இறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .
- மும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 125/9 எடுத்து தோல்வி யடைந்தது .தோணி மட்டும் 63 ரன்கள் எடுத்தார்
- இதுவரை நடந்த ஆறு சீசன் களில் 5 இல் இறுதி போட்டியில் இருந்திருக்கிறது சென்னை .அதில் இரண்டை வென்று உள்ளது
- எப்போதும் சிறந்த OPENING இன்னிங்க்ஸ் தரும் ஹஸ்ஸி 0 எடுத்து வெளியேறவும் சென்னை அவ்வளவு தான் என முடிவாயிற்று .யார் கண்டார் இந்த போட்டியிலும் SPOT FIXING நடந்ததோ என்னவோ ?
- சச்சின் தனது கடைசி IPL இது என நேற்று தெரிவித்தார் .இது மிக சரியான முடிவு .ஆனால் டிராவிட் IPL இல் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது
- சில புள்ளி விவரங்கள் கீழே :
கொசுறு :
முன்னதாக விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை வென்று விடும் என்ற நினைப்பில் நான் EDIT செய்த போட்டோ கீழே .அதில் 3TITLES என்பதற்கு பதில் 2 TITLES என்று மாற்றினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் .
பதிவின் தலைப்பு கூட இப்படி வைத்து இருந்தேன் IPL 7:சென்னை VS ? கணிப்பு இப்போதே !