆனால் செய்ய மாட்டார்கள். ஆண்கள் சொல்வதில்லை பல தடவைகளில் செய்து விடுவதுண்டு .****************************************************************************
       என்ற பதிவு நான் ஒன்றே முக்கால் வருடம் எழுதிய பதிவுகள் பக்க பார்வைகளை எல்லாம் இரண்டே நாட்களில் உடைத்தெறிந்த பதிவு .எனது மொத்த பதிவுகளில் இது தான் இப்பொழுது முதல் இடம் பக்க பார்வைகளில் ..இந்த பதிவிற்கு அன்பர் அளித்த கருத்து கீழே 
      இக்பால் செல்வன் said...
      சூர்யா இந்த நிகழ்ச்சியை நடத்தவில்லை . நன்றாக நடிப்பது தெரிகின்றது .. கேள்விகள் சுலபமாக இருந்தும் பலருக்கு பதில் தெரியாதது ஏன் எனவும் சிந்தித்ததுண்டு .. ஒரு வேளை பதற்றமோ என்னவோ. சன் டிவி எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சுங்க. மனுசன் பார்ப்பானா அதை ?
       *******************************************************************************
      என்ற கவிதைக்கு பலர் பலவித கருத்து அளித்து என்னை நெகிழ வைத்தனர் .சில தர்ம சங்கட கருத்துகளும் கீழே அரசனின் கருத்து
      அரசன் சே said...
      உங்களுக்கு திருமணம் முடிந்து சில வருடங்கள் கழித்து இந்த பதிவை நான் உங்க வீட்டம்மாவுக்கு பரிசளிக்க முடிவு செய்துள்ளேன் .. உங்க கருத்து என்ன பாஸ் ... மாறுபட்ட சிந்தனை .. கவிதை அருமை ... என் வாழ்த்துக்கள் அன்பரே
      ***********************************************************************
        நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS
       என்ற பதிவிற்கு அன்பரின் கருத்து கீழே
       
       திண்டுக்கல் தனபாலன் said...
      இப்படி தான் பேச வேண்டும் அல்லது இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று இருவரும் பணம் வாங்கிய பின்... அது போல் செய்யவில்லை என்றால் எப்படி...? SIIMA AWARDS: 2011 WINNERS - நல்ல தொகுப்பு... நன்றி நண்பா... .  ************************************************************************
      என்ற  பதிவிற்கு அன்பரின் கருத்தும் எனது பதிலும்
      மயிலன் said...
      என் உயிர் உன் அடிவயிற்றில் உள்ளிரிருந்து கொஞ்சம் உதைக்க வேண்டும்..எப்பொழுது நடக்குமடி அது..? சும்மா... தலைப்ப பாத்ததும் கொஞ்சம் ஃபீல் ஆயிட்டேன்... நல்லாருக்கு பிரேம்...:)  
      @ மயிலன்//போங்க பாஸ் கவிதைக்கு 18+ வைக்க வைச்சுடீவீங்க போல
      ***********************************************************************************
       மேற்கண்ட கருத்துகளை தவிர இன்னும் பல கருத்துக்கள் இருக்கின்றன  பதிவின் நீளம் கருதி  அவை குறிப்பிட பட வில்லை.பல பதிவுகளுக்கு வந்து சிறப்பான கருத்துகளை அளித்த அன்பர் கோடங்கி  தளத்தின் உரிமையாளர் " இக்பால் செல்வன் " அவர்களுக்கு ஜூலை மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுத்து இருக்கிறேன் நன்றி

      முந்தைய கருத்தாளர்கள்  
      மே  மாதம்        :சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  வரலாற்று சுவடுகள்  
      ஜூன் மாதம்    :சிறந்த கருத்தாளார் பெற்ற தளம்  """  என் ராஜபாட்டை"  ராஜா 
      இந்த கருத்தாளர் சிறப்பு  வழங்கிய மே மாதம் முதல் எனது பதிவுகளுக்கு TEMPLATE கருத்துக்கள் அளிக்காமல் தரமான கருத்துக்கள் அன்பர்களால் வழங்குவது அதிகரித்திருப்பதை காண்கிறேன் .அந்த வகையில் அளப்பரிய மகிழ்ச்சி எனக்கு நன்றி

      உங்கள்  பார்வைக்கு :